"நான் பாக்காத விமர்சனமா..."டிராகன் பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவிற்கு சிம்பு கொடுத்த செம அட்வைஸ்...
சமூக வலைதளங்களில் தன்னை விமர்சித்தவர்களுக்கு டிராகன் பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து கொடுத்துள்ள செம ரிப்ளை சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது

டிராகன்
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் திரையரங்கில் வெற்றிநடை போடுகிறது. ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்கியுள்ளார். கடந்த 21 ஆம் தேதி வெளியான இப்படம் பல பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றுள்ளது. இப்படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் ஆகிய இருவரின் மீதும் ரசிகர்களுக்கு பெரியளவில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது டிராகன்
காமெடி, ஆக்ஷன், ரொமான்ஸ், மற்றும் எமோஷன் ஆகிய அனைத்து எலக்மெண்ட்களும் சரியாக இணைக்கப்பட்டு, பக்கா கமர்சியல் படமாக உருவாக்கப்பட்டுள்ளது டிராகன். டிராகன் படம் வெளியாவதற்கு முன்பு இப்படத்தின் மீதும் படத்தின் இயக்குநர் மீதும் நிறைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. தற்போது படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அனைத்து விமர்சனங்களுக்கும் முற்றுபுள்ளி வைத்துள்ளார் இயக்குநர்.
சிம்பு கொடுத்த அட்வைஸ்
டிராகன் படம் வெளியாவதற்கு முன்பாக படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவை பலர் சோசியல் மீடியாவில் விமர்சித்தார்கள். இதற்கு செம ரிப்ளை ஒன்று கொடுத்துள்ளார் அஸ்வத் 'நிறைய பேர் சோசியல் மீடியாவில் என்னை திட்டினார்கள். இவன பாத்தாலே அடிக்கனும்போல இருக்கு...", 'இவனுக்கு என்ன இவ்ளோ ஓவர் கான்ஃபிடன்ஸ்' என பல விதமான கருத்துக்களை பதிவிட்டார்கள். இதுவே பழைய ஆளாக இருந்திருந்தால் நானும் அவர்களுடன் போய் சண்டை போட்டிருப்பேன். ஆனால் என்னுடய டீம் என்னை பொறுமையாக இருக்க சொன்னார்கள். முக்கியமாக சிம்பு என்ன பண்ணாததையா உன்ன பண்ண போறாங்க..பொறுமையா இரு நம்ம படம் பேசட்டும் என்று சிம்பு சொன்னார். என்னை திட்டியவர்கள் எல்லாம் இப்போது காணாமல் போய்விட்டார்கள். நிறைய பேர் எனக்கு ஆதரவாக பேசுகிறார்கள். கஷ்டப்பட்டு ஒருத்தன் மேல வந்தா அவனை திட்டுவதற்காக சிலர் இருக்கிறார்கள். நான் இந்த படம் முடித்து அடுத்து ஆறு மாதம் கழித்து தான் திரும்பி வருவேன். நான் நிறைய சம்பாரிக்கிறேன். ஆனால் இப்படி வெறுப்பை கக்குவது மட்டுமே வேலையாக நீங்கள் இருக்கிறீர்கள்" என அஸ்வத் மாரிமுத்து கூறியுள்ளார்
"Few people said 'Ivan Moonjiya paathave adikanum pola iruku' and said that i need wrack in the back🙁. After #Dragon release, where are those people now❓. I'm earning a lot, I will come only after 6 months, but what those people are doing"
— AmuthaBharathi (@CinemaWithAB) February 23, 2025
- Ashwath pic.twitter.com/Fqzn4s1Sci




















