மேலும் அறிய

CM Stalin: மீனவர்களுக்காக இதுவரை திமுக செய்தது என்ன? - ராமநாதபுரத்தில் பட்டியலை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்

ராமேஸ்வரத்தில் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் முதலமைச்சர் முக ஸ்டாலின், மீனவர்களுக்காக இதுவரை திமுக என்னென்ன செய்தது என்பது குறித்து உரையாற்றினார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவர் நல மாநாடு நடைபெறுகிறது. 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். ராமநாதபுரம் சென்ற முதலமைச்சருக்கு அமைச்சர் ராஜ கண்ணப்பன், மாவட்ட திமுக செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தென்மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது.  அதில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தொண்டர்கள், நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரைகள் வழங்கினார். 

தொடர்ந்து நேற்று மாலை இராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் வந்த முதலமைச்சர் ஸ்டாலின், இன்று காலை மண்டபத்தில் நடக்கும் மீனவர்கள் நல மாநாட்டில் கலந்துக்கொண்டுள்ளார். இதில் மீனவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பிரமாண்ட பந்தல் போடப்பட்டு மிகப்பெரிய ஏற்பாடுகள் மாநாட்டுக்காக செய்யப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சர் வருகையையொட்டி அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 
 
இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய முதலமைச்சர், “ மீன்பிடி தொழிலில் தமிழ்நாடு 5வது பெரிய மாநிலமாக இருக்கிறது. அந்த அளவிற்கு தமிழ்நாட்டின் மீனவர்கள் தங்களது பங்கையாற்றி வருகிறார்கள். 1076 கி.மீ கொண்ட நீளமான கடற்கரையை கொண்ட மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டை உலகத்தோடு இணைத்தது கடல். கடல் ஆழமானது மட்டுமல்ல. வளமானது. மீனவர்கள் நலவாரியம், மீன்பிடி தடைக்கால நிவாரணம், மீனவர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் கலைஞர் ஆட்சியில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. மீன்பிடி தடைக்கால நிவாரணம் 6000 -மாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மீன்வள இளங்கலை படிப்பில் மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு 20% உயர்த்தப்பட்டுள்ளது. காணாமல் போகும் மீனவர்களின் குடும்பங்களுக்கு தினசரி உதவித்தொகையை 350 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டார். 
 
மேலும், “ இயற்கை மரணம் அடையும் (மீனவர் நலவாரிய உறிப்பினர்) மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கடல் அரிப்பு மற்றும் படகு பாதுக்காப்பை மேம்படுத்தும் வகையில், தூண்டில் வலை அமைப்பட்டுள்ளது. கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரண திட்டம் செய்லபடுத்தப்பட்டு வருகிறது. 2.07 லட்சம் மீனவர்களுக்கு மாநில அரசின் பங்களிப்பு நிவாரணமாக 62 கோடி 19 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கடல் மீனவ மகளிர் சேமிப்பு திட்டம் நடைமுறையில் உள்ளது. இதன் மூலம் 2 லட்சம் மீனவ பெண்கள் பயன்பெறுகிறார்கள். நாட்டு படகுகளுக்கு இயந்திரம் வாங்க 40 % மாணியம் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கடற்பாசி வளர்ப்பை ஊக்குவிக்க 127 கேடி 71 லட்சம் ரூபாய் மதிப்பில் பன்னோக்கு கடற்பாசி பூங்கா அமைக்கப்படுகிறது. இறால் வளர்ப்பை ஊக்குவிக்க 100 ஏக்கர் பரப்பளவில் புதிய இறால் வளர்ப்பு பண்ணை அமைக்க  14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீனவ சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் கடல்சார் படிப்புகளுக்காக அரசு 88  பேருக்கு 27 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கபட்டுள்ளது ” என பட்டியலிட்டு கூறினார். 
 
தொடர்ந்து பேசிய அவர், “ கடலுக்குள் செல்லும் மீனவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு இல்லாமல் இருக்கிறது. தொடர்ந்து தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனை வன்மையாக கண்டிக்கிறேன். இலங்கையில் தமிழர் உரிமை போராட்டம் எப்போது தொடங்கியதோ, அதிலிருந்து தற்போது வரை தாக்குதல்கள் நீடித்து வருகிறது. பாஜக ஆட்சியில் தான் அடக்குமுறைகள் அதிகமாகி வருகிறது. லட்சம் ரூபாய் மதிப்பிலான படகுகளை சேதப்படுத்தி வருகின்றனர். 2014 தேர்தலுக்கு முன்னர் பாம்பனின் கடல் தாமரை என்ற போராட்டம் நடத்தப்பட்டது. அதில் மறைந்த சுஷ்மா சுவராஜ் கலந்துக்கொண்டார். அப்போது பாஜக ஆட்சிக்கு வந்தால் கச்சதீவு மீட்கப்படும் என தெரிவித்தார், ஆனால் தற்போது வரை அது நடக்கவில்லை. 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிதமர் மோடி பேசுகையில், தமிழ்நாடு மீனவர்களின் இந்த நிலைக்கு காங்கிரஸ் அரசு தான் காரணம் என குறிப்பிட்டார். பாஜக ஆட்சியில் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லையா? ஒரு மீனவர்கள் கூட உயிரிழக்க மாட்டார் என கூறினார், 2017 ஆம் ஆண்டு தங்கச்சிமடம் மீனவர் பிரிட்டோ கொலை செய்யப்பட்டார். இந்த தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் அரசு தரப்பில் கடிதம் எழுதிய பின் தான் மத்திய அரசு ஏதோ ஒரு நடவடிக்கை எடுக்கிறது. 
 
2020 ஆம் ஆண்டு முதல் 48 முறை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். 619 தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 83 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் 604 மீனவர்கள் மற்றும் 16 படகுகளை மட்டுமே இலங்கை அரசு விடுவித்துள்ளது. இந்த ஆண்டும் 74 மீனவர்களை இலங்கை அரசு கைது செய்துள்ளது. 59 பேர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆட்சியிலும் தாக்குதல் நடைபெறுகிறது என்றால் மோடி அரசு பலவீனமாக உள்ளது என்று அர்த்தம். மீனவர்களின் பிரச்சனைக்கான ஒரே தீர்வு கச்சத்தீவை மீட்பது தான். அந்த கோரிக்கையை தமிழ்நாடு அரசு எப்போதும் முன்வைத்து வருகிறது. ஆனால் இதற்கு காரணம் திமுக ஆட்சி தான் என வரலாறு தெரியாத சிலர் உளறி வருகிறார்கள். கச்சதீவை தரக்கூடாது என சொன்னதே கலைஞர் தான், அதனை அவர்தான் வலியுறுத்தினார்” என குறிப்பிட்டு பேசினார். 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget