மேலும் அறிய
மதுரை : ”நீதி கிடைக்கணும்” - விடுமுறைகேட்டு வீடியோ வெளியிட்ட ஏட்டு சஸ்பெண்ட்..!
”தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த விஷயத்தில் தலையிட்டு எனக்கு நீதி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என வீடியோ வெளியிட்ட போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

வீடியோ_வெளிட்ட_ஏட்டு
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு தலைமையில் மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தென் மண்டலத்திற்கு உட்பட்ட மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரிளுடன் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடைபெற்றது. தென் மண்டலத்தில் ரவுடிகள் மோதும் சில சம்பவங்கள் நடந்துவரும் நிலையில் ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் உட்பட கடுமையான சட்டங்கள் மூலம் அவர்களை தண்டிக்கவும், ரவுடிகள் மீது உள்ள பழைய வழக்குகளை துரிதப்படுத்தி, அவர்களுக்கு அதிகபட்ச தண்டணை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்து சிறையிலடைக்கவும் அறிவுரைகளை வழங்கினார்.

மேலும் காவல்துறையினர் குறித்து தகவல்களை திரட்டவும் உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்ட மதுரை ஆயுதப்படை காவலர் தற்காலிக பணி நீக்கம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையைச் சேர்ந்த அப்துல் காதர் இப்ராஹிம் மாநகர ஆயுதப்படையில் போலீஸ் ஏட்டாக பணி செய்துவருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு விடுமுறை நாட்களில் வேலை பார்த்துள்ளார். எனவே அந்த விடுப்பை மற்றொரு நாளில் எடுக்க அனுமதி வேண்டி ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் என்பவரிடம் விண்ணப்பம் செய்துள்ளார்.

அப்போது அவர் போலீஸ் ஏட்டு இப்ராஹீமை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன வேதனை அடைந்தவர், இதுதொடர்பாக ஆயுதப்படை போலீஸ் உதவி கமிஷனர் சோமசுந்தரம் என்பவரிடம் புகார் அளித்தார். அங்கும் இவரது விண்ணப்பம் அடைய நிராகரிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் போலீஸ் ஏட்டு இப்ராஹிம் சமீபத்தில் சமூக வலைதளம் ஒன்றில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் "எனக்கு விடுப்பு வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக நான் மேல் அதிகாரியிடம் கேட்டபோது அவர் என்னை அவமரியாதையாக பேசினார். உதவி கமிஷனர் அலுவலகத்திலும் எனக்கு உரிய நீதி கிடைக்கவில்லை. எனவே தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த விஷயத்தில் தலையிட்டு எனக்கு நீதி கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும்" என அதில் தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மதுரை ஆயுதப்படை போலீஸ் ஏட்டு இப்ராஹிமை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டுள்ளார்.
மதுரை தொடர்பான வேறு செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் ; இலங்கையர்களுக்கு இந்தியா பாஸ்போர்ட்; மூத்த கண்காணிப்பாளர் மீது சிபிஐ வழக்கு பதிவு!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
வணிகம்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
சென்னை





















