EWS : ”10 சதவீத இடஒதுக்கீடு : உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ப.சிதம்பரத்தின் கருத்து என்ன..?
EWS : 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான தீர்ப்பை காங்கிரஸ் ஆய்வு செய்வதாக கூறியதற்கு மூத்த தலைவர் ப.சிதம்பரம் வரவேற்பு அளிப்பாக தெரிவித்துள்ளார்.
EWS : 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான தீர்பபை காங்கிரஸ் ஆய்வு செய்வதாக கூறியதற்கு மூத்த தலைவர் ப.சிதம்பரம் வரவேற்பு அளிப்பாக தெரிவித்துள்ளார்.
10 சதவீத இடஒதுக்கீடு :
கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வரும் 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த இட ஒதுக்கீடு பாகுபாடற்றவை என்றும் இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மாற்றவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தேசிய அளவில் 50 சதவிகிதம் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அளவை இச்சட்டம் மீறவில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது. பொது பிரிவினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு வழங்கப்படும் 10 சதவிகித இட ஒதுக்கீடு கடந்த 2019ஆம் ஆண்டு பொது தேர்தலுக்கு முன்னதாக கொண்டு வரப்பட்டது. இந்த இட ஒதுக்கீடு செல்லுமா செல்லாதா என்பதற்கு உச்ச நீதிமன்றம் பதில் அளித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததை தொடர்ந்து, இந்திய அரசியலமைப்பில் 103ஆவது சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்டது. கொண்டு வரப்பட்ட உடனேயே, இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
காங்கிரஸ் வரவேற்பு :
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வரும் 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு காங்கிரஸ் வரவேற்றுள்ளது. ஆனால் திமுக, ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக தென் மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்ள் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த தீர்ப்பு குறித்து சமூக மற்றும் அரசியல் தாக்கம் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தீர்ப்பு குறித்து காங்கிரஸ் முழுமையான ஆய்வு செய்வதாக அக்கட்சியின் பொதுச்செயலாளராக ஜெயராம் ரமேஷ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.‘
"10 சதவீத இடஒதுக்கீடு - வரவேற்கிறேன்"
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வரும் 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பை ஆய்வு செய்யும் என்ற காங்கிரஸ் கட்சியின் அறிக்கையை வரவேற்கிறேன். புதிய இடஒதுக்கீட்டில் எஸ்சி, ஓபிசி பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பது மக்களிடையே பரவலான கவலையை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தார்.
The reason is that, according to the Sinho Commission, SC, ST and OBC constituted 82 per cent of the population below the poverty line.
— P. Chidambaram (@PChidambaram_IN) November 12, 2022
The poor form a class. Can the law exclude 82 per cent of the poor? This is a question that must be examined objectively and dispassionately.
மேலும், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மக்கள் தொகையில் 82 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். ஏழைகள் ஒரு வகுப்பை உருவாக்குகிறார்கள். 82 சதவீத ஏழைகளை சட்டத்தில் விலக்க முடியுமா? இது அக்கறையுடனும் ஆராயப்பட வேண்டுடிய கேள்வி என ப.சிதம்பரம் தெரிவித்தார்.