புதிய பரந்தூர் விமான நிலையத்திற்கு ஒப்புதல்.. தமிழக மக்களுக்கு ராம் மோகன் நாயுடு கொடுத்த சர்ப்ரைஸ்
பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதலை வழங்கியுள்ளது. விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க விமான போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதலை வழங்கியுள்ளது என்ற செய்தியை பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது!
மத்திய அமைச்சர் தந்த இனிப்பான செய்தி:
பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் பார்வையின் கீழ், நாடு முழுவதும், குறிப்பாக டெல்லி, மும்பை மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களில் இரண்டாவது விமான நிலையங்களை உருவாக்குவதன் மூலம் விமான நிலைய திறனை வலுப்படுத்துவதன் மூலம் அதிகரித்து வரும் பயணிகள் தேவை நிவர்த்தி செய்யப்படுகிறது.
பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதில் பரந்தூர் விமான நிலையம் ஒரு குறிப்பிடத்தக்க படி என்று நான் நம்புகிறேன். மேலும் தமிழ்நாட்டின் விமான உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உறுதிபூண்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
சென்னை புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில், சென்னையில் புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து சாத்திய கூறுகள் ஆராயப்பட்டன. இறுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில், சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்தன. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பரந்தூர் புதிய விமான நிலையம்:
ஒருபுறம் மக்கள் போராட்டம் தொடர்ந்து வந்தாலும், மறுபுறம் விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்கியுள்ளது. பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கு திட்ட செலவு 29,150 கோடி ரூபாய் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் 'டிட்கோ' நிறுவனம் மூலமாக இந்த விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.
It gives me immense pleasure to share that the Ministry of Civil Aviation has granted in-principle approval for the new Perandur Airport!
— Ram Mohan Naidu Kinjarapu (@RamMNK) April 9, 2025
Under the visionary leadership of Hon'ble Prime Minister Shri Narendra Modi Ji, growing passenger demand is being addressed by strengthening…
பரந்தூர் விமான நிலையத்திற்காக பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 13 கிராமங்களில் 5300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. ஏகனாபுரம், நாகப்பட்டு உள்ளிட்ட கிராமங்கள் மொத்தமாக இந்த திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட உள்ளன. இந்த நிலையில், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க விமான போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.