மேலும் அறிய

தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் பணிச்சுமை: மத்திய அரசு கைகழுவுதா? ஆய்வுகள் இல்லையா? அதிர்ச்சி தரும் பதில்!

ஆய்வுகள் நடத்துவதே தனது வேலை அல்ல என்று ஒன்றிய தொழிலாளர் நல அமைச்சகம் கை கழுவுவது கண்டனத்திற்குரியது.  - மதுரை எம்.பி சு.வெங்கடேசன்.

தகவல் தொழில் நுட்ப ஊழியர் பணிச்சுமை, மன அழுத்தம் ஒன்றிய அரசிடம் ஆய்வுகள் இல்லை. - மதுரை எம்.பி காட்டம்.
 
மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்ட செய்தி குறிப்பு
 
மதுரை எம்.பி கேள்விக்கு நாடாளுமன்றத்தில் அமைச்சர் பதில்...,” தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவைகளில் பணி புரியும் ஊழியர்களின் பணிச் சுமை, மன அழுத்தம், உடல் நலம், தொழில்சார் சுகாதாரப் பிரச்னைகள் குறித்து அரசாங்கம் தரவுகளைக் கொண்டுள்ளதா? விரிவான ஆய்வு ஏதும் மேற்கொண்டதா? இல்லையெனில் சுகாதார நிபுணர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழிலாளர் நல அமைச்சக அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து பரிந்துரைகளை பெறுமா? என்ற கேள்வியை (எண் 38/1.12.2025) நாடாளுமன்றத்தில் எழுப்பி இருந்தேன். 
 
அமைச்சர் பதில்
 
அதற்கு பதிலளித்த தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை இணை அமைச்சர் சுஷ்ரி ஷோபா கரந்தலாஜே, தொழிலாளர் நலன் குறித்த அதிகாரம் ஒத்திசைவு பட்டியலில் வருவதால் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகள் இரண்டின் வரம்பிற்குள்ளும் வந்து விடுகிறது; மத்திய தொழில் உறவுகள் ஒன்றிய தொழில் துறை உறவுகளுக்கான அதிகாரிகள் வாயிலாகவும், மாநில அளவில் மாநில தொழிலாளர் துறையாலும் உறுதி செய்யப்படுகின்றன; பெரும்பாலும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சேவைகள் "கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின்" கீழே வருவதால் அதற்கு பொருத்தமான அரசு, மாநில அரசு ஆகும்; ஒன்றிய அரசு தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்டம் 2020 ஐ இயற்றியுள்ளது; இது தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் உள்பட அனைத்து துறைகளிலும் பணிபுரியும் தொழிலாளர்களின் உடல் நலம், பாதுகாப்பு, நல்வாழ்வை உறுதி செய்கிற நோக்கம் கொண்டது என்று பதிலளித்துள்ளார். 
 
கை கழுவலாமா ஒன்றிய அரசு?
 
அமைச்சரின் பதில் பற்றி சு வெங்கடேசன் எம்பி கருத்து தெரிவிக்கையில், "ஒன்றிய தொழிலாளர் நல அமைச்சரின் பதில் வினோதமாக இருக்கிறது. தொழிலாளர் நல சட்டங்களை திருத்தும் போது இவர்களுக்கு கூட்டாட்சி பற்றியோ, மாநில அரசுகளின் கருத்துக்களுக்கு செவி மடுக்க வேண்டும் என்றோ அக்கறை இல்லை. ஏதாவது இவர்களால் பதில் சொல்ல முடியாத கேள்வியை எழுப்பினால் மட்டும் ஒத்திசைவு பட்டியல், மாநில அரசின் வரம்பிற்கு உட்பட்டது என்று பதில் சொல்லி தப்பித்துக் கொள்கிறார்கள். தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகள் துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் கடும் பணிச் சுமைக்கும், உளவியல் நெருக்கடிகளுக்கும் ஆளாகிறார்கள் என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. 2018 - 22 க்கு இடைப்பட்ட காலத்தில் 27% தற்கொலைகள் சமூகத்தில் அதிகரித்துள்ளன; சாமானியர்கள் மத்தியில் மட்டுமின்றி உயர்கல்வி பயின்ற தொழில்நுட்ப பணியாளர்கள் மத்தியிலும் தற்கொலைகள் நிகழ்கின்றன; இத்தகைய சூழலில் தகவல் தொழில் நுட்ப துறை மற்றும் அது சார்ந்த சேவைகளில் தொழிலாளர் பணி நிலைமைகள் பற்றிய ஆய்வுகளும் தரவுகளும் தேவை என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆய்வுகள் நடத்துவதே தனது வேலை அல்ல என்று ஒன்றிய தொழிலாளர் நல அமைச்சகம் கை கழுவுவது கண்டனத்திற்குரியது. 
 
