மேலும் அறிய

BJP New President: தெற்கை நோக்கி பாஜக படையெடுப்பு..! அண்ணாமலை ஆட்டம் ஓவர்? தேசிய தலைவராகும் வானதி சீனிவாசன்?

BJP New President: பாஜகவின் புதிய தேசிய தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வானதி சீனிவாசன் நியமிக்கப்படலாம் என்ற தகவல் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

BJP New President: பாஜகவின் புதிய தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டால், மாநில தலைவர் அண்ணாமலைக்கு அது பெரும் பின்னடைவாக இருக்கும் என கூறப்படுகிறது.

பாஜகவின் அடுத்த தலைவர் யார்?

 பாஜகவின் தேசிய தலைவராக உள்ள நட்டாவின் பதவிக்காலம் ஏற்கனவே முடிந்துவிட்டது. அவருக்கான மாற்றை தேடும் பணியில் அக்கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மார்ச் மாதத்திலேயே, பாரதிய ஜனதா கட்சியின் அடுத்த தேசியத் தலைவர் யார் என்பது தெரியவரும் என கூறப்படுகிறது. இது குறித்து முடிவெடுக்கும் உரிமையை பிரதமர் நரேந்திர மோடியிடம் ஆர்.எஸ்.எஸ் ஒப்படைத்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் பொருள் ஜே.பி. நட்டாவின் வாரிசை பிரதமர் மோடி தீர்மானிக்க உள்ளார். பல்வேறு அரசியல் கணக்குகளின் அடிப்படையில், பாஜகவின் தலைமைப் பொறுப்பு பிராமண சமூகத்திற்கு ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. ஏனென்றால், இப்போது உயர்மட்டத் தலைமை ஓ.பி.சி. சமூகத்தைச் சேர்ந்தது, எனவே கட்சியின் தலைமை பிராமணத் தலைவருக்கு வழங்கப்பட வேண்டும் என்று கட்சியும் ஆர்.எஸ்.எஸ்ஸும் விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

புதிய தலைவர் ஆணா? பெண்ணா?

தலைவர் பதவி தொடர்பாக பிரத்யேகமாக இரண்டு வகையான தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்படி, தலைவர் பதவிக்கு 5 ஆண்கள் மற்றும் 2 பெண்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.  இந்த ஏழு பேரில் ஒருவரை மோடி அங்கீகரிப்பாரா அல்லது எட்டாவதாக ஒருவரை தேர்வு செய்து அதிர்ச்சி அளிப்பாரா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். பாஜக தலைவர் பதவி தொடர்பாக இதுவரை வெளிவந்த தகவல்களின்படி, தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு தலைவரின் பெயர் இறுதி செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. அது ஒரு பெண்ணா அல்லது ஆணா என்பது சஸ்பென்ஸ் ஆகவே உள்ளது.

பாஜக தலைவராகும் தென்னிந்தியர்?

வெளியாகியுள்ள தகவல்களின்படி,

  • மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி
  • மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி
  • பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்
  • ஆந்திர பாஜக தலைவர் புரந்தேஸ்வரி 

ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது. மேற்குறிப்பிடப்பட்ட நான்கு பேரும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்களாவர்.

பிராமணர்களுக்கு முன்னுரிமை

மேற்குறிப்பிடட்ட நான்கு பேரும் பாஜக தலைவர் பதவிக்கான பந்தயத்தில் காணப்படும் தென்னிந்தியர்கள் ஆவர். தற்போதைய கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவருக்குப் பதிலாக ஒரு பிராமணரை பாஜக தலைவராக நியமிக்கலாம் என்ற மற்றொரு கோட்பாடு இப்போது உருவாகி வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், தென்னிந்தியர் மற்றும் பிராமணர் என்ற அடிப்படையில், தற்போதைய மத்திய உணவு வழங்கல் அமைச்சரான பிரஹ்லாத் ஜோஷி கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் உள்ளார்.

கர்நாடகாவில் வசிக்கும் பிரஹலாத் ஜோஷி, 2004 முதல் பாஜக எம்.பி.யாக இருந்து வருகிறார். 63 வயதான பிரஹ்லாத் 1992 ஆம் ஆண்டு திரங்கா இயக்கம் மூலம் அரசியலில் நுழைந்தார். காஷ்மீர் காப்பாற்று இயக்கத்தை வழிநடத்தி கர்நாடகாவில் தனது முத்திரையைப் பதித்தார். மக்களவைத் தேர்தல்களில் 5 முறை வெற்றி பெற்றுள்ள அவர்,  தேர்தலுக்கான வியூக வகுப்பதில் ஒரு நிபுணராகக் கருதப்படுகிறார்.

