Breaking News Tamil LIVE:காமராஜர் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது- தீயணைப்பு படையினர் விரைந்தனர்.
Breaking News Tamil LIVE Updates: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.
LIVE
Background
Breaking News Tamil LIVE Updates: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.
தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் தலைமைச் செயலராக டாக்டர் பி.செந்தில்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே இவர் அதே துறையில் சிறப்புச் செயலராகப் பணியாற்றி வந்தார்.
37 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். எனினும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மைச் செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் மாற்றம் செய்யப்படவில்லை.
இந்த நிலையில் 37 ஐஏஎஸ் அதிகாரிகளைத் தமிழக அரசு நேற்று அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்தது. அந்த வரிசையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மைச் செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மைச் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மாற்றாக அந்த பதவியில் டாக்டர். பி.செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாற்றங்கள் என்னென்ன
கூட்டுறவுத்துறை செயலாளராக இருந்த முகமது நசீமுதீன், தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலராக மாற்றப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆணையராக தாரேஷ் அகமது நியமனம் செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்துத் துறை ஆணையராக எல்.நிர்மல் குமாரும், வணிக வரிகள் துறை ஆணையராக தீரஜ் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மண்ணியல் மற்றும் சுங்கத்துறை ஆணையராக ஜெயகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த சுகாதாரத்துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் குமார் யார் என்று கேள்வி எழுந்துள்ளது.
யார் இந்த செந்தில் குமார் ஐஏஎஸ்?
1968ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பிறந்தவர் செந்தில் குமார். பி.எஸ்சி., வேளாண் படிப்பை முடித்த இவர், அதே துறையில் முதுகலைப் படிப்பை முடித்தார். தொடர்ந்து பூச்சியியல் துறையில் முனைவர் பட்டத்தையும் பெற்ற இவர் டென்மார்க், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பொது நிர்வாகத்தில் பயிற்சி பெற்றுள்ளார்.
இவர் 1995 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். விழுப்புரம் கூடுதல் ஆட்சியர், திண்டுக்கல் ஆட்சியர், அரியலூர் ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை செந்தில் குமார் வகித்துள்ளார்.
முன்னதாக 2017ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு முதன்மைச் செயலாலராக / 3ஆவது செயலராக பி.செந்தில் குமார் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டார். அதேபோல மக்கள் மற்றும் மறுவாழ்வு நலத்துறை பொறுப்பு தலைமைச் செயலாளராகவும் செந்தில் குமார் இருந்தார்.
காமராஜர் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது- தீயணைப்பு படையினர் விரைந்தனர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த காமராஜர் சாலையில் கண்ணகி சிலை அருகே சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. மயிலாப்பூர் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயினை அணைத்தனர்.
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா...!
தமிழ்நாட்டில் நேற்று 249 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் இன்று கொரோனா பாதிப்பு 255 ஆக உயர்ந்துள்ளது.
#TamilNadu | #COVID19 | 13 June 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) June 13, 2022
• TN - 255
• Total Cases - 34,57,637
• Today's Discharged - 134
• Today's Deaths - 0
• Today's Tests - 12,081
• Chennai - 127#TNCoronaUpdates #COVID19India
வீழ்ச்சியை சந்தித்த பங்குச் சந்தைகள்- முதலீட்டாளர்கள் கவலை
மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 1456.74 புள்ளிகள் குறைந்து 52,846.70 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 427.40 புள்ளிகள் குறைந்து 15,774.40 புள்ளிகளாக உள்ளது.
Sensex plummets 1,456.74 points to end at 52,846.70; Nifty plunges 427.40 points to 15,774.40
— Press Trust of India (@PTI_News) June 13, 2022
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மருத்துவமனையில் ராகுல் காந்தி சந்தித்தார்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை ராகுல் காந்தி மற்றும் ப்ரியங்கா காந்தி ஆகியோர் சந்தித்தனர்.
Congress leaders Rahul Gandhi and Priyanka Gandhi Vadra their mother Sonia Gandhi at the Sir Ganga Ram Hospital
— Press Trust of India (@PTI_News) June 13, 2022
கொடுங்கையூர் காவல் மரண வழக்கில் மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு
கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி மரணமடைந்தது குறித்து மாநில மனித ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. சென்னை மாநகர ஆணையர் 4 வாரங்களில் பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் பாஸ்கரன் உத்தரவு