தேனி: தடகள பயிற்சிக்கான வீரர்களுக்கு பயிற்சி அளிக்க வீரர், வீராங்கனையினர் ஆள் சேர்ப்பு
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் 'விளையாடு இந்தியா' திட்ட நிதியுதவியில் தொடக்கநிலை தடகள பயிற்சிக்கான 'விளையாடு இந்தியா மாவட்ட மையம்' தேனி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அமைக்கப்பட உள்ளது.
தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் 'விளையாடு இந்தியா' திட்ட நிதியுதவியில் தொடக்கநிலை தடகள பயிற்சிக்கான 'விளையாடு இந்தியா மாவட்ட மையம்' தேனி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அமைக்கப்பட உள்ளது.
இந்த மையத்தில் 30 முதல் 100 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தினமும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த மையத்தில் பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட, தேசிய அளவில் சாதனைபடைத்த 40 வயதுக்குட்பட்ட தடகள வீரர், வீராங்கனை ஒருவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். இதற்கு தகுதியான நபர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க அடுத்த மாதம் ஜனவரி 3-ம்ந் தேதி இறுதி நாள் ஆகும். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் அறியலாம். அல்லது மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்