ஆனால் இந்த பதிலிலேயே, ஒன்றிய அரசின் தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்டம் 2020 இந்த தொழிலாளர்களுக்கும் பொருந்தும், அவர்களின் நலனை உறுதி செய்யும் என்று அமைச்சர் கூறியுள்ளார். இந்த தொகுப்பு சட்டத்தை கொண்டு வருவதற்கே இந்த தொழில்களின் பிரத்யேக பணி நிலைமைகளை ஆய்வு செய்திருக்க வேண்டாமா? அல்லது எந்த தரவுகள் அடிப்படையில் அது இறுதி செய்யப்பட்டது? தரவுகளே இல்லை என்றால், நிலைமைகள் பற்றிய தகவல்களும் இல்லையென்றால் நீங்கள் உருவாக்கியுள்ள தொகுப்புச் சட்டம் எப்படி அந்த தொழிலில் உள்ள பிரத்தியேக பிரச்சினைகளை கணக்கில் கொண்டிருக்கும்? என்ற கேள்விகளுக்கெல்லாம் அமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார்?”
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

திமுக கூட்டணியில் இருந்து அதிமுகவிற்கு பல்டி அடித்த முக்கிய கட்சி.! தட்டி தூக்கிய எடப்பாடி பழனிசாமி
திமுக கூட்டணியில் இருந்து அதிமுகவிற்கு பல்டி அடித்த முக்கிய கட்சி.! தட்டி தூக்கிய எடப்பாடி பழனிசாமி
ECI TN Voter List: அட்ரா சக்க..! வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கூடுதல் அவகாசம் - தேர்தல் ஆணையம் உத்தரவு
ECI TN Voter List: அட்ரா சக்க..! வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கூடுதல் அவகாசம் - தேர்தல் ஆணையம் உத்தரவு
TTV in AIADMK alliance: முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்.! திடீர் பல்டி அடித்த டிடிவி தினகரன்- பாஜக கூட்டணியில் அமமுக.?
முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்.! திடீர் பல்டி அடித்த டிடிவி தினகரன்- பாஜக கூட்டணியில் அமமுக.?
MG Majestor: வந்தா தெறிக்கனும்..! மேஜிக் காட்டும் மெஜஸ்டர் - எம்ஜியின் ஃப்ளாக்‌ஷீப் மாடல் - விலை, வெளியீடு..
MG Majestor: வந்தா தெறிக்கனும்..! மேஜிக் காட்டும் மெஜஸ்டர் - எம்ஜியின் ஃப்ளாக்‌ஷீப் மாடல் - விலை, வெளியீடு..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?
ஓடும் பேருந்தில் சில்மிஷம்! வீடியோ வெளியிட்ட பெண்! உயிரை மாய்த்த பயணி!
மீண்டும் மீண்டுமா... தெறி ரிலீஸ்-க்கும் சிக்கல்! மோகன் ஜி-யால் புது பஞ்சாயத்து
AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக கூட்டணியில் இருந்து அதிமுகவிற்கு பல்டி அடித்த முக்கிய கட்சி.! தட்டி தூக்கிய எடப்பாடி பழனிசாமி
திமுக கூட்டணியில் இருந்து அதிமுகவிற்கு பல்டி அடித்த முக்கிய கட்சி.! தட்டி தூக்கிய எடப்பாடி பழனிசாமி
ECI TN Voter List: அட்ரா சக்க..! வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கூடுதல் அவகாசம் - தேர்தல் ஆணையம் உத்தரவு
ECI TN Voter List: அட்ரா சக்க..! வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கூடுதல் அவகாசம் - தேர்தல் ஆணையம் உத்தரவு
TTV in AIADMK alliance: முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்.! திடீர் பல்டி அடித்த டிடிவி தினகரன்- பாஜக கூட்டணியில் அமமுக.?
முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்.! திடீர் பல்டி அடித்த டிடிவி தினகரன்- பாஜக கூட்டணியில் அமமுக.?
MG Majestor: வந்தா தெறிக்கனும்..! மேஜிக் காட்டும் மெஜஸ்டர் - எம்ஜியின் ஃப்ளாக்‌ஷீப் மாடல் - விலை, வெளியீடு..
MG Majestor: வந்தா தெறிக்கனும்..! மேஜிக் காட்டும் மெஜஸ்டர் - எம்ஜியின் ஃப்ளாக்‌ஷீப் மாடல் - விலை, வெளியீடு..
Parasakthi: “திரையில் என்னை பார்த்த மாதிரி இருக்கு”.. பராசக்தி பார்த்த சீமான்.. கலகல விமர்சனம்!
Parasakthi: “திரையில் என்னை பார்த்த மாதிரி இருக்கு”.. பராசக்தி பார்த்த சீமான்.. கலகல விமர்சனம்!
TN Roundup: விஜயிடம் சிபிஐ விசாரணை, சென்னையில் போக்குவரத்து நெரிசல், தண்ணி காட்டும் தங்கம் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: விஜயிடம் சிபிஐ விசாரணை, சென்னையில் போக்குவரத்து நெரிசல், தண்ணி காட்டும் தங்கம் - தமிழகத்தில் இதுவரை
TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
Gautam Gambhir: பாஜக தான் காரணம்..! கம்பீர் மீது அட்டாக்.. இவ்ளோ மோசமான சாதனைகளா, கடுப்பில் ரசிகர்கள்
Gautam Gambhir: பாஜக தான் காரணம்..! கம்பீர் மீது அட்டாக்.. இவ்ளோ மோசமான சாதனைகளா, கடுப்பில் ரசிகர்கள்
Embed widget