Morning Headlines: தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ. சோதனை.. ஆம்னி பேருந்து விவகாரத்தில் திருப்பம்.. இன்றைய முக்கிய செய்திகள்!
Morning Headlines February 10: இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் பயணிகளை ஏற்றி இறக்கலாம்- உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தமிழ்நாடு அரசு கிளாம்பாக்கத்தில் தான் ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்று சொன்ன அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, மறுஉத்தரவு வரும் வரை கோயம்பேடு ஆம்னி பேருந்துகளின் பணிமனைகளை பயன்படுத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் கிளாம்பாக்கத்தில் பயணிகளை ஏற்றி, இறக்காமல் தென்மாவட்டங்களுக்கு செல்லும் வகையில் எந்த பேருந்துகளையும் இயக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
- காலையிலேயே அதிர்ச்சி சம்பவம்.. சென்னையில் இருந்து சென்ற பேருந்து மீது லாரி மோதி 7 பேர் உயிரிழப்பு
சென்னையில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்ற சுற்றுலா பேருந்து லாரி மீது மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூர் மாவட்டம் முசுனூர் சுங்கச்சாவடி அருகே இந்த விபத்து நடந்துள்ளது. அங்கு நின்று கொண்டிருந்த லாரி ஒன்றின் பின்னால் இரும்பு ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து மோத முற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விபத்தை தடுக்கும் பொருட்டு அந்த லாரியை டிரைவர் திருப்பிய போது அது எதிர்திசையில் வந்து கொண்டிருந்த சுற்றுலா பேருந்து மீது பயங்கரமாக மோதியுள்ளது.மேலும் படிக்க
- ஜெயலலிதா வழங்கிய யானைகளை துன்புறுத்திய பாகர்கள் .. கேரள உயர்நீதிமன்றம் கண்டனம்
குருவாயூர் கோயிலில் இருக்கு கிருஷ்ணா மற்றும் சிவன் யானையை பாகன்கள் துன்புறுத்திய சம்பவத்துக்கு கேரள உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. துன்புறுத்தல் செய்யப்பட்ட 2 யானைகளும் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா குருவாயூர் கோயிலுக்கு வழங்கியது. இதுதொடர்பாக குருவாயூர் தேவசம் போர்டு அதிகாரிகள் நேரடியாக சம்பவ இடத்தில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் படிக்க
- மீண்டும் தமிழ்நாட்டில் களமிறங்கிய என்.ஐ.ஏ., 20 க்கு மேற்பட்ட இடங்களில் சோதனை..!
சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 20க்கு மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றன. கோவையில் கடந்த ஆண்டு நிகழ்ந்த கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் படிக்க
- தொடரும் கிளாம்பாக்கம் பஞ்சாயத்து.. சாலைக்கு வந்த பயணிகள்.. நடப்பது என்ன ?
செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் தென் மாவட்டங்களுக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் திடீரென சென்னை திரிசை தேசிய நெடுஞ்சாலை அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதிகாரிகளிடம் கேட்டபோது முறையான பதில் அளிக்கவில்லை எனக் கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் படிக்க