துருக்கி ரிசார்ட்டில் தீ விபத்து - 66 பேர் பலி; 51 பேர் படுகாயம் - நடந்தது என்ன?
வடமேற்கு துருக்கியின் போலு மாகாணத்தின் கர்தல்காயா ரிசார்ட்டில் உள்ள ஓட்டலில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு ஓட்டல் முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

வடமேற்கு துருக்கியின் போலு மாகாணத்தில் கர்தல்காயா ரிசார்ட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 66 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட 51 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வடமேற்கு துருக்கியின் போலு மாகாணத்தின் கர்தல்காயா ரிசார்ட்டில் உள்ள ஓட்டலில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு ஓட்டல் முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
அந்த ஓட்டலில் 234 பேர் தங்கியிருந்தனர். இந்நிலையில் ஓட்டலில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சிக்கி அங்கிருந்தவர்கள் தப்பிக்க வழியின்றி திக்குமுக்காடினர்.
இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து 30 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த தீயணைப்புப்படை வீரர்கள் தீயில் சிக்கியவர்களை விரைந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் இதுவரை 66 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 51 பேர் படுகாயமடைந்தனர்.
நாடு தழுவிய இரண்டு வார பள்ளி விடுமுறையின் தொடக்கத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அருகிலுள்ள இஸ்தான்புல் மற்றும் அங்காராவிலிருந்து பனிச்சறுக்கு வீரர்கள் வழக்கமாக போலு மலைகளுக்குச் செல்கிறார்கள்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து புலனாய்வாளர்கள் விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

