(Source: ECI/ABP News/ABP Majha)
Watch Video: இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட... 8.5 லட்சம் ரூபாய்.. ஒரு Full கட்டு சவால்.. வைரல் வீடியோ !
ராட்சத அளவு உணவுத்தட்டு முழுவதும் சாப்பிடும் சவால் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் எப்போதும் உணவு தொடர்பான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்தவகையில் தற்போது ஒரு உணவு வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது. அதற்கு முக்கியமான காரணம் அந்த உணவு உடன் ஓட்டல்காரர் வைத்திருக்கும் சவால் தான். இது தொடர்பாக உணவு ரிவ்யூ செய்யும் பக்கம் ஒன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, டெல்லியிலுள்ள ஒரு தனியார் ஓட்டலில் ஐயன்மேன் தாலி என்று குறிப்பிடப்படும் ஒரு உணவு வகை பரிமாறப்படுகிறது. இதில் சப்பாத்தி, ரொட்டி, கடாய் பன்னீர், கோபி மஞ்சுரியன், ஆலூ கோபி, இனிப்பு வகைகள், சாதம், பிரியாணி உள்ளிட்ட பல வகை உணவுகள் இடம்பெற்றுள்ளன. இந்த உணவை பார்க்கும் போதே நமக்கு மயக்கம் வரும் வகையில் அமைந்துள்ளது.
View this post on Instagram
இந்த உணவை வைத்து அந்த ஓட்டல் உரிமையாளர் ஒரு சவாலை வைத்துள்ளார். அதாவது இந்த உணவை 30 நிமிடங்களுக்குள் இரண்டு நபர்கள் சேர்ந்து சாப்பிட்டு முடித்தால் அவர் 8.5 லட்சம் ரூபாய் தருவதாக கூறியுள்ளார். இந்த சவாலை ஏற்க பலரும் தயாராக உள்ளனர். எனினும் தற்போது வரை யாரும் அதில் வெற்றி பெறவில்லை. இந்த உணவு மற்றும் சவால் தொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த உணவை 30 நிமிடத்திற்குள் சாப்பிட்டால் நிச்சயம் வயிற்றில் பிரச்னை வரும் என்று ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: வெள்ளத்தில் சிக்கிய நாய்… துணிச்சலாக இறங்கிய ஊர்காவல்படை போலீஸ்… விடியோ வைரல்!