மேலும் அறிய

T20 WC 2026 Champion: சாம்பியன் இந்தியா! 3வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று வரலாறு! நாடே ஹாப்பி!

T20 WC IND vs NZ Final: அகமதாபாத்தில் நடந்த டி20 உலக்கோப்பையில் இந்தியா நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது.

டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில்  உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்தது. இந்த தொடரில் ஆதிக்கம் செலுத்திய நியூசிலாந்து அணியுடன் சொந்த மண் ரசிகர்கள் ஆதரவுடன் பலமிகுந்த இந்தியா களமிறங்கியது.

256 ரன்கள் டார்கெட்:


T20 WC 2026 Champion: சாம்பியன் இந்தியா! 3வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று வரலாறு! நாடே ஹாப்பி!

டாஸ் வென்ற நியூசிலாந்தை பேட்டிங்கிற்கு அழைத்தது. சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷான், ஷிவம் துபே அதிரடியால் இந்தியா நியூசிலாந்திற்கு 256 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதுவரை டி20 உலகக்கோப்பையில் இந்தியா நியூசிலாந்து அணியிடம் வென்றதே இல்லை என்ற வரலாற்றை தக்கவைப்பதற்காக நியூசிலாந்து அணியின் டிம் செஃய்பெர்ட் - பின் ஆலன் களமிறங்கினர். 

செஃய்பெர்ட் அதிரடி அரைசதம்:

அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை சேசிங்கில் துவம்சம் செய்ததால் இவர்கள் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. கடந்த போட்டியில் சதம் விளாசிய ஆலன் 9 ரன்களில் அக்ஷர் படேல் பந்தில் அவுட்டாக, அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா 1 ரன்னில் அவுட்டானார்.  ஆனால், மறுமுனையில் டிம் செஃய்பெர்ட் அதிரடி காட்டினார். அவர் பவுண்டரியும், சிக்ஸரும் விளாச ரன் ரேட் ஓவருக்கு 10 ரன்கள் வீதம் சென்றது.

பிலிப்ஸ் 5 ரன்னில் அவுட்டாக, இந்திய அணியை அச்சுறுத்திய டிம் செஃய்பெர்ட் 23 பந்துகளில் அரைசதம் விளாசினார். அவர் வருண் சக்கரவர்த்தி பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சிக்க அதை இஷான் கிஷான் அபாரமாக கேட்ச் பிடித்தார். அவர் ஆட்டமிழந்த சில நிமிடங்களில் மார்க் சாப்மன் 3 ரன்னில் அவுட்டாக 72 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து.

போராடிய சான்ட்னர்:

சான்ட்னர் - டேரில் மிட்செல் ஜோடி 6வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்தாலும் கடைசி 49 பந்துகளில் நியூசிலாந்து வெற்றிக்கு 144 ரன்கள் தேவைப்பட்டது. இதனால், கேப்டன் சான்ட்னர் அதிரடி காட்டத் தொடங்கினார். ஆனாலும், ஓவருக்கு 18 ரன்கள் நியூசிலாந்திற்குத் தேவைப்பட்டது. மிட்செல் அடித்த பந்தை இஷான் கிஷன் கேட்ச் பிடித்தாலும் எல்லைக்கோட்டை மிதித்ததால் சிக்ஸர் ஆக, சான்ட்னர் கொடுத்த எளிதான கேட்ச்சை பாண்ட்யா தவறவிட்டார்.

அதிரடி பேட்ஸ்மேன் டேரில் மிட்செல் அக்ஷர் படேல் சுழலில் 11 பந்துகளில் 2 சிக்ஸருடன் 17 ரன்கள் எடுத்து அவுட்டானார். நியூசிலாந்தின் கடைசி நம்பிக்கையாக சான்ட்னர் - ஜிம்மி நீஷம் ஜோடி சேர்ந்தனர். 43 பந்துகளில் 132 ரன்கள் அவர்களுக்குத் தேவைப்பட்டது.

உறுதியான வெற்றி:

நீஷம் - சான்ட்னர் ஜோடி அதிரடி காட்ட முயற்சித்தாலும் இந்திய பந்துவீச்சாளர்கள் அவர்களுக்கு நெருக்கடி அளித்தனர். அவர்களின் தோல்வி உறுதியான நிலையிலும் அவர்கள் போராடினர். ஆனால், இந்தியா சவால் அளிக்கும் பந்துவீசியதால் மிகவும் தடுமாறினார். அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை சேசிங்கில் நிலைகுலைய வைத்த நியூசிலாந்து அணி இந்திய பந்துவீச்சில் நிலைகுலைந்தது.

ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம் 7 பந்துகளில் 8 ரன்களில் பும்ரா பந்தில் போல்டாக, பும்ரா வீசிய அடுத்த பந்திலே ஹென்றி போல்டானார்.