கிஷன் ரெட்டிக்கு வாய்ப்பா?

ஜி கிஷன் ரெட்டியும் பாஜக தேசிய தலைவராக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தற்போது மத்திய நிலக்கரி அமைச்சராக இருக்கும் அவர் தெலுங்கானாவில் பாஜகவின் தலைவராக உள்ளார்.  பிரதமரின் நம்பிக்கைக்குரியவராகக் கருதப்படுகிறார். 1994 ஆம் ஆண்டு, நரேந்திர மோடி முதல்வராகவோ அல்லது பிரதமராகவோ இல்லாத காலம் அது . முதல் முறையாக அமெரிக்கா சென்றார். இந்த சுற்றுப்பயணத்தில் ஜி கிஷன் ரெட்டியும் அவருடன் இருந்தார். ரெட்டி பாஜக யுவ மோர்ச்சாவின் தலைவராக இருந்துள்ளார். அவர் ஒன்றுபட்ட ஆந்திராவில் பாஜகவின் மாநிலத் தலைவராகவும் இருந்துள்ளார். அவர் தெலுங்கானாவில் பாஜகவின் தீவிர இந்துத்துவா தலைவராகக் கருதப்படுகிறார். கிஷன் ரெட்டி பிராமண சமூகத்தை சேர்ந்தவராக இல்லாமல் இருக்கலாம், ஆனால் தெலுங்கானாவில் அவரது சமூகம் உயர் பிரிவிலேயே இடம்பெறுகிறது. 

வானதி ஸ்ரீனிவாசனுக்கு ஜாக்பாட்டா?

ஒரு பெண்ணை தேசிய தலைவராக நியமிக்க வேண்டும் என கருதினால், பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசனுக்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வானதி சீனிவாசனும் ஒரு தமிழ் பிராமணர், அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், வானதியை தலைவராக்குவதன் மூலம், பாஜக தெற்கை கவர முயற்சிப்பது மட்டுமல்லாமல், பிராமணர்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் கவனத்த ஈர்க்க முடியும்.

அண்ணாமலைக்கு பின்னடைவு?

தமிழக பாஜகவில் இருந்த பிரமாணர்களின் ஆதிக்கம், அண்ணாமலையின் எழுச்சிக்குப் பிறகு ஒடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சீனியர்களை ஓரங்கட்டுவதில் அவர் அதிக கவனம் செலுத்துவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இதனால், வானதி சீனிவாசன், எச். ராஜா போன்ற மூத்த தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தான், பாஜக தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை அது உறுதியானால், அது அண்ணாமலைக்கு பெரும் பின்னடைவாக அமையலாம்.

தெற்கை நோக்கி படையெடுக்கும் பாஜக:

2000 மற்றும் 2004 க்கு இடையில், அடல் பிஹாரி வாஜ்பாய் நாட்டின் பிரதமராக இருந்தபோது, ​​பாஜக தென்னிந்தியாவிலிருந்து மூன்று தலைவர்களை பெற்றது. அவர்கள் தெலுங்கானாவைச் சேர்ந்த பங்காரு லட்சுமணன், தமிழ்நாட்டின் ஜனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆந்திராவின் வெங்கையா நாயுடு ஆவர்.  இப்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு, பாஜக மீண்டும் தென்னிந்தியாவிலிருந்து ஒருவரை தலைவராக்குவது குறித்து பரிசீலித்து வருகிறது. வடக்கில் தாமரையை மலரச் செய்த பாஜக, இப்போது தெற்கிலும் விரிவடைய விரும்புகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Gift 2026: ரூ.3000 வாங்க ரெடியா.! இன்று முதல் பொங்கல் பரிசு- யாருக்கெல்லாம்.? அரசு முக்கிய அறிவிப்பு
ரூ.3000 வாங்க ரெடியா.! இன்று முதல் பொங்கல் பரிசு- யாருக்கெல்லாம்.? அரசு முக்கிய அறிவிப்பு
Vijay JanaNayagan: விஜயின் எலைட் லிஸ்டில் இணைந்த ஜனநாயகன் - சர்ச்சை, பிரச்னைக்குள்ளான படங்கள் - BP ஏற்றும் வரலாறு
Vijay JanaNayagan: விஜயின் எலைட் லிஸ்டில் இணைந்த ஜனநாயகன் - சர்ச்சை, பிரச்னைக்குள்ளான படங்கள் - BP ஏற்றும் வரலாறு
Jana Nayagan:
Jana Nayagan: "நினைத்தது நடந்தது”.. விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு.. சோகத்தில் தமிழ் சினிமா!
Pongal special train: நெல்லை, தூத்துக்குடி, திருப்பூருக்கு பொங்கல் சிறப்பு ரயில்.! முன்பதிவு எப்போது - தெற்கு ரயில்வே அறிவிப்பு
நெல்லை, தூத்துக்குடி, திருப்பூருக்கு பொங்கல் சிறப்பு ரயில்.! முன்பதிவு எப்போது - தெற்கு ரயில்வே அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!
Madhampatti Rangaraj|”அது என் குழந்தையா DNA TEST எடுக்கணும்” ஜாய்-ஐ சீண்டும் மாதம்பட்டி
MP Jothimani Issue | ’’எதுக்கு வந்தீங்க ஜோதிமணி?’’வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்அடித்து விரட்டிய காங்கிரஸார்’’ஏய்..போடா’’
வெனிசுலாவில் நிலவும் நெருக்கடிமோசமான சிறையில் மதுரோ போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? | America Trump Vs Venezuela

