மேலும் அறிய
Advertisement
அண்ணாமலை முழுநேர அரசியல்வாதி கிடையாது - முன்னாள் முதல்வர் நாரயணசாமி
ராகுல்காந்தி தலைமை பொறுப்பை ஏற்க தகுதியானவரா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டியது மக்களும், காங்கிரஸ் கட்சியினரும் தான். சீமான் இல்லை.
வாக்குறுதி படி 16 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்காமல் வெறும் 16 லட்சம் பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என பாஜக அரசு குறித்து புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயண சாமி விமர்சனம் செய்துள்ளார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேட்டியளிக்கையில், “ராகுல் காந்தியின் பாதயாத்திரை எழுச்சியான பாதயாத்திரை. மத்திய பா.ஜ.க., அரசு மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால் மதக்கலவரம் உருவாக்கி அரசியல் லாபம் பெற ஆசைப்படுகிறது. மோடி ஆட்சியில் சுமார் 23 கோடி பேர் வறுமை கோட்டிற்கு கீழ் சென்றுவிட்டனர். பணக்காரர்களுக்காக மோடி ஆட்சி செய்கிறார். கொடுத்த வாக்குறுதி படி 16 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்காமல் வெறும் 16 லட்சம் பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள் திவாலாகும் நிலை உள்ளது. இந்திய நாட்டின் அந்நியச் செலவாணி குறைந்து டாலர் மதிப்பு உயர்ந்து விட்டது. அண்டை நாடுகளோடு நல்ல உறவில்லாத நிலையை மோடி அரசு உருவாக்கி உள்ளது. 2024 தேர்தலில் மிகப்பெரிய மாற்றம் வரும். பாஜக அரசு எந்த மாநிலங்களிலும் நேர்மையாக ஆட்சிக்கு வருவதில்லை.
மணிப்பூர், மேகலாயா, கர்நாடகா, புதுச்சேரியில் கூட சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்ப்பது, பல ஆயிரம் கோடிகளை கொடுத்து ஆட்சியை கலைப்பது உள்ளிட்ட ஜனநாயக விரோத நடவடிக்களை பா.ஜ.க மேற்கொண்டது. ஜனநாயக படுகொலையை பாஜக செய்கிறது. ஒட்டுமொத்தமாக மக்கள் விரோத நடவடிக்கையில் பா.ஜ.க., ஈடுபடுகிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் மீது திட்டமிட்டு குறிவைத்து வருமானவரித்துறை அமலாக்கத்துறை சி.பி.ஐ., ஏவி சோதனை நடத்துகின்றனர். எதிர்க்கட்சி தலைவர்கள் பா.ஜ.கவில் சேர்ந்தால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ராகுல்காந்தியின் பாதயாத்திரை இந்திய மக்களை ஒன்றிணைத்து மிகப்பெரிய மாற்றத்தை தரும். அண்ணாமலை முழுநேர அரசியல்வாதி கிடையாது. என்ன வளர்ச்சிப்பாதையில் நாடு சென்றுள்ளது. ஏற்கனவே இருந்த திட்டங்களை மோடி மாற்றியமைத்துள்ளார். இந்திய நாட்டிற்கு அனைத்தையும் செய்தது காங்கிரஸ் கட்சி தான். திமுக காங்கிரசை சாடுவதை தவிர அண்ணாமலைக்கு வேறு வேலை கிடையாது.
வடமாநிலங்களை வேண்டுமானால் மோடியும், அண்ணாமலையும் ஏமாற்றலாம். ஆனால் தென்மாநிலங்களை, மக்களை பாஜகவால் ஏமாற்ற முடியாது. ராகுல் தலைமை பொறுப்பை ஏற்க மாட்டேன் என சொல்லவில்லை. தேர்தல் வரும்வரை பொறுமையாக இருப்போம். ராகுல்காந்தி தலைமை பொறுப்பை ஏற்க தகுதியானவரா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டியது மக்களும், காங்கிரஸ் கட்சியினரும் தான். சீமான் இல்லை. சீமான் எங்கள் கட்சியில் வேண்டுமானால் சேர்ந்துவிட்டு பேசட்டும். மோடி இத்தாலி, அமெரிக்காவில் லண்டனில் இருந்து வரும் உடைகளை போடுகிறார். எங்களை விமர்சனம் செய்ய என்ன தகுதி யோக்கிதை பாஜகவுக்கு உள்ளது” என பேசினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion