மேலும் அறிய
T20 World Cup 2026 Final: மொத்த ரெக்கார்டும் நம்ம கிட்ட..டி20 கிரிக்கெட்டின் அசைக்க முடியாத ராஜா.. இந்தியா சாதனை மழை!
T20 World Cup 2026 Final Record: டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வரலாறு படைத்த நிலையில் இந்திய அணி முறியடித்த மற்றும் உருவாக்கிய சாதனைகளின் முழு விவரத்தை காணலாம்

சாதனை படைத்த இந்தியா
Source : IANS
டி20 உலகக்கோப்பை போட்டியை வென்றதன் மூலம் இந்திய அணி வென்றதன் அணி பல சாதனைகளை தன் வசப்படுத்தி உள்ளது. அதன் தொகுப்பை கீழே காணாலாம்.
டி20 உலகக்கோப்பையை வென்ற இந்தியா:
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது, இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் குவித்தது. இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி 19 ஓவர்களில் 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியுற்றது.
இந்திய அணி படைத்த சாதனைகள்
- இந்தியா, இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய மூன்று அணிகளும் தலா இரண்டு முறை கோப்பையை வென்று இருந்தன, தற்போது இந்திய அணி மூன்றாவது முறையாக வென்று புதிய சாதனையை படைத்துள்ளது
- டி20 உலகக்கோப்பை வரலாற்றில் போட்டியை நடத்தும் அணி இதுவரை கோப்பையை வெல்லாமல் இருந்த நிலையில் இந்திய அணி தற்போது அச்சாதனையை படைத்துள்ளது.
- கடந்த ஒன்பது உலகக்கோப்பை தொடர்களில், எந்த ஒரு நாடும் தனது சொந்த மண்ணில் கோப்பையை வென்றதில்லை, ஆனால் தற்போது சொந்த மண்ணில் டி20 உலகக்கோப்பையை வென்ற முதல் நாடு என்ற சாதனையை படைத்துள்ளது.
- இந்தியா ஏற்கனவே 2011-ல் ஒருநாள் உலகக்கோப்பையை (ODI) சொந்த மண்ணில் வென்றுள்ளது, தற்போது டி20 கோப்பையையும் வென்று ஒருநாள் மற்றும் டி20 என இரண்டு உலகக்கோப்பைகளையும் தனது சொந்த மண்ணில் வென்ற உலகின் முதல் நாடு சாதனை படைத்தது
- இன்றைய வெற்றியின் மூலம் இந்தியாவின் மொத்த உலகக்கோப்பைகளின் (ODI + T20) எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஆசியாவிலேயே அதிக உலகக்கோப்பைகளை வென்ற அணியாக இந்திய மாறியுள்ளது.
- சஞ்சு சாம்சன் இறுதிப்போட்டியில் நியூசிலாந்திற்கு எதிராக 89 ரன்கள் (46 பந்துகள்) விளாசியதன் மூலம், டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை சாம்சன் படைத்துள்ளார். இதற்கு முன்னாள் மேற்கிந்திய அணி வீரர் மார்லன் சாமுவேல்ஸ் 85* ரன்கள் எடுத்ததே சாதனையை இருந்தது.
- இந்த உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் மொத்தம் 321 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம், ஒரு டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் (319 ரன்கள், 2014) சாதனையை முறியடித்துள்ளார்.
- டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை சாம்சன் படைத்துள்ளார். இத்தொடரில் அவர் மொத்தம் 24 சிக்ஸர்களை விளாசியுள்ளார் (முந்தைய சாதனை: ரோகித் சர்மா - 15 சிக்ஸர்கள்).
- டி20 உலகக்கோப்பையில் அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டி என இரண்டு முக்கிய நாக்-அவுட் போட்டிகளிலும் அரைசதம் அடித்த உலகின் 3-வது வீரர் என்ற பெருமையை சாம்சன் பெற்றார் (ஷாகித் அப்ரிடி மற்றும் விராட் கோலிக்கு பிறகு)
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
கிரிக்கெட்
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion



















