தேனி , திண்டுக்கல் மாவட்டங்களில் குறைந்து வரும் கொரோனா தொற்று
தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் இன்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த வாரத்தை பொருத்த வரையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வருகிறது. சென்ற வாரத்தில் தேனி மற்றும் திண்டுக்கல் இரு மாவட்டங்களில் நோய் தொற்றானது தினசரி நூற்றுக்கும் கீழ் இருந்து வந்தது . தற்போது நோய் தொற்றின் பாதிப்பு இரு மாவட்டங்களிலும் ஐம்பதுக்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த வாரத்தை பொறுத்தவரையில் கடந்த சில தினங்கள் மற்றும் நேற்று வரையில் உயிரிழப்புகள் இல்லாத நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் சுகாதார மாவட்டத்தில் மட்டும் இதுவரை மொத்தம் 2 லட்சத்து 35 ஆயிரத்து 122 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதே போல் பழனி சுகாதார மாவட்டத்தில் 1 லட்சத்து 73 மூன்றாயிரத்து 810 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மட்டும் 31 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31767ஆக உயர்ந்துள்ளது. அதே போல் இன்று 11 நபர்கள் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 30778-ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 603 இருக்கிறது. தற்போது 386 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் திண்டுக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இன்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் இன்று 39 நபர்களுக்கு நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42557 -ஆக உயர்ந்துள்ளது. அதே போல் இன்று மட்டும் 49 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 41622-ஆக குறைந்துள்ளது. தற்போது வரையில் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 494 ஆக இருக்கிறது. இன்று 438 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் தேனி மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இது வரையில் தேனி மாவட்டத்தில்
பிறந்த குழந்தையை இறந்துவிட்டதாகக் கூறிய மருத்துவமனை.. அடக்கம் செய்யும் போது துடித்த இதயம்!
வாளிக்குள் மடக்கி வைத்து அனுப்பப்பட்ட குழந்தை - மயானத்தில் துடித்த இதயம் |Theni government college |