மேலும் அறிய

ஆட்டோ ஓட்டுநர் படுகொலை.. நண்பர்கள் மது தகராறில் கைது - சிவகங்கை எஸ்.பி வெளியிட்ட செய்தி என்ன?

நண்பனை கொலை செய்த இருவர் கைது – மதுபோதையில் ஏற்பட்ட தகராறு விபரீதம். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட பத்திரிக்கை செய்தி வெளியீடு.

ஆட்டோ டிரைவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையை செய்த இரண்டு ஆட்ட ஓட்டுனர்களை காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட பத்திரிக்கை செய்தி, வெளியீடு.

நண்பனை கொலை செய்த இருவர் கைது – மதுபோதையில் ஏற்பட்ட தகராறு விபரீதம்
 
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அனந்தபுரம் பைபாஸ் அருகே நண்பர்கள் இடையே ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் பத்திரிக்கை மூலம் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டதாவது...,” மானாமதுரை அனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த செல்லம் என்பவரது வீட்டின் மாடியில், அவரது மகன் சதீஷ்குமார் மற்றும் அவரது நண்பர்களான குருந்தங்குளத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், இடைக்காட்டூரைச் சேர்ந்த முனீஸ்வரன் ஆகியோர் நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், முனீஸ்வரன் சதீஷ்குமாரின் மனைவியைப் பற்றி தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து முனீஸ்வரனை தாக்கியுள்ளனர். அதில் மது பாட்டிலை உடைத்து முனீஸ்வரனின் கழுத்தை அறுத்ததால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை 11 மணி அளவில் செல்லம் என்பவரது வீட்டின் மாடியில் ஒருவர் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, மானாமதுரை காவல் ஆய்வாளர் குமரவேல் பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
இரண்டு ஆட்ட ஓட்டுனர்களை காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.
 
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் குற்றவாளிகளான சதீஷ்குமார் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்ந்து மேலதிகாரிகள் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது என்று சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ டிரைவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையை செய்த இரண்டு ஆட்ட ஓட்டுனர்களை காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது குறிப்பிடதக்கது.

 

தலைப்பு செய்திகள்

முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
நகை கொள்ளை ; திருமணம் மீறிய உறவு !! கள்ளக் காதலனுடன் சேர்ந்து மனைவியே அரங்கேற்றிய சம்பவம்
நகை கொள்ளை ; திருமணம் மீறிய உறவு !! கள்ளக் காதலனுடன் சேர்ந்து மனைவியே அரங்கேற்றிய சம்பவம்
"திருமணம் மீறிய உறவு " தட்டிக் கேட்டால் கொலை மிரட்டல் !! குழந்தைகளுக்கு சூடு - நடந்தது என்ன ?
பிறந்த வீட்டுக்கு சென்ற தாய்.. இரண்டரை வயது மகன் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை.. தந்தையின் கொடூரம்!
பிறந்த வீட்டுக்கு சென்ற தாய்.. இரண்டரை வயது மகன் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை.. தந்தையின் கொடூரம்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
Tesla Roadster: நிஜமாவே பறக்கும் கார்..! நொடிக்கு 100KM வேகம் - ரோட்ஸ்டரை இறக்கி வாயடைக்கச் செய்த டெஸ்லா
நிஜமாவே பறக்கும் கார்..! நொடிக்கு 100KM வேகம் - ரோட்ஸ்டரை இறக்கி வாயடைக்கச் செய்த டெஸ்லா
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
மஹிந்திராவின் முதல் CNG கார்.. எந்தெந்த வேரியண்டில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?
மஹிந்திராவின் முதல் CNG கார்.. எந்தெந்த வேரியண்டில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?
TN Govt: ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
Jailer 2 Collection: அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
Embed widget