Breaking News Live | காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பில்லை - வானிலை ஆய்வுமையம்
Breaking News LIVE Tamil: இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள் உடனுக்குடன்..
LIVE
![Breaking News Live | காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பில்லை - வானிலை ஆய்வுமையம் Breaking News Live | காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பில்லை - வானிலை ஆய்வுமையம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/23/b812008c7e481df95e9d0b9c9824dd52_original.jpg)
Background
Breaking News LIVE Tamil:
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 3.1 கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி தமிழக கடலோரப்பகுதி வரை நீடிப்பதன் காரணமாக இன்று ஈரோடு, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.
தென்மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யயும். மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. அதேசமயத்தில், வங்கக்கடல் பகுதியில் அடுத்த 48 மணிநேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
பிட் காயினுக்கு தடை - மத்திய அரசு முடிவு
பிட் காயினுக்கு தடை - மத்திய அரசு முடிவு
பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து 25 எம்.எல்.ஏ.க்கள் எங்கள் கட்சியுடன் தொடர்பில் உள்ளனர் - அரவிந்த் கெஜ்ரிவால்
சேலம்: சிலிண்டர் வெடித்த விபத்தில் இதுவரை 2 பேர் உயிரிழப்பு
சேலம் கருங்கல்பட்டியில் சமையல் சிலிண்டர் வெடித்த விபத்தில் இதுவரை 2 பேர் உயிரிழப்பு
கட்டட இடிபாடுகளில் சிக்கிய ராஜலட்சுமி ஏற்கனவே உயிரிழந்த நிலையில், தீயணைப்பு வீரர் பத்மநாபனும் சடலமாக மீட்பு
தமிழ்நாடு முதன்மை மாநிலமாக வரும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவது வெகு தொலைவில் இல்லை
இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக வரும் என்ற நம்பிக்கை உள்ளது
கோவை முதலீட்டாளர்கள் மாநட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)