தவறு செய்திருக்க வேண்டும் என அவசியம் இல்லை...இதற்காகவும் விவாகரத்து வழங்கலாம்... உச்ச நீதிமன்றம் அதிரடி
திருமண உறவை முடிவுக்கு கொண்டு வர கணவன், மனைவி எவரேனும் ஒருவரின் தவறை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
திருமண உறவை முடிவுக்கு கொண்டு வர கணவன், மனைவி எவரேனும் ஒருவரின் தவறை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
#Constitution Bench of the #SupremeCourt to continue deliberating on whether Art 142 may be invoked by it to dissolve marriages, especially on the ground of 'irretrievable breakdown'.
— Live Law (@LiveLawIndia) September 29, 2022
For live-updates, follow this thread.#Divorce #SupremeCourtOfIndia pic.twitter.com/2lNlNVZ3xI
சமரசத்தை எட்டவே முடியாத அளவிலான கருத்து வேறுபாட்டின் காரணமாகவே திருமண உறவை நீடிக்க முடியாத சூழல் ஏற்படலாம் என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இந்தியாவில் விவாகரத்து சட்டம் தவறான கோட்பாட்டின் அடிப்படையில் உள்ளது. அதே நேரத்தில், இரண்டு நல்ல மனிதர்களால் நல்ல தம்பதியினராக இருக்க முடியாது என்பதே உண்மை என நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.
சரி செய்யவே முடியாத அளவுக்கு உறவு பாதிக்கப்பட்டதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் ஏற்கெனவே விவாகரத்து வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பு தொடர்பாக பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, ஏ.எஸ். ஓகா, விக்ரம் நாத் மற்றும் ஜெ.கே. மகேஸ்வரி ஆகியோர் கொண்ட அமர்வு, "கேள்வி என்னவென்றால், ஒரு நபர் தவறு செய்தால் மட்டும்தான் விவாகரத்து வழங்க வேண்டுமா?
விவாகரத்து கோருபவர் குற்றம் சாட்டும் பெரும்பாலான தவறுகள் சமூக பழக்க வழக்கங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளிலிருந்து எழுகின்றன எனக் கூறிய நீதிமன்றம், "அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் எதை தவறாக சொல்கிறார்கள்? அவர் காலையில் எழுந்து என் பெற்றோருக்கு தேநீர் கொடுப்பதில்லை என்று யாராவது சொல்வார்கள்.
இது ஒரு தவறான கோட்பாடு? அவற்றில் நிறைய சமூக நெறிமுறைகளிலிருந்து எழுகின்றன. அவற்றிலிருந்தே நாம் தவறுகளை சுட்டி காட்டுகிறோம்" என தெரிவித்தது.
சட்டத்தின் அடிப்படையில், சரி செய்ய முடியாத அளவுக்கே, திருமண உறவு பாதிக்கப்பட்டிருந்தாலும் விவாகரத்து தரப்படுவதில்லை. இருப்பினும், தனது தனித்துவமான அதிகார வரம்பான அரசியலமைப்பு பிரிவு 142இன் கீழ் உச்ச நீதிமன்றம் விவாகரத்து உத்தரவுகளை பிறப்பித்து நீதியை வழங்கி வருகிறது.
2016 ஆம் ஆண்டில், பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்தை பெறுவதற்கு 6 முதல் 18 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய தரப்பை குடும்ப நீதிமன்றத்திற்கு அனுப்பாமல், விவாகரத்து வழங்குவதற்காக சட்டப்பிரிவு 142 இன் கீழ் உச்ச நீதிமன்றம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டுமா என்பதை ஆராய வேண்டும் என சிறிய அமர்வு ஒன்று அரசியல் சாசன அமர்வுக்கு கோரிக்கை விடுத்திருந்தது.
அப்போது, மூத்த வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், வி. கிரி, துஷியந்த் தவே, மீனாட்சி அரோரா ஆகியோரை நீதிமன்றத்திற்கு உதவிடும் வகையில் நீதிமன்ற நண்பராக நியமித்தது.
சரி செய்ய முடியாத அளவுக்கு திருமண உறவு பாதிக்கப்பட்டிருந்தால், அதன் அடிப்படையில், தம்பதியினருக்கு விவாகரத்து வழங்கும் உச்ச நீதிமன்றத்திற்கு ஆதரவாக வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஜெய்சிங், திருமண உறவின் அத்தியாவசிய அம்சங்கள் மறைந்துவிட்டால், அதற்கு ஒரே வழி விவாகரத்துதான் என வாதம் முன்வைத்தார்.
திருமணம் என்பது ஒரு புனிதம் என்பதையும், திருமணத்தை முறிக்க மாட்டோம் என்பது இந்தியாவின் பொதுக் கொள்கை என்பதையும் குறிக்கும் தீர்ப்புகளில் எனக்கு உடன்பாடு இல்லை என்றும் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த நீதிமன்றம், "இவை இரண்டும் வெவ்வேறான விஷயங்கள். புனிதம் என்பதே திருமணம் எப்படி நடைபெறுகிறது என்பதுதான். திருமணம் முறியுமா இல்லையா என்பதில் சந்தேகமில்லை.
பிரச்சினை என்னவென்றால், இந்து திருமணச் சட்டத்தின் கீழ், விவாகரத்து தவறான கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், சரி செய்ய முடியாத அளவுக்கு உறவு பாதிக்கப்படுகிறது என்பது ஒரு அடிப்படை உண்மை" என தெரிவித்தது.