இரவு நேரத்தில் தெரியாத பெண்ணுக்கு மெசேஜ்! ஜெயிலில் போட்ட நீதிமன்றம்! டைம் என்னன்னு தெரிஞ்சிக்கோங்க!
சராசரி நபரின் பார்வையில் இருந்து ஆபாசத்தை தீர்மானிக்க வேண்டும் என்று பிப்ரவரி 18 ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இரவு நேரத்தில் தெரியாத ஒரு பெண்ணுக்கு "நீ மெலிதாக இருக்கிறாய், மிகவும் புத்திசாலியாகவும், அழகாகவும் இருக்கிறாய், எனக்கு உன்னைப் பிடிக்கும்" போன்ற செய்திகளை அனுப்புவது ஆபாசமானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் மாநகராட்சி உறுப்பினருக்கு வாட்ஸ்அப்பில் ஆபாச செய்திகளை அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் தண்டனையை உறுதி செய்யும் போது கூடுதல் அமர்வு நீதிபதி டி.ஜி. தோப்ளே இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
சராசரி நபரின் பார்வையில் இருந்து ஆபாசத்தை தீர்மானிக்க வேண்டும் என்று பிப்ரவரி 18 ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதுகுறித்து நீதிமன்றம் கூறுகையில், “இரவு 11 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை புகார்தாரருக்கு "நீங்கள் ஒல்லியாக இருக்கிறீர்கள்", "நீங்கள் மிகவும் புத்திசாலியாக இருக்கிறீர்கள்", "நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்", "எனது வயது 40", "நீங்கள் திருமணமானவரா இல்லையா?" மற்றும் "எனக்கு உன்னைப் பிடிக்கும்" போன்ற படங்கள் மற்றும் செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன.
எந்த திருமணமான பெண்ணோ அல்லது அவரது கணவரோ இதுபோன்ற வாட்ஸ்அப் செய்திகளையும் ஆபாச புகைப்படங்களையும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். குறிப்பாக தெரியாத பெண்ணுக்கு இது போன்று அனுப்புவது குற்றம்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களுக்கு இடையே எந்த உறவும் இருந்ததாக எதையும் பதிவு செய்யவில்லை. அந்தச் செய்திகளும் செயலும் ஒரு பெண்ணின் அடக்கத்தை அவமதிப்பதாகும்.
முன்னதாக, 2022 ஆம் ஆண்டு மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இது எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இவ்வாறு உத்தரவிட்டார்.
இதனிடையே குற்றம் சாட்டப்பட்டவர் அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கில் நான் தவறாக சேர்க்கப்பட்டுள்ளேன் என தெரிவித்தார். இருப்பினும், நீதிமன்றம் அவரது வாதத்தை நிராகரித்தது. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியது.
மேலும், ”எந்தவொரு பெண்ணும் ஒரு குற்றம் சாட்டப்பட்டவரை பொய்யான வழக்கில் சிக்க வைத்து தனது கண்ணியத்தைப் பணயம் வைக்க மாட்டார்கள்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் அந்தப் பெண்ணுக்கு ஆபாசமான வாட்ஸ்அப் செய்திகள் மற்றும் படங்களை அனுப்பியதாக அரசு தரப்பு நிரூபித்துள்ளது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
"எனவே, குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணை நீதிமன்றத்தால் சரியாகக் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்" என்று அமர்வு நீதிபதி குறிப்பிட்டார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

