Andhra Chlorine Leak : குளோரின் வாயு கசிவு...நீச்சல் பயிற்சியில் இருந்த 10க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மூச்சுத் திணறல்
ஆந்திராவில் நீச்சல் குளத்தில் குளோரின் வாயு கசிவு ஏற்பட்டதை அடுத்து 10க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் நீச்சல் குளத்தில் குளோரின் வாயு கசிவு ஏற்பட்டதை அடுத்து 10க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
அந்திரா மாநிலம் விஐயவாடா மாவட்டத்தில் உள்ள நகராட்சி நீச்சல் குளத்தில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். டிசம்பர் 11-ஆம் தேதி ஏலூரில் நடைபெறும் போட்டிக்காக 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். கடந்த 7ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு குளோரின் தொட்டியின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குளோரின் கசிவு ஏற்பட்டது. அப்போது நீச்சல் குளத்தில் பயிற்சியில் இருந்த 10க்கும் மேற்பட் மாணவர்கள் மயக்கம் ஏற்பட்டது.
இதனால் அவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மயக்கமடைந்த 10க்கும் மேற்பட்ட சிறுவர்களின் உடல்நிலை தற்போது நல்ல நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. முறையான பராமரிப்பு இல்லாமல் தான் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து போலீசார் உரிய விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
முன்னதாக, கடந்த அக்டோபர் மாதத்தில் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பொருத்தப்பட்ட குளோரின் சிலிண்டரில் இருந்து சிறிய அளவிலான குளோரின் வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் நகரின் மதர் இந்தியா காலனியில் உள்ள இத்கா ஹில்ஸ் பகுதியில் உள்ள மக்களுக்கு இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
நீச்சல் குளத்தை பராமரிப்பது எப்படி?
நீச்சல் குளம் மூடிய குளமா அல்லது திறந்த வகை குளமா என்பதை பொறுத்து நீரின் தன்னை மாறும். நீச்சல் குளத்தில் உள்ள நீர் சுத்தமாக இருக்க வேண்டும் இல்லையெனில் நோய் தொற்று பரவும் வாய்ப்பு இருக்கிறது. எந்த நீரை பயன்படுத்துகிறீர்கள் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.
மாதத்துக்கு ஒரு முறை நீச்சல் குளத்தின் நீரை மறு சுத்திகரிப்பு செய்ய வேண்டும். இல்லையெனில் நீரில் உள்ள பாக்டீரியாக்கள் புழுக்களாக மாறி, நீச்சல் குளத்தில் துர்நாற்றம் வீசும். மேலும், தக்க நிபுணர்களின் கருத்துப்படி குளோரின் போன்ற பொருட்களை நீரில் கலக்கலாம். ஃபில்டர்களை இயக்கும் தானியங்கி மோட்டார் களைக்கூட நீச்சல் குளத்திலிருந்து தள்ளி பாதுகாப்பான இடத்தில வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
Cyclone Mandous: சென்னைக்கு 270 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல்.. தொடரும் மழை.. லேட்டஸ்ட் அப்டேட்..
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