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift 2026: ரூ.3000 வாங்க ரெடியா.! இன்று முதல் பொங்கல் பரிசு- யாருக்கெல்லாம்.? அரசு முக்கிய அறிவிப்பு
ரூ.3000 வாங்க ரெடியா.! இன்று முதல் பொங்கல் பரிசு- யாருக்கெல்லாம்.? அரசு முக்கிய அறிவிப்பு
Vijay JanaNayagan: விஜயின் எலைட் லிஸ்டில் இணைந்த ஜனநாயகன் - சர்ச்சை, பிரச்னைக்குள்ளான படங்கள் - BP ஏற்றும் வரலாறு
Vijay JanaNayagan: விஜயின் எலைட் லிஸ்டில் இணைந்த ஜனநாயகன் - சர்ச்சை, பிரச்னைக்குள்ளான படங்கள் - BP ஏற்றும் வரலாறு
Jana Nayagan:
Jana Nayagan: "நினைத்தது நடந்தது”.. விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு.. சோகத்தில் தமிழ் சினிமா!
Pongal special train: நெல்லை, தூத்துக்குடி, திருப்பூருக்கு பொங்கல் சிறப்பு ரயில்.! முன்பதிவு எப்போது - தெற்கு ரயில்வே அறிவிப்பு
நெல்லை, தூத்துக்குடி, திருப்பூருக்கு பொங்கல் சிறப்பு ரயில்.! முன்பதிவு எப்போது - தெற்கு ரயில்வே அறிவிப்பு
Venezuela Russia America: வெனிசுலாவில் இருந்து வந்த ரஷ்ய எண்ணெய் டேங்கர் கப்பலை தட்டித் தூக்கிய அமெரிக்கா; பதற்றம்
வெனிசுலாவில் இருந்து வந்த ரஷ்ய எண்ணெய் டேங்கர் கப்பலை தட்டித் தூக்கிய அமெரிக்கா; பதற்றம்
E Passport: வந்தாச்சு இ-பாஸ்போர்ட்! எப்படி பெறுவது? கட்டணம், விண்ணப்பிக்கும் முறை முழு விவரம்!
E Passport: வந்தாச்சு இ-பாஸ்போர்ட்! எப்படி பெறுவது? கட்டணம், விண்ணப்பிக்கும் முறை முழு விவரம்!
TATA Harrier Petrol Turbo: டாடா ஹரியர் பெட்ரோல் பதிப்பு; பிரமாண்டத்துடன் பவரும் கூடியது; விலை என்ன.? வாங்குவதற்கு சிறந்ததா.?
டாடா ஹரியர் பெட்ரோல் பதிப்பு; பிரமாண்டத்துடன் பவரும் கூடியது; விலை என்ன.? வாங்குவதற்கு சிறந்ததா.?
Gold Storage At Home: பில், ஆதாரம் இல்லாமல் எவ்வளவு தங்கத்தை வீட்டில் வைத்திருக்க முடியும்.? அதன் விதிகள் தெரியுமா?
பில், ஆதாரம் இல்லாமல் எவ்வளவு தங்கத்தை வீட்டில் வைத்திருக்க முடியும்.? அதன் விதிகள் தெரியுமா?
Embed widget