மேலும் அறிய

Sukhbir Badal Attacked: சீக்கிய தலைவர், பஞ்சாப் முன்னாள் துணை சிஎம் மீது பொற்கோயிலில் துப்பாக்கிச் சூடு- என்ன காரணம்? சுட்டவர் யார்?

சீக்கிய அமைப்பின் மூத்த தலைவரும் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருமான சுக்பீர் மீது துப்பாக்கிச் சூடு முயற்சிக்கு என்ன காரணம்? சுட்டவர் யார்? பார்க்கலாம்.

சிரோமணி அகாலி தளத்தின் முன்னாள் தலைவரும் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருமான சுக்பீர் சிங் பாதல் மீது பொற்கோவிலில் இன்று துப்பாக்கிச் சூடு முயற்சி நடத்தப்பட்டது. அதிர்ஷ்டவசமாக சுக்பீர் சிங்கின் பாதுகாவலர், சுட முயன்ற நபரைத் தடுத்த நிலையில் குண்டு பொற்கோவில் சுவரின் மீது பாய்ந்தது.

எதற்காக ஓர் அமைப்பின் முக்கியத் தலைவரை, முன்னாள் துணை முதல்வரின் மீது துப்பாக்கிச் சூடு நடந்தது?

பஞ்சாப் என்றாலே எல்லோருக்கும் சீக்கியர்கள்தான் நினைவுக்கு வரும். சீக்கியர்கள் மதப் பற்றாளர்கள் என்பது எல்லோரும் அறிந்ததே.. இந்த நிலையில் மத சம்பிரதாயங்களை மீறியதாகக் கூறி கியானி ரக்பீர் சிங் தலைமையிலான சீக்கிய குருமார்கள் சுக்பீர் சிங் பாதலுக்கு 2 நாட்கள் பொற்கோவிலில் 1 மணி நேரத்துக்குக் கழிப்பறையை சுத்தம் செய்ய வேண்டும், சமையல் அறையில் பாத்திரம் கழுவ வேண்டும் என்றெல்லாம் தண்டனை விதித்தனர். அகாலி தளள் சார்பில், பொற்கோவிலில் காவலராகச் செயல்பட வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

தண்டனைக்கு என்ன காரணம்?

2007 முதல் 2017ஆம் ஆண்டு வரை அகாலி கேபினெட்டில் அமைச்சர்களாக இருந்தவர்களும் சுக்பீந்தரும் ’தன்கையா’ எனப்படும் மத சம்பிரதாயங்களை மீறியதாக அகாலி தக்த் என்னும் சீக்கிய உயர் அமைப்பு குற்றம் சாட்டியது.

சுக்பீர் பாதல், தனது சீக்கிய அமைச்சரவை கேபினெட் அமைச்சர்கள் சுக்தேவ் சிங் திண்ட்சா, சுச்சா சிங் லங்கா, ஹீரா சிங் கபரியா மற்றும் பல்விந்தர் சிங் புந்தர் உள்ளிட்டவர்களுடன் சேர்ந்து, சீக்கிய மத அமைப்புக்குக் கேடு விளைவிக்கும் முடிவுகளை எடுத்ததாகவும் சீக்கிய குருமார்கள் குற்றம் சாட்டினர். அவர் சிரோமணி அகாலி தள தலைவர் பதவியில் இருந்து விலகவும் கூறப்பட்டது. பஞ்சாப்பில் 5 முறை முதல்வராக பதவி வகித்து மறைந்த பிரகாஷ் சிங் பாதலுக்கு வழங்கப்பட்ட ‘ஃபக்ரே-ஏ-கெளம்’என்ற பட்டத்தைத் திரும்ப பெறப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

தண்டனையை ஏற்ற சுக்பீர் சிங்

சுக்பீரும் இதை ஏற்று நவம்பரில் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல 2007ஆம் ஆண்டு எஸ்ஏடி ஆட்சியின்போது நடந்த மத நிந்தனை வழக்கில் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு மன்னிப்பு வழங்கியதை ஒப்புக்கொண்டார்.

தண்டனைகளை ஏற்ற சுக்பீர், காலில் ஃப்ராக்சர் இருந்ததால், சக்கர நாற்காலியில் கோயிலுக்கு வந்து பணிகளை ஏற்றார். கழுத்தில் நோட்டீஸ் இருந்த பெயர் அட்டையை மாட்டி, கையில் கம்பு ஏந்தி காவல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அவரைச் சுற்றிலும் பாதுகாவலர்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக நரேன் சிங் செளரா என்பவர் துப்பாக்கியால் சுட முயற்சித்தார்.

யார் இந்த நரேன் சிங் செளரா? (Narain Singh Chaura)

கொலை முயற்சியில் ஈடுபட்ட நரேன் சிங் செளரா, முன்னாள் காலிஸ்தான் தீவிரவாதி என்று கூறப்படுகிறது. இவர் பப்பர் கல்சா என்ற அமைப்பைச் சேர்ந்தவர் என்றும் தேரா பாபா நானக்கைச் சேர்ந்தவர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

சீக்கிய மதத்தின்மீது அதி தீவிரப் பற்றுக் கொண்ட செளரா, சுக்பீர் மீதான கோபத்தாலேயே இந்த கொலை முயற்சியை மேற்கொண்டுள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!கோதாவில் இறங்கிய அமைச்சர்  VOLLEYBALL ஆடிய செ.பாலாஜி  CHEER செய்த மாணவர்கள்மாணவி கொடுத்த HINT.. சிக்கிய ஞானசேகரன் கூட்டாளி!  திருப்பூர் விரையும் போலீஸ்வேகமெடுக்கும் லஞ்ச வழக்கு..  அமெரிக்கா வைத்த ஆப்பு?  கலக்கத்தில் கவுதம் அதானி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
PM Modi : ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
IND vs AUS: 1 ரன்ல எல்லாம் போச்சு! ஸ்மித் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட இந்தியா!
IND vs AUS: 1 ரன்ல எல்லாம் போச்சு! ஸ்மித் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட இந்தியா!
Poisonous Gas: உலகின் மிகவும் ஆபத்தான விஷவாயு..! முதல் மூச்சுக்கே உயிர் இருக்காது, காரணம் என்ன?
Poisonous Gas: உலகின் மிகவும் ஆபத்தான விஷவாயு..! முதல் மூச்சுக்கே உயிர் இருக்காது, காரணம் என்ன?
Embed widget