மேலும் அறிய

பொன்முடிக்கு செக்? 13 ஆண்டு கால செம்மண் குவாரி வழக்கில் ஏப்ரல் 2-ல் அதிரடி தீர்ப்பு!

பொன்முடி எம்.எல்.ஏ. மீதான செம்மண் குவாரி வழக்கில் அடுத்த மாதம் 2-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படுமென விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது

விழுப்புரம் : பொன்முடி எம்.எல்.ஏ. மீதான செம்மண் குவாரி வழக்கில் அடுத்த மாதம் 2-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படுமென விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

செம்மண் குவாரி வழக்கு

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சிக்காலத்தின்போது அளவுக்கு அதிகமாக அதாவது அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுக்கப்பட்டது. 

இதன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ., அவரது மகன் பொன்.கவுதமசிகாமணி, ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், சதானந்தம், கோதகுமார், கோபிநாதன், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

57 சாட்சிகளின் விசாரணை நிறைவு

இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளின் விசாரணை கடந்த அக்டோபர் மாதம் முடிவடைந்தது. இதில் மொத்தம் சேர்க்கப்பட்ட 57 சாட்சிகளில் 33 பேர் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜமகேந்திரன், சதானந்தம், கோபிநாதன் ஆகிய 3 பேர் மட்டும் நேரில் ஆஜராகினர். பொன்முடி எம்.எல்.ஏ., அவரது மகன் பொன்.கவுதமசிகாமணி, ஜெயச்சந்திரன், கோதகுமார் ஆகிய 4 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் சார்பில் தி.மு.க. வக்கீல்கள் ஆஜராகி, பொன்முடி எம்.எல்.ஏ. உள்பட 4 பேரும் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்தனர். மேலும் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், தங்கள் தரப்பில் சில சாட்சிகளை விசாரிக்க வேண்டுமென அனுமதி கேட்டதன் அடிப்படையில் 4 சாட்சிகள் விசாரித்து முடிக்கப்பட்டனர்.

வாதம்

இவ்வழக்கு விசாரணைக்காக அரசு தரப்பில் 182 ஆவணங்களும், 1 சான்றுப்பொருளும் தாக்கல் செய்யப்பட்டது. அதுபோல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பல் 26 ஆவணங்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் ஏற்கனவே வக்கீல் கார்த்திகேயன் ஆஜராகி, சாட்சிகள் மற்றும் ஆவணங்கள் குறித்து வாதிட்ட நிலையில் அதற்கு பொன்முடி எம்.எல்.ஏ. உள்ளிட்ட 7 பேரின் தரப்பு வக்கீல்கள் ஆஜராகி பதில் வாதம் செய்து முடித்தனர். இதையடுத்து நேற்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் செய்து முடித்த வாதத்திற்கு அரசு தரப்பு வக்கீல் கார்த்திகேயன் பதில் வாதம் செய்தார்.

அடுத்த மாதம் 2-ந் தேதி இறுதி தீர்ப்பு

இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மணிமொழி, இதன் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந் தேதிக்கு ஒத்திவைத்ததுடன் அன்றைய தினம் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் அறிவித்தார். கடந்த 13 ஆண்டுகளாக நடந்து வரும் இவ்வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது தி.மு.க. கட்சியினர் மற்றும் அரசியல் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை: சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக அரசுப் பேருந்து - நெகிழ்ச்சியில் கிராம மக்கள்!
மயிலாடுதுறை: சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக அரசுப் பேருந்து - நெகிழ்ச்சியில் கிராம மக்கள்!
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில்.. நிகிதா நகை தொலைந்தது தொடர்பாக சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கு புஸ்ஸானது !
மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில்.. நிகிதா நகை தொலைந்தது தொடர்பாக சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கு புஸ்ஸானது !
TN Election Rewind: ஜெயலலிதாவையே தோற்கடித்த பர்கூர்.. அதிமுகவை அலறவிட்ட 1996 சட்டமன்ற தேர்தல்!
TN Election Rewind: ஜெயலலிதாவையே தோற்கடித்த பர்கூர்.. அதிமுகவை அலறவிட்ட 1996 சட்டமன்ற தேர்தல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா
ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
TVK Candidate List: 2 தொகுதிகளில் விஜய் போட்டியா? தவெக தலைவர்கள் களமிறங்கும் இடங்கள் இதானா?
LPG Gas Bengaluru: கேஸ் தட்டுப்பாடு: முடங்கும் உணவகங்கள்! கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழகத்திற்கும் ஆபத்தா?
LPG Gas Bengaluru: கேஸ் தட்டுப்பாடு: முடங்கும் உணவகங்கள்! கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழகத்திற்கும் ஆபத்தா?
Bike Taxi Ban: ஓலா, உபர், ராபிடோ பைக் டாக்சி சேவைக்கு தடை! அரசின் அதிரடி முடிவு! காரணம் என்ன?
Bike Taxi Ban: ஓலா, உபர், ராபிடோ பைக் டாக்சி சேவைக்கு தடை! அரசின் அதிரடி முடிவு! காரணம் என்ன?
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
BJP on TVK Vijay: கூட்டணிக்கு வரும் தவெக? ஓபிஎஸ் முடிவு சாபமா? குழாயடி சண்டை, கூட்டணி மாற்றம்: பாஜக பரபர!
Sanju Samson:
Sanju Samson: "இது ஒரு கனவு!" வலிகளே எனது பலம்.. உலகக்கோப்பை வெற்றிக்குப் பின் சஞ்சு சாம்சன் உருக்கம்
Kadaga Rasi Sani Peyarchi Palan: கடக ராசிக்காரர்களே! சனிப்பெயர்ச்சியால் உங்கள் வாழ்க்கையில் இதெல்லாம் நடக்கப்போது!
Kadaga Rasi Sani Peyarchi Palan: கடக ராசிக்காரர்களே! சனிப்பெயர்ச்சியால் உங்கள் வாழ்க்கையில் இதெல்லாம் நடக்கப்போது!
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
BJP on TVK Vijay: விஜய்க்கு தங்கம் விலை தெரியுமா? டிவியை உடைத்தவர் இலவசங்கள் வாக்குறுதி தருவதேன்?- பொளந்த பாஜக!
BJP on TVK Vijay: விஜய்க்கு தங்கம் விலை தெரியுமா? டிவியை உடைத்தவர் இலவசங்கள் வாக்குறுதி தருவதேன்?- பொளந்த பாஜக!
Embed widget