மேலும் அறிய

72 வயது தாத்தா... மு.க.ஸ்டாலினை விமர்சனம் செய்த ஜெயக்குமார்

72 வயதில் தாத்தாவாக உள்ள ஸ்டாலின், அப்பாவாவதற்கு  முயற்சி செய்து கொண்டிருக்கிறார் - முன்னாள் அமைச்சர் பஜெயக்குமார் விமர்சனம்

கிரிக்கெட் போட்டி தொடக்கம்

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளை ஒட்டி சென்னை மயிலாப்பூரில் மாபெரும் கிரிக்கெட் விளையாட்டு போட்டியினை அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். தொடர்ந்து இளைஞர்களுடன் முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் ;

சமூகத்துக்கு பயன்படும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை புரட்சித்தலைவி ஜெயலலிதா பிறந்த நாளில் ஏழை எளிய மக்களுக்கு வழங்குவது அதிமுகவினரின் பண்பாகும். 

விளையாட்டு வீரர்களுக்கு எவ்வித சலுகைகளையும் , திட்டங்களையும் திமுக அரசு நடைமுறைப்படுத்தாததால், 
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் விளையாட்டு பிரிவு விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில் , இதுபோன்று நிகழ்ச்சிகளை அதிமுகவினர் செய்து வருகின்றனர். 

திமுக எதிராக பேசும் குரல்களை நசுக்கும் நோக்கத்தோடு அடக்குமுறை ஆட்சியை திமுக அரசு நடத்தி வருகிறது. திமுக அரசின் உண்மை நிலையை வெளிப்படுத்துபவர்கள் மீது கைது நடவடிக்கை எடுத்து , அடக்கு முறையை கையாள்வது தான் திமுக அரசின் சாதனை.

உதயநிதிக்கு சவால் விட்ட ஜெயக்குமார்

சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்தினால் மட்டும் போதாது, விளையாட்டு வீரர்களுக்கு அதிமுக அளித்தது போல் இட ஒதுக்கீடு போன்ற முக்கியத்துவத்தை திமுக அரசு கொடுத்துள்ளதா ?

நான்கு ஆண்டுகளில் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த உதயநிதி என்ன திட்டங்களை கொண்டு வந்தார் என்பதை வெளிப்படையாக பேசுவதற்கு உதயநிதி தயாராக ? 

மோடி get out , stalin go back  என மாறி மாறி சமூக வலைத்தளங்களில் பிரச்சாரங்கள் நடக்கிறது தவிர , விலைவாசி உயர்வு பற்றியோ, சட்டம் ஒழுங்கு சீர்கேடு பற்றியோ திமுக அரசு இதுவரை வாய் திறந்து பேசவில்லை. அரசுத் துறைகளில் பல லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ள நிலையில், அவற்றை நிரப்புவதற்கு ஸ்டாலின் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுகவும், பாஜகவும் இருவரும் அண்டர்ஸ்டாண்டிங்கில் இருப்பதால் மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுவதில்லை.

ஸ்டாலின் அப்பாவாக முயற்சி செய்கிறார்

கல்விக் கடணை ரத்து செய்வதாகவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதாகவும், டீசலுக்கு நான்கு ரூபாய் குறைக்கப்படும் என்றெல்லாம் வாக்குறுதி அளித்துவிட்டு எதையும் நிறைவேற்றாமல் இருக்கும் திமுக அரசு, சொல்லாததை எல்லாம் செய்ததாக சொன்னால் எப்படி நம்ப முடியும்.

72 வயதில் தாத்தாவாக உள்ள ஸ்டாலின், அப்பாவாவதற்கு  முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என்றும் முன்னாள் அமைச்சர் பி ஜெயக்குமார் விமர்சித்து உள்ளார். 

பள்ளி கல்வித்துறை குறித்தோ, உயர் கல்வித்துறை வளர்ச்சி குறித்தோ தேசிய அளவிலான பாராட்டுக்கள் எதுவும் இல்லாத நிலையில்,  தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், தமிழக முதலமைச்சரும் மாறி மாறி பாராட்டிக் கொள்வது ஏற்புடையது அல்ல.

பத்தாயிரம் கோடி ரூபாயை கொடுத்தால் கூட மும் மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என கூறும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், 15 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தால் ஏற்றுக் கொள்வாரா ? 

மும்மொழி கொள்கையை அமல்படுத்தியுள்ள மாநிலங்களில் வளர்ச்சி என்பது அதிக அளவில் இல்லை என கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் , தமிழகத்தில் இரு மொழி கொள்கை அமலில் இருப்பதால் தான்  40% மாணவர்கள் உயர்கல்வி பயிலும் அளவுக்கு மற்ற எந்த மாநிலத்திலும் இல்லாத வகையிர்,  தமிழகம் கல்வித்துறையில் வளர்ச்சி அடைந்திருக்கிறது.உலக அளவில் உயர் பொறுப்புகளில் இருக்கும் தமிழர்கள் அனைவருமே, இரு மொழி கொள்கையில் படித்து வளர்ந்தவர்கள்.

மு.க ஸ்டாலின் என்ன செய்தார்

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால்,  தாக்கப்படுவதை தடுக்க கடிதம் எழுதுவதை தவிர, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் என்ன செய்தார் ?

திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பொழுதெல்லாம் முத்தரப்பு பேச்சு வார்த்தையை திமுக அரசு நடத்தியது உண்டா ? தமிழக மீனவர்களை சிறை பிடிப்பதும், தாக்குவதும், மீனவர்களின் உடமைகளை சேதப்படுத்துவதும் தொடர்கதை ஆகி வரும் நிலையில், அவற்றை தடுக்க விடியா ஸ்டாலின் அரசு எந்த நடவடிக்கைகளையும் எடுக்க வில்லை. மீனவர்கள் மீது தாக்கப்படும் சம்பவங்கள் என்பது பத்து விழுக்காடாக இருந்த நிலையில், தற்போது 100 மடங்காக உயர்ந்து இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
TVS Star City Plus: பெத்த மைலேஜ்! 800 கி.மீ ரேஞ்ச்! டிஸ்க் பிரேக் வசதியுடன் TVS Star City Plus-ஐ மிஸ் பண்ணாதீங்க! முழு விவரம்
TVS Star City Plus: பெத்த மைலேஜ்! 800 கி.மீ ரேஞ்ச்! டிஸ்க் பிரேக் வசதியுடன் TVS Star City Plus-ஐ மிஸ் பண்ணாதீங்க! முழு விவரம்
Embed widget