மேலும் அறிய
Tamilnadu Roundup: பெண்களுக்கு சலுகை, பாஜக பிரமுகர்கள் கைது, ரம்ஜான் கொண்டாட்டம் - 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே விரிவாக காணலாம்.

தலைப்புச் செய்திகள்
Source : Special Arrangement - ABP Network
- பெண்கள் பெயரில் சொத்துக்களை பதிவு செய்தால் சலுகை - அரசாணை வெளியிட்ட தமிழக அரசு
- வக்ஃப் வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தது திமுக தான், இரண்டாவது இடத்திற்கு தான் எதிர்க்கட்சிகள் இடையே போட்டி - ரமலான் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- அரேபிய நாடுகளில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது; அதனை பின்பற்றும் ஜாக் கமிட்டி இஸ்லாமியர்கள் மதுரை, சென்னை, கோவை, தென்காசியில் சிறப்புத் தொழுகை
- தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்கள் முழுவதும் சமையல் எரிவாயு டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் 4வது நாளாக இன்றும் தொடர்கிறது
- கள்ளக்குறிச்சியில் தீபாவளி சீட்டு மற்றும் ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடிக்கு மேல் பண மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த, பாஜகவை சேர்ந்த சூர்யமகாலட்சுமி - சிவக்குமார் இருவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்
- தஞ்சை பெரிய கோயில் கோபுரமே தெரியாத அளவுக்கு நீடித்த மூடுபனி - எதிரே வரும் வாகனங்கள் சரியாக தெரியாத காரணத்தால், முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி பயணித்த வாகன ஓட்டிகள்
- திண்டுக்கல்: ‘வீர தீர சூரன்’ தியேட்டர் விசிட் வந்த நடிகர் விக்ரம் - பேச விடாமல் ரசிகர்கள் கூச்சலிட்டதால் அதிருப்தியுடன் சென்றார்
- தடை செய்யப்பட்ட காத்தாடி, மாஞ்சா நூல் ஆகியவற்றை உ.பி.யில் இருந்து ஆன்லைன் மூலம் வாங்கி, சென்னையில் விற்பனை செய்து வந்தவர் கைது
- நெல்லை மாவட்டத்தில் குடியிருப்பு பகுதியில் அச்சுறுத்தி வந்த கரடி, கூண்டில் சிக்கியது
- கன்னியாகுமரி: கடல் நீர் மட்டம் தாழ்வு காரணமாக திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்திற்கு படகுப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்
- விழுப்புரம்: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
- கடலூரில் பாழடைந்த கட்டடத்தில் மொத்தமாக சிக்கிய கஞ்சா வியாபாரிகள் 9 பேர் கைது... 23 கிலோ கஞ்சா பறிமுதல்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement