பிச்சை எடுக்கிறீர்களா ? அதிகாரிக்கு எதிராக அதிமுக கவுன்சிலர் ஆவேசம்..! வாலாஜாபாத்தில் பரபரப்பு
அதிமுக ஒன்றிய கவுன்சிலர் அதிகாரியை நேருக்கு நேர் சரமாரி கேள்வி எழுப்பியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கிராம வளர்ச்சிக்காக வழங்கப்பட்ட கனிமவளத்துறை நிதியை கிராமத்துக்கு பயன்படுத்த வேண்டியது கூட பணம் கேட்டு பிச்சை எடுக்கும் அதிகாரிகள் என குற்றச்சாட்டு, வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் கிராமங்களில் வளர்ச்சி திட்ட பணி துவங்கவில்லை என அதிமுக ஒன்றிய கவுன்சிலர் அதிகாரியை நேருக்கு நேர் சரமாரி கேள்வி எழுப்பியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
வாலாஜாபாத் ஒன்றிய கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட 21 ஒன்றிய கவுன்சிலர்களுக்கு 18 திமுக, 2 அதிமுக, 1 பாமக உறுப்பினர்கள் உள்ளனர். மாதம் தோறும் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் பங்கேற்று கிராமங்களுக்கு தேவையான வளர்ச்சி திட்ட பணிகளை விவாதத்தில் கொண்டு வரப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சரமாரியாக கேள்வி எழுப்பிய அதிமுக கவுன்சிலர்
அந்த வகையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன் தலைமையில் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் தொடங்கிய சிறிது நேரத்தில் ஊத்துக்காட்டு ஒன்றிய கவுன்சிலர் ஆன அதிமுகவை சேர்ந்த எஸ்.எஸ்.ஆர். சத்யா பேசும்போது, எங்கள் ஒன்றியத்தில் பல கல்குவாரிகள் உள்ளது. கல்குவாரியில் இருந்து கனிமவளத் துறைகள் சார்பில், கிராம வளர்ச்சிக்காக நிதிகள் ஒதுக்கப்பட்டு நிதிகள் வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அனுப்பப்படும் கிராம வளர்ச்சிக்காக எந்த ஒரு திட்டப் பணிகளும் செயல்படவில்லை என குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
கூட்டத்தில் பரபரப்பு
இதுகுறித்து பொறியாளர் இடம் கேட்டதற்கு தகுந்த பதில் கூறாமலும், வளர்ச்சி திட்டத்திற்கு செயல்படுத்த பணம் கேட்டு பணிகள் மேற்கொள்ளாமல் நிறுத்தி வைக்கப்படுவதாகவும், அடுத்த அடுத்த குற்றச்சாட்டுகளை வைத்த நிலையில் அங்கிருந்த பொறியாளருக்கும், ஒன்றிய கவுன்சிலருக்கும் நேரடியாக ஒருவருக்கு வருவதாக கூச்சலிட்டு பேசியதால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒவ்வொரு முறையும் திட்டத்திற்கு அனுமதி வாங்க வேண்டும் என்றால் அதிகாரிகளிடம் கெஞ்ச வேண்டிய சூழலில் ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு திட்டங்களை செய்ய வேண்டிய அதிகாரிகள் இப்படி நடந்து கொள்வது சரியல்ல.
லஞ்சம் வாங்குகிறீர்களா ?
கவுன்சிலர் பேசிக் கொண்டிருந்தபோது பெண் அதிகாரி ஒருவர், தான் இப்பகுதிக்கு வந்து மூன்று மாதங்கள் மட்டுமே ஆகிறது எனவும், விரைவில் இது குறித்து ஆய்வு செய்து அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தார். மூன்று மாதம் ஆகியும் ஏன் இதுவரை ஆய்வு மேற்கொள்ளவில்லை என அவரையும் மடக்கி கேள்வி எழுப்பினார் அதிமுக கவுன்சிலர். சரமாரியான கேள்விகளை அதிமுக கவுன்சிலர் தொடர்ந்து, அதிகாரியை நோக்கி கேள்வி கேட்டதால் பெண் அதிகாரி அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
ஒரு கட்டத்தில் அதிமுக கவுன்சிலர், வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் கிராமத்தில் மழை நீர் செல்ல வடிகால், சாலை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் தொடர்ந்து பணம் கேட்டு பிச்சை எடுப்பது போல் ( லஞ்சம் ) நடந்து கொள்வதாக , அதிமுக கவுன்சிலர் பகிரங்க குற்றச்சாட்டு வைத்தார். இதனை அடுத்து அதிமுக கவுன்சிலரை சத கவுன்சிலர்கள் சமாதானம் செய்தனர். மேலும் வாலாஜாபாத் ஒன்றிய சேர்மன் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிமுக சமாதானம் செய்தார். இதனைத் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது. இந்த சம்பவத்தால் கூட்ட அரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.