மேலும் அறிய
Advertisement
மதுரை எய்ம்ஸ் கட்டிட பணிகளுக்கான டெண்டர் வெளியீடு; 33 மாதத்தில் பணிகளை முடிக்க ஒப்பந்தம்
2026ஆம் ஆண்டிற்குள் பணிகள் முடியும் என கூறிவரும் நிலையில் கட்டிட பணிகள் எப்போதும் தொடங்கும் என்பதற்கான கேள்விக்கான விடை எப்போது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடிக்கல் நாட்டப்பட்டு நான்கரை ஆண்டுகளுக்கு பின்பு மதுரை எய்ம்ஸ் கட்டிட பணிகளுக்கான டெண்டர் வெளியீடு. 33 மாதங்களில் இரு கட்டங்களாக பணிகளை முடிக்க அறிவிப்பு. ஆயுர்வேத சிகிச்சைக்கான படுக்கைகளுடன் கூடிய கட்டிட பணியும் அறிவிப்பு. 2026ஆம் ஆண்டிலாவது வருமா எய்ம்ஸ்?
மதுரை எய்ம்ஸ் கட்டுமானம்: டெண்டர் கோரியது மத்திய அரசுhttps://t.co/wupaoCzH82 | #AIIMS #MaduraiAIIMS #Tamilnadu pic.twitter.com/zL8HUnjVV6
— ABP Nadu (@abpnadu) August 17, 2023
தென் மாநிலங்களின் மருத்துவ தேவையை பூர்த்திசெய்யும் வகையில் மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் 224.24 ஏக்கர் பரப்பளவில் 1,264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 750 படுக்கை வசதிகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 27 பிரதமர் மோடி நேரில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டிவைத்தார். அந்த விழாவில் 45 மாதங்களில் கட்டுமான பணிகள் நிறைவடையும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் கட்டிட பணிகள் எதுவும் தொடங்கப்படாத காரணத்தினால் மிகப்பெரிய அரசியல் பேச்சாக மாற்றப்பட்டு தமிழக அரசியல் தொடங்கி பாராளுமன்றம் வரை பேசுபொருளாகி விவாதிக்கப்பட்டது.
அடிக்கல் நாட்டப்பட்டு 3 வருடங்கள் கடந்த நிலையில் சுற்றுச்சுவர் மற்றும் நிர்வாக பணிகளுக்கான அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மருத்துவப் படிப்பிற்கான மாணவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவகல்லூரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் நான்கரை ஆண்டுகளுக்கு பின்னர் ஜைகா நிறுவனத்திடம் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான நிதி கிடைக்கப்பட்டுள்ளதால் 222. 47 ஏக்கரில் மதுரை எய்ம்ஸ் கட்டிட பணிகளுக்கான ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இரு கட்டங்களாக பணிகள் நடைபெறும் எனவும், 33 மாதத்தில் பணிகளை முடிப்பதற்கான ஒப்பந்த காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
870 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை சிகிச்சை வளாகம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சைக்கான 30 படுக்கைகளுடன் கூடிய அறை, 150 எம்.பி.பி.எஸ் மாணாக்கர்கள் செவிலியர்கள் பயிலும் வகையிலான வகுப்பறைகள், அவர்களுக்கான தங்கும் விடுதிகள், ஆடிட்டோரியம், உணவகம, மாணாக்ககர்களுக்கான தங்கு விடுதிகள், இயக்குநருக்கான தங்கும் இல்லம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், உணவகம், பணியாளர்களுக்கான குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டிட பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது.
கட்டிட பணிகளுக்கான முன் தகுதி ஆவணங்களை Executive Director, All India Institute of Medical Sciences Madurai, Government TB Hospital Campus, Thoppur, Austinpalti Post, Madurai-625008, Tamil Nadu, India from 11.00 A.M. to 4.00 P.M (Name of person in charge: (i) The Superintending Engineer, Mobile: +91 98880 99545, Email: semadurai45@gmail.com and (ii) The Executive Engineer, Mobile: +91 98944 11974, Email: eecivil.aiimsmadurai@gmail.com ) என்ற முகவரிக்கு அனுப்பவும். ஒப்பந்த பணிகளுக்கான விண்ணப்பங்களை www.dgmarket.com, http://www.pmssy-mohfw.nic.in and https://jipmer.edu.in/alims- madural. என்ற இணைய தள பக்கத்தில் டவுண்லோட் செய்துகொள்ளலாம் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கட்டிட பணிகளுக்கான ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் 2026ஆம் ஆண்டிற்குள் பணிகள் முடியும் என கூறிவரும் நிலையில் கட்டிட பணிகள் எப்போதும் தொடங்கும் என்பதற்கான கேள்விக்கான விடை எப்போது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Vaigai Express Train: வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 46வது பிறந்தநாள்; மதுரையில் கேக் வெட்டி கொண்டாடிய ரயில் பயணிகள்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
கல்வி
வணிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion