மேலும் அறிய
Advertisement
ADMK : கடைசி நேரத்தில் தடை கோரினால் எப்படி..? : அதிமுக மாநாட்டிற்கு தடைகோரிய மனு தள்ளுபடி
நான்கு மாதத்திற்கு முன் மாநாட்டிற்கு அறிவிப்பு செய்து விட்டனர். ஆனால் கடைசி நேரத்தில் தடைக்கோரினால் எவ்வாறு முடியும் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
அ.தி.மு.க., மாநாடு நிகழ்ச்சி முழுவதும் எவ்வித வெடிபொருட்களோ பட்டாசுகளோ வெடிக்க மாட்டோம் என உறுதிமொழி வழங்கி உள்ள வழங்கி உள்ளோம் என அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜயின் விஜயநாராயணன் தகவல் தெரிவித்தார்.
மதுரையில் அ.தி.மு.க., மாநாடு நடத்த தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. நான்கு மாதத்திற்கு முன் மாநாடு நடத்துவதாக அறிவித்துள்ளனர், கடைசி நேரத்தில் தடை கூறினால் எவ்வாறு முடியும் - நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
— arunchinna (@arunreporter92) August 18, 2023
| #madurai | @abpnadu | @abplive | @abp | pic.twitter.com/qxtBaVc7DR
காரைக்குடியைச் சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு மதுரை மாவட்டம் பெருங்குடி கருப்பசாமி கோயிலின் எதிர்புறத்தில் ஆகஸ்ட்-20ல் அ.தி.மு.க., சார்பில் மாநாடு நடக்கிறது. மாநாடு நடக்கவுள்ள இடம் மதுரை விமான நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது. தினசரி அதிகளவில் விமானங்கள் வந்து செல்கின்றன. தரையிறங்கும் போது மிகவும் தாழ்வான பகுதியில் தான் விமானங்கள் பறக்கும் விமான நிலையத்தை சுற்றிய பகுதிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட பகுதியாகவே உள்ளன.
மத்திய தொழில்படை பாதுகாப்பு மற்றும் போலீசாரின் கண்காணிப்பில் உள்ளது. சுமார் 15 லட்சம் பேர் மாநாட்டிற்கு வருவதாக அ.தி.மு.க.வினர் கூறுகின்றனர். அன்றைய தினம் விமானங்கள் தரையிறங்குவதில் இடையூறு ஏற்படக் கூடும் மாநாட்டில் பங்கேற்போர் பட்டாசுகள் வெடிக்கும் போது வானில் உயரத்திற்கு பறந்து வெடிக்கும் போது அசம்பாவிதம் ஏற்பட்டால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். பட்டாசுகள் வெடிக்க தடை விதித்து பாதுகாக்கப்பட்ட பகுதியாக விமான போக்குவரத்து துறையால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் மாநாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது விமான நிலையத்தை சுற்றி 20 கி.மீ தொலைவிற்கு உரிய அனுமதியின்றி குறிப்பிட்ட அளவு உயரத்திற்கு மேல் விளம்பர பலகைகள் கூட வைக்க முடியாது. மாநாட்டிற்கு அனுமதி கோரும் முன் மதுரை விமான நிலைய அதிகாரியிடம் உரிய தடையின்மை சான்று பெறவில்லை. மாநாட்டிற்கு வருவோரால் பெருமளவு போக்குவரத்து இடையூறு ஏற்படும். எனவே ஆக 20ல் பெருங்குடியில் அதிமுக மாநாடு நடத்த தடை விதிக்க வேண்டும் மாநாடு நடத்த அனுமதிக்ககூடாது என சம்பந்தப்பட்டோருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்சுந்தர் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
நான்கு மாதத்திற்கு முன் மாநாட்டிற்கு அறிவிப்பு செய்து விட்டனர். ஆனால் கடைசி நேரத்தில் தடைக்கோரினால் எவ்வாறு முடியும் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - CM Stalin: மீனவர்களுக்காக இதுவரை திமுக செய்தது என்ன? - ராமநாதபுரத்தில் பட்டியலை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion