Morning Headlines: தமிழ்நாட்டில் மேலும் 6 புதிய மருத்துவ கல்லூரிகள்.. பிரசார மேடையில் தவறி விழுந்தாரா மோடி? முக்கியச் செய்திகள்..
Morning Headlines May 24: இந்தியாவில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இங்கே தலைப்புச் செய்திகளின் தொகுப்பாக காணலாம். முக்கியமான 5 செய்திகளின் லிங்க்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- அப்படி போடு..! தமிழ்நாட்டில் மேலும் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் - எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து, புதிய மருத்துவ கல்லூரிகளுக்கான பணிகள் தமிழ்நாட்டில் விரைவில் தொடங்க உள்ளன. தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் 11 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட்டன. இது பெரும் சாதனையாக கருதப்பட்டது மற்றும் பல ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கும் பெரும் வாய்ப்பாகவும் கருதப்பட்டது. இந்நிலையில் தான், தமிழ்நாட்டில் மேலும் 6 புதிய மருத்துவமனைகளை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ள அனுமதியின்படி, மயிலாடுதுறை, திருப்பத்தூர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் முதற்கட்டமாக புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளன. மேலும் படிக்க..
- பிரசார மேடையில் தவறி விழுந்தாரா மோடி? சமூக ஊடகங்களில் பரவி வரும் பதிவால் குழப்பம்!
பிரசார மேடையில் ஒருவர் தவறி விழும் புகைப்படத்தை மோடி விழுந்தது போன்று சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். மோடி போன்று ஆடை அணிந்த நபர் ஒருவர் மேடை ஏறும் போது தவறி விழும் வீடியோ எக்ஸ் தளம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. முகம் தெளிவாகத் தெரியவில்லை. நிலைத் தகவலில், “400 கவிழ்ந்த காட்சி ஸ்டேஜ்க்கு அடில தேடுறானோ?” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் படிக்க..
- பாரீஸ் ஒலிம்பிக் பயிற்சிக்கு செல்லும் பி.வி.சிந்து -லக்ஷ்யா சென்! நிதி அளிக்க MOC ஒப்புதல்!
பாரீஸ் 2024 ஒலிம்பிக்கிற்கு தயாராகும் வகையில் லக்ஷ்யா சென் மற்றும் பி.வி.சிந்து ஆகியோருக்கு அந்தந்த பயிற்சி முகாம்களுக்கு நிதி உதவி அளிக்க இளைஞர் விவகார அமைச்சகம் மற்றும் விளையாட்டு மிஷன் ஒலிம்பிக் செல் (MOC) ஒப்புதல் அளித்துள்ளது. பாரீஸ் 2024 ஒலிம்பிக்கிற்கு தயாராகும் வகையில், இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் லக்ஷ்யா சென் பிரான்சிலும், இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பிவி சிந்து ஜெர்மனியிலும் பயிற்சி பெறவுள்ளனர். மேலும் படிக்க..
- பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
கேரளாவில் உள்ள சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியில் கேரள அரசு ஈடுபட்டு வருவதால், அதனை உடனே கைவிடவேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “காவிரிப் படுகையில் அமராவதி (பம்பார்) துணைப்படுகையின் ஒரு பகுதியான சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக சமீபத்தில் சில ஊடகங்களில் வந்த செய்திகளின் காரணமாக அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாகக் குறையும் என்று தமிழ்நாட்டு விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும். இதனால் இப்பணியினை நிறுத்தி வைக்க வேண்டுமென்று வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு இன்று அதாவது (23-5-2024) கடிதம் எழுதியுள்ளார். மேலும் படிக்க..