மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: நேற்று இத்தனை விஷயங்கள் நடந்ததா? முக்கிய நிகழ்வுகள் தலைப்பு செய்திகளாய் உங்களுக்காக..!
7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.
தமிழ்நாடு:
- தொடரும் கனமழை: கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், புதுச்சேரி மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்: அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை
- தமிழ்நாடு முழுவதும் 48 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்; காஞ்சிபுரம், விழுப்புரம் உட்பட 8 மாவட்ட எஸ்பிக்களும் அதிரடி மாற்றம்
- ரூ.1000 ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் விநியோகம் தொடங்கியது; தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக வழங்கினர்.
- நான்கரை ஆண்டுகால ஆட்சியில் மிகவும் துன்பப்பட்டேன்; கொஞ்சம், கொஞ்சமாக தவழ்ந்து முதலமைச்சர் ஆனேன் - எஸ்டிபிஐ மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
- இந்தியாவின் பொருளாதார சக்தியாக தமிழ்நாட்டை நிலைநிறுத்துவோம் - முதல்வர் ஸ்டாலின் உறுதி
- சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றுவரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் The Startup TN Pavillion பன்னாட்டு பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
- தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்
- நீலகிரியில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியா:
- பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் நீக்கம் - அந்நாட்டு அரசு உத்தரவு
- இந்தாண்டு ரோபோட் அனுப்பப்படும்; 2025ல் விண்வெளியில் இந்தியர்கள் பறப்பார்கள் - இஸ்ரோ தலைவர் பேட்டி
- கர்நாடகாவில் பட்டியலின இளைஞரையும், இஸ்லாமிய பெண்ணையும் 13 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- லட்சத்தீவு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஆதரவாக சினிமா பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- மத்திய பிரதேசத்தில் சட்டவிரோதமாக நடத்தப்பட்ட காப்பகத்தில் இருந்து 26 குழந்தைகள் காணாமல் போனது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஞானவாபி மசூதி தொடர்பாக இந்திய தொல்லியல் துறையின் ஆய்வறிக்கையின் நகலை தங்களுக்கு அளிக்க வேண்டி, இந்து தரப்பினர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
உலகம்:
- வங்கதேசத்தின் பிரதமராக மீண்டும் தேர்வு செய்யப்பட உள்ளார் ஷேக் ஹசீனா.
- சவுதி அரேபியா சென்ற ஸ்மிருதி ரானி; ஹஜ் யாத்திரைக்கான ஒப்பந்தம் கையெழுத்து.
- ஒரே நாளில் 90 பீரங்கி குண்டுகள் வீச்சு; வடகொரியா மீது தென் கொரியா குற்றச்சாட்டு.
- திபெத்தில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு.
- பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு; 4 பேர் உயிரிழப்பு, 3 பேர் படுகாயம்.
- ஜப்பான் நிலநடுக்கத்தால் 128 ஆக உயர்ந்த உயிரிழப்பு 124 மணிநேரத்திற்குபின் 90 வயது மூதாட்டி மீட்பு
விளையாட்டு:
- ப்ரோ கபடி லீக் : தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி புனேரி பல்டன்ஸ் அணி வெற்றி.
- மகளிர் டி20 போட்டி: 2வது டி20 போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா அணி.
- ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 அணி அறிவிப்பு: நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணியில் ரோஹித், கோலிக்கு இடம்
- ப்ரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
கிரிக்கெட்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion