Breaking News LIVE : அக்.14-ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு
Breaking LIVE News: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
LIVE

Background
செல்வி அக்கா எனக்கு அவ்ளோ ஆறுதல் சொன்னாங்க - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
"கேப்டன் மறைவுக்கு செல்வி அக்கா எனக்கு அவ்ளோ ஆறுதல் சொன்னாங்க.. அவங்களால இந்த துக்கத்துல இருந்து மீளவே முடியல" முரசொலி செல்வம் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திவிட்டு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
Breaking News LIVE : முரசொலி செல்வம் மறைவு: கதறி அழுத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
முரசொலி’ நாளிதழின் நிர்வாக ஆசிரியரும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மருமகனுமான செல்வம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (அக்.10) காலமானார். அவரது உடல் கோபாலபுரம் வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மறைந்த முரசொலி செல்வத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முரசொலி செல்வம் உடலைப் பார்த்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டியணைத்து கதறி அழுதார்.
ரத்தன் டாடா உடலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா, மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மரியாதை!
மும்பை: தொழிலதிபர் ரத்தன் டாடா உடலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா, மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மரியாதை!
முரசொலி செல்வம் மறைவு: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருக்கமான பதிவு
"முரசொலி செல்வம் மாமா மறைவால் ஆற்ற முடியாத துயரில் தவிக்கும் கோடிக்கணக்கான தொண்டர்களில் ஒருவனாக உறைந்து நிற்கிறேன்... கலைஞர் போலவே நேர் வகிடு எடுத்துக்கொண்டு, கலைஞர் போலவே கையில் முரசொலியோடு வீட்டிற்கு வரும் செல்வம் மாமாவைப் பார்க்கும்போது கலைஞரையே பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படும், அப்படிப்பட்ட செல்வம் மாமா இனி வர மாட்டார் என்று நினைக்கும்போது நெஞ்சம் கலங்குகிறது" - மூத்த பத்திரிகையாளர் முரசொலி செல்வம் மறைவுக்குத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருக்கமான பதிவு
அக்டோபர் 14ம் தேதி சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
அக்டோபர் 14ம் தேதி சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. வங்கக் கடலில் உருவாகி உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, அரபிக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் மழைக்கு வாய்ப்பு. - பாலச்சந்திரன்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

