மேலும் அறிய

டிராகனுடன் வசூலுடன் மோத முடியாமல் சுருண்ட NEEK! இரண்டு படங்களில் 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை விட பிரதீப் ரங்கநாதனின் டிராகன் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து சாதனை படைத்து வருகிறது.

தமிழ் சினிமாவில் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சிறிய பட்ஜெட் படங்கள் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரையில் வாரந்தோறும் 5க்கும் அதிகமான படங்கள் வெளியாகின்றன. இதில், நடிகர், நடிகளையும் தாண்டி படத்திற்கான கதையை ரசிகர்கள் இப்போது ரசிக்க தொடங்கிவிட்டார்கள். அப்படி அவர்கள் ரசித்த படம் தான் டிராகன்.

முழுக்க முழுக்க காதல் காட்சி என்று இல்லாமல் ஸ்கூல், கல்லூரி, காதல், வேலை என்று ஒரு இளைஞனைப் பற்றிய படமாக டிராகன் வெளியானது. போலி சான்றிதழ் மூலமாக வேலையை பெற்ற ஹீரோவிற்கு அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் டுவிஸ்ட். சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சென்ற இந்தப் படம் ரூ.37 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் ரூ.115 கோடி வரையில் வசூல் குவித்து சாதனை படைத்தது.

பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து மிஷ்கின், கௌதம் மேனன், கயாடு லோகர், கேஎஸ் ரவிக்குமார், அனுபமா பரமேஸ்வரன், இவானா (சிறப்பு தோற்றம்) ஆகியோர் பலர் நடித்திருந்தனர். லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இந்தப் படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றதோடு தயாரிப்பாளருக்கு அதிக லாபத்தையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது.

இந்தப் படத்திற்கு போட்டியாக வந்த தனுஷின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படமும் காதல் கதையை மையப்படுத்தி வெளியாகியிருந்தாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால் வசூல் ரீதியாக அந்தளவிற்கு ரீச் கொடுக்கவில்லை. ரூ.15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.36.8 கோடி வரையில் வசூல் குவித்தது. இந்தப் படத்தின் மூலமாக தனுஷின் அக்கா மகன் பவிஷ் நாராயண் ஹீரோவாக அறிமுகமானார். இவர், ஏற்கனவே தனுஷின் வாத்தி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிராகன் படத்துடன் ஒப்பிடும் போது நீக் ரீச் கொடுக்கவில்லை. ஒருவேளை சோலோவாக வெளியாகியிருந்தால் நீக் (நிலவுக்கு என் மீது என்னடி கோபம்) நல்ல வசூல் கொடுத்திருக்குமோ? இதை ரசிகர்கள் தான் சொல்ல வேண்டும்.

தலைப்பு செய்திகள்

அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Embed widget