Madhya Pradesh: பீட்சா பெண் ஊழியரை வெளுத்தெடுத்த பெண்கள்.. காரணம் என்ன? வைரலாகும் வீடியோ..!
மத்தியப்பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர், பெண்களால் சரமாரியாக தாக்கப்படும் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மத்தியப்பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர், பெண்களால் சரமாரியாக தாக்கப்படும் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மத்தியப்பிரதேசத்தில் உள்ள இந்தூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக வெளியாகியிருக்கும் வீடியோவில், “ பீட்சா ஊழியருக்கான உடை அணிந்திருக்கும் ஒரு பெண்ணை, அங்கிருந்த சக பெண்கள் சரமாரியாக தாக்குகின்றனர். அதில் ஒரு பெண், குச்சியை வைத்து அந்தப் பெண்ணின் முதுகில் தாக்கி, முடியை பிடித்து இழுத்து கீழே தள்ளுகிறார். இதனால் வலி தாங்க முடியாமல் அந்தப் பெண் கதறி அழுகிறார். இருப்பினும் அந்தப் பெண்கள் அவரை விடுவதாக இல்லை.
A young woman was mercilessly thrashed, grabbed by the hair in full public view by a group of women in Indore. The video of the incident shows four women beating up the victim, a pizza chain employee, using sticks and fists, for allegedly staring at them @ndtv @ndtvindia pic.twitter.com/R6l2epYLpJ
— Anurag Dwary (@Anurag_Dwary) June 13, 2022
தொடர்ந்து அந்தப் பெண்ணை சரமாரியாக தாக்கினர். நடுரோட்டில் இந்த சம்பவம் நடந்து கொண்டிருக்க, அந்தப் பெண்ணுக்காக ஒருவர் கூட உதவிக்கு வரவில்லை.தொடர்ந்து தாக்கப்பட்ட அந்தப்பெண் அருகில் இருந்த வீட்டிற்குள் உள்ளே நுழைந்து தப்பிக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தாக்கப்பட்ட அந்தப்பெண் சக பெண்களை பார்த்து முறைத்ததால் இந்தத்தாக்குதல் நடந்துள்ளதாம்.
இதனையடுத்து தாக்கப்பட்ட அந்தப்பெண் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய அந்தப்பெண்கள் உள்ளூர் கும்பலை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் வேண்டுமென்றே அந்த வீடியோவை வைரலாக்கியதாகவும் சொல்லப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

