மேலும் அறிய

மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டால் தான் தமிழக அரசுக்கு நல்ல பலன் கிடைக்கும் - எல்.முருகன்

”மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டால் தான் தமிழக அரசுக்கு நல்ல பலன் கிடைக்கும். எந்த இயற்கை பேரிடர் என்றாலும் சேவை மன்பானமையுடன் பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் எப்போதும் முன் நிற்கும்”

கோவை - பொள்ளாச்சி இடையே முன்பதிவு இல்லாத ரயில் சேவை துவக்க விழா கோவை ரயில் நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு, ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பங்கஜ் குமார் சின்கா, உதவி மேலாளர் சிவலிங்கம் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசுகையில், “தமிழகத்தின் தொழில்துறை பகுதிகளான கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, இப்பகுதிகளில் ரயில்வே துறை மேம்பாட்டுக்காக மத்திய அரசு சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். கோவை பொள்ளாச்சி இடையே இன்று துவக்கப்பட்டுள்ள இந்த ரயில் சேவை, வேலைக்காக தினந்தோறும் கோவை-பொள்ளாச்சி இடையே ரயிலில் பயணிக்கும் பொதுமக்களுக்கு பெரிதும் உதவும் எனக் குறிப்பிட்டார்.

மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டால் தான் தமிழக அரசுக்கு நல்ல பலன் கிடைக்கும் - எல்.முருகன்

இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது, ”கோவை - பொள்ளாச்சி இடையே முன்பதிவில்லா ரயில் சேவை வேண்டும் என்ற மக்களின் நீண்ட நாள் கோரிக்கை, ஒரே மாதத்தில் மிக வேகமாக மத்திய ரயில்வே அமைச்சரால் நிறைவேற்றி தரப்பட்டுள்ளது. இந்தாண்டு பட்ஜெட்டில் 6000 கோடி ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10 புதிய வழித்தடங்ககள் கொடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் வெறும் 800 கோடி ரூபாய் தான் 2009 முதல் 2014 ஆம் ஆண்டு வரை ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்டது. சென்னையில் இருந்து கோவைக்கும், சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. விரைவில் கோவையிலிருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம், உதகை, திருப்பூர், சேலம் உட்பட 75 ரயில் நிலையங்கள் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளன. உதயநிதி ஸ்டாலின் கருணாநிதி கிடையாது. இவர் அரசியலில் கத்துக்குட்டியாக இருக்கிறார். பக்குவப்பட்ட தலைவராக இருக்க வேண்டும். மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டால் தான் தமிழக அரசுக்கு நல்ல பலன் கிடைக்கும். எந்த இயற்கை பேரிடர் என்றாலும் சேவை மன்பானமையுடன் பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் எப்போதும் முன் நிற்கும். மத்திய அரசின் அனைத்து மீட்பு குழுக்களும் பேரிடரின் போது அனுப்பப்பட்டு உதவி செய்யப்பட்டது. அதேபோல் பொதுவாக பேரிடர் ஆய்வு செய்ய வரும் மத்திய அரசு குழு ஒரு வாரத்திற்கு பிறகு தான் வருவார்கள், இப்போது உடனடியாக வந்து ஆய்வு செய்துள்ளனர்' எனக் கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GT vs RCB LIVE Score: குஜராத் அணிக்காக அதிரடியாக விளையாடும்  தமிழ்நாட்டின் ஷாருக் - சுதர்சன் கூட்டணி; தடுக்க போராடும் RCB!
GT vs RCB LIVE Score: குஜராத் அணிக்காக அதிரடியாக விளையாடும் தமிழ்நாட்டின் ஷாருக் - சுதர்சன் கூட்டணி; தடுக்க போராடும் RCB!
விழுப்புரம்: தவறான அறுவை சிகிச்சை? கர்ப்பிணி பெண் உயிரிழப்பு: உறவினர்கள் சாலை மறியல்
விழுப்புரம்: தவறான அறுவை சிகிச்சை? கர்ப்பிணி பெண் உயிரிழப்பு: உறவினர்கள் சாலை மறியல்
Breaking Tamil LIVE: ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு எப்போதும் நீக்கப்படாது - உ.பி பரப்புரையில் அமித்ஷா
ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு எப்போதும் நீக்கப்படாது - உ.பி பரப்புரையில் அமித்ஷா
Prajwal Revanna: பல பெண்கள், 2000 ஆபாச வீடியோக்கள் : வெளிநாடு தப்பிச்சென்ற பாஜக வேட்பாளர் ப்ரஜ்வால் ரேவண்ணா?
பல பெண்கள், 2000 ஆபாச வீடியோக்கள் : வெளிநாடு தப்பிச்சென்ற பாஜக வேட்பாளர் ப்ரஜ்வால் ரேவண்ணா?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Samuthirakani Speech |’’சின்ன படங்களை எடுத்துட்டு போராட வேண்டி இருக்கு’’சமுத்திரக்கனி வருத்தம்Soori speech | Thambi Ramaiah Speech | Bala on Samuthirakani :   ”1000 மாற்றுத்திறனாளி குழந்தைகள்! உடனே ஓடிவந்த சமுத்திரக்கனி” பாலா உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GT vs RCB LIVE Score: குஜராத் அணிக்காக அதிரடியாக விளையாடும்  தமிழ்நாட்டின் ஷாருக் - சுதர்சன் கூட்டணி; தடுக்க போராடும் RCB!
GT vs RCB LIVE Score: குஜராத் அணிக்காக அதிரடியாக விளையாடும் தமிழ்நாட்டின் ஷாருக் - சுதர்சன் கூட்டணி; தடுக்க போராடும் RCB!
விழுப்புரம்: தவறான அறுவை சிகிச்சை? கர்ப்பிணி பெண் உயிரிழப்பு: உறவினர்கள் சாலை மறியல்
விழுப்புரம்: தவறான அறுவை சிகிச்சை? கர்ப்பிணி பெண் உயிரிழப்பு: உறவினர்கள் சாலை மறியல்
Breaking Tamil LIVE: ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு எப்போதும் நீக்கப்படாது - உ.பி பரப்புரையில் அமித்ஷா
ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு எப்போதும் நீக்கப்படாது - உ.பி பரப்புரையில் அமித்ஷா
Prajwal Revanna: பல பெண்கள், 2000 ஆபாச வீடியோக்கள் : வெளிநாடு தப்பிச்சென்ற பாஜக வேட்பாளர் ப்ரஜ்வால் ரேவண்ணா?
பல பெண்கள், 2000 ஆபாச வீடியோக்கள் : வெளிநாடு தப்பிச்சென்ற பாஜக வேட்பாளர் ப்ரஜ்வால் ரேவண்ணா?
PRESS, Police என தனிநபர் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை - போக்குவரத்து போலீசார் அதிரடி..!
PRESS, Police என தனிநபர் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை - போக்குவரத்து போலீசார் அதிரடி..!
TN Weather Update: வெயிலின் உக்ரம்.. 13 மாவட்டங்களில் 100 டிகிரி கடந்து பதிவான வெப்பநிலை.. எங்கெல்லாம் வெப்ப அலை இருக்கும்?
வெயிலின் உக்ரம்.. 13 மாவட்டங்களில் 100 டிகிரி கடந்து பதிவான வெப்பநிலை.. எங்கெல்லாம் வெப்ப அலை இருக்கும்?
தொடங்கியது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முன்பதிவு; எப்படி விண்ணப்பிக்கலாம்? எப்போது தேர்வு?
தொடங்கியது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முன்பதிவு; எப்படி விண்ணப்பிக்கலாம்? எப்போது தேர்வு?
Kamalhassan: மகளை மிஸ் பண்ணும்போது அப்பா கமல் இதைத்தான் பண்ணுவாராம்! - ஸ்ருதி உடைத்த உண்மை!
Kamalhassan: மகளை மிஸ் பண்ணும்போது அப்பா கமல் இதைத்தான் பண்ணுவாராம்! - ஸ்ருதி உடைத்த உண்மை!
Embed widget