சாம்பியன் இந்தியா:

பும்ராவின் ஹாட்ரிக் வாய்ப்பை பெர்குசன் தடுத்தார். தோல்வி உறுதியான நிலையில் எஞ்சியுள்ள ஓவர்களில் தோல்வி வித்தியாசத்தை குறைக்க சான்ட்னர் போராடினார். இதனால், 18வது ஓவரில் 150 ரன்களை நியூசிலாந்து கடந்தது. நியூசிலாந்து அணிக்காக தனி ஆளாக போராடிய கேப்டன் சான்ட்னர் 35 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 42 ரன்கள் எடுத்து பும்ரா பந்தில் போல்டானார். கடைசியில் அபிஷேக் சர்மா பந்தில் கடைசி விக்கெட்டாக ஜேக்கப் டஃபி அவுட்டாக இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

புது வரலாறு:

இந்திய அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக பும்ரா திகழ்ந்தார். அவர் 4 ஓவர்களில் 4 விக்கெட்டை வீழ்த்தி 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இந்த வெற்றி மூலம் இந்திய அணி டி20 உலகக்கோப்பையை 3வது முறையாக வென்று புதிய வரலாறு படைத்துள்ளது. மேலும், டி20 உலகக்கோப்பையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய அணி மீண்டும் கோப்பையை கைப்பற்றுவது இதுவே முதன்முறை என்ற புதிய வரலாற்றையும் இந்தியா படைத்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Sanju Samson: புடிக்கலன்னா கெளம்புங்க, டீமையும், பேரையும் கெடுக்காதிங்க சஞ்சு - பதவிக்காக CSK-வில் கலகமா?
Sanju Samson: புடிக்கலன்னா கெளம்புங்க, டீமையும், பேரையும் கெடுக்காதிங்க சஞ்சு - பதவிக்காக CSK-வில் கலகமா?
IPL 2026 CSK vs RCB: ஆர்சிபி - சிஎஸ்கே போட்டி! பெங்களூரில் மெட்ரோ சேவை நள்ளிரவு வரை நீட்டிப்பு!
IPL 2026 CSK vs RCB: ஆர்சிபி - சிஎஸ்கே போட்டி! பெங்களூரில் மெட்ரோ சேவை நள்ளிரவு வரை நீட்டிப்பு!
Sameer Rizvi: பொடியன் இல்ல ரிஸ்வி..! டெல்லி அணியின் கில்லி! மும்பையை முடிச்சுவிட்ட 22 வயது இளைஞன்!
Sameer Rizvi: பொடியன் இல்ல ரிஸ்வி..! டெல்லி அணியின் கில்லி! மும்பையை முடிச்சுவிட்ட 22 வயது இளைஞன்!
FASTag பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி: ஏப்ரல் 1 முதல் கட்டண உயர்வு - முழு விபரம் உள்ளே!
FASTag பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி: ஏப்ரல் 1 முதல் கட்டண உயர்வு - முழு விபரம் உள்ளே!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
TN Election 2026: ஓரங்கட்டப்பட்ட பிராமின்கள் - ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK - 35 ஆண்டுகளில் முதல்முறை
TN Election 2026: ஓரங்கட்டப்பட்ட பிராமின்கள் - ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK - 35 ஆண்டுகளில் முதல்முறை
Ranipet Dmk Candidate : சீட்டுக்காக அடம்பிடிக்கும் காந்தி.. வழியில்லாமல் விட்டுக்கொடுத்த மகன்- ராணிப்பேட்டை திமுகவில் நடப்பது என்ன.?
சீட்டுக்காக அடம்பிடிக்கும் காந்தி.. வழியில்லாமல் விட்டுக்கொடுத்த மகன்- ராணிப்பேட்டை திமுகவில் நடப்பது என்ன.?
TN Election 2026: பெரம்பூரையே கண்டுக்காத விஜய்? களத்தில் காணாமல் போகும் TVK? வேகமெடுக்கும் எதிர்க்கட்சி
TN Election 2026: பெரம்பூரையே கண்டுக்காத விஜய்? களத்தில் காணாமல் போகும் TVK? வேகமெடுக்கும் எதிர்க்கட்சி
Trump Iran War Ceasefire: அமெரிக்கா-ஈரான் இடையே 45 நாட்கள் போர் நிறுத்தம்.? கடைசி நிமிட பேச்சுவார்த்தை; நடந்தா நல்லது தான்.!
அமெரிக்கா-ஈரான் இடையே 45 நாட்கள் போர் நிறுத்தம்.? கடைசி நிமிட பேச்சுவார்த்தை; நடந்தா நல்லது தான்.!
Hormuz Indian LPG Ship: இந்தியாவால மட்டும் தான் முடியும்.! போர் பதற்றத்துக்கு நடுவே ஹார்முஸை அசால்ட்டாக கடந்த LPG கப்பல்
இந்தியாவால மட்டும் தான் முடியும்.! போர் பதற்றத்துக்கு நடுவே ஹார்முஸை அசால்ட்டாக கடந்த LPG கப்பல்
Gold Silver Rates Today: வாரத்தின் முதல் நாளே ஜாக்பாட்.! தங்கத்தின் விலை சரசரவென சரிந்தது.! வெள்ளி விலை என்ன தெரியுமா.?
வாரத்தின் முதல் நாளே ஜாக்பாட்.! தங்கத்தின் விலை சரசரவென சரிந்தது.! வெள்ளி விலை என்ன தெரியுமா.?
iPhone 17 Huge Offer: இப்படி ஒரு ஆஃபர் கிடைக்காது, விட்ராதீங்க.! ரூ.45,000-க்கும் குறைவாக ஐபோன் 17; வாங்குவது எப்படி.?
இப்படி ஒரு ஆஃபர் கிடைக்காது, விட்ராதீங்க.! ரூ.45,000-க்கும் குறைவாக ஐபோன் 17; வாங்குவது எப்படி.?
Embed widget