T.R.Balu : ”ஆல் இந்தியா ரேடியோ இனி ஆகாஷ்வாணி...! கடும் எதிர்ப்பு தெரிவித்து டி.ஆர்.பாலு கடிதம்...!
அகில இந்திய வாணொலியில் இந்தி திணிப்புக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.
T.R.Balu : அகில இந்திய வாணொலியில் இந்தி திணிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.
அனுராக் தாக்கூருக்கு எழுதியுள்ள கடிதத்தில், நாட்டில் உள்ள அனைத்து அகில இந்திய வானொலி நிலையங்களும் கடந்த சில நாட்களாக அனைத்து ஒலிபரப்புகளிலும் "ஆகாஷ்வானி" என்ற வார்த்தையை மட்டுமே பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.
பிரசார் பாரதியின் இந்த திடீர் முடிவு நியாயமற்றது. பல ஆண்டுகளாக ஆங்கில ஒலிபரப்புகளும் பிராந்திய ஒலிபரப்பு நிலையங்களும் அகில இந்திய வானொலி என்ற பெயரை மட்டுமே பயன்படுத்தி வருகின்றன. தமிழ்நாட்டில் ஆகாஷ்வானிக்கு பதிலாக வானொலி என்ற இணையான வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
இது பழைமையான வார்த்தை என்று பிரசார் பாரதி கூறியுள்ளது. இதனால் "ஆகாஷ்வானி" என்ற வார்த்தையை பயன்படுத்த அகில இந்திய வானொலி நிலையங்கள் இதை நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது சரியானது அல்ல, ஏற்றுக்கொள்ள முடியாதது.
ஆல் இந்தியா ரேடியோ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக ஆகாஷ்வானி என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது நியாயமற்றது. இது சரியானது அல்ல, ஏற்றுக்கொள்ள முடியாதது. அகில இந்திய வானொலியில் தமிழுக்கு உரிய இடத்தை மறுத்து, அதற்குப் பதிலாக இந்தியைத் திணிக்கும் பிரசார் பாரதியின் நடவடிக்கைக்கு திமுக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
பிரசார் பாரதியின் செயலுக்கு தமிழகம் மற்றும் பிற இடங்களில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அகில இந்திய வானொலியில் தமிழுக்கு உரிய இடத்தை மறுத்து, அதற்குப் பதிலாக இந்தியைத் திணிக்கும் பிரசார் பாரதியின் நடவடிக்கைக்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த முடிவுக்கு திமுக சார்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்”
அகில இந்திய வாணொலிக்கு பதில் ஆகாஷ்வானி என்ற இந்தி பெயரை பயன்படுத்த வேண்டாம். எனவே, நீங்கள் இந்த விஷயத்தில் தயவுசெய்து தலையிட்டு, முந்தைய நடைமுறையை உடனடியாக மீட்டெடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரசார் பாரதி நிறுவனத்திற்கு தகுந்த ஆலோசனை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.