மேலும் அறிய

TTF VASAN : சிறை பறவையாய் தொடரும் டி.டி.எஃப் வாசனின் வாழ்க்கை..! மீண்டும் 15 நாட்கள் ஜெயில்

2023 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி முதல் 2033 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி வரை அவரது உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

டிடிஎஃப் வாசன்  (TTF VASAN )

இருசக்கர வாகனத்தில் தொலைதூரப் பயணம் மேற்கொள்வது, உயர்ரக பைக்குகளில் சாகசங்கள் மேற்கொள்வது உள்ளிட்ட வீடியோக்களை யூடியூபில் பதிவு செய்து வருவது டிடிஎஃப் வாசனின் வாடிக்கையாக உள்ளது. இந்தநிலையில், டிடிஎஃப் வாசன் கடந்த 17ஆம் தேதி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியில் உயர்ரக பைக்கில் சென்று சாகசம் செய்ய முயன்று விபத்து ஏற்பட்டு காயமடைந்தார். கை முறிவு காயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு சென்ற நிலையில் பாலுசெட்டி சத்திரம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் டிடிஎஃப் வாசன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாசன் திருவள்ளூர் பூங்கா நகர் பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டில் தலைமறைவாக இருந்து வந்தார். இதனை அடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை விடியற்காலை டிடிஎஃப் வாசன் காஞ்சிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட வாசன் காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1இல் ஆஜர் செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். புழல் சிறைக்கு சென்ற வாசன் உடல்நிலை சரியில்லாததால், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

புழல் சிறையில் 

பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் கடந்த 19ஆம் தேதி காஞ்சிபுரம் பாலு செட்டி சத்திரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு ,  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அக்டோபர் 16 ஆம்  தேதி வரை அவரை சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில்,  இன்று மீண்டும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வாசன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இதனை அடுத்து வருகின்ற 30-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி மீண்டும் உத்தரவிட்டார்.

மூன்று முறை ஜாமீன் மனு தள்ளுபடி :

இந்தநிலையில் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் இரண்டு முறை ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்த டிடிஎஃப் வாசனை ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  இதனை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறைய செய்த டிடிஎப்  ஜாமீன் வாசன் ஜாமீன் மனு நேற்று முன்தினம் தள்ளுபடி செய்யப்பட்டது .

TTF VASAN : சிறை பறவையாய் தொடரும் டி.டி.எஃப் வாசனின் வாழ்க்கை..! மீண்டும் 15 நாட்கள் ஜெயில்

போக்குவரத்து துறை நடவடிக்கை

ஜாமீன் கோரி பலமுறை தாக்கல் செய்யப்பட்ட வாசனின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவரது ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் மாவட்ட வட்டார போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அதன்படி 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி முதல் 2033 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி வரை அவரது உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட உள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட வட்டார போக்குவரத்து துறை அறிவித்துள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  இது குறித்த காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தினகரன்  பிறப்பித்த உத்தரவு நகல் தற்போது வெளியாகி உள்ளது.  அதில்     வாசன்  மீது உள்ள பல்வேறு வழக்குகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.  சென்னை பெருநகர போக்குவரத்து கழகத்தில் 8  வழக்குகளும்,   ,  கோயம்புத்தூர், நீலகிரி,  கடலூர்  ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு வழக்கும்  இமாச்சல பிரதேசத்தில் ஒரு வழக்கும்  உள்ளதாக  குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Travis Head:
Travis Head: "இந்தியானாலே அடிப்பேன்" எப்படி போட்டாலும் அடிக்கும் டிராவிஸ் ஹெட் புது ரெக்கார்ட்!
Car Launch 2024: விதவிதமா, ரகரகமா..! 2024ல் இந்தியாவில் அறிமுகமான கார்கள் - எஸ்யுவி தொடங்கி  ஈவி வரை, இவ்வளவா?
Car Launch 2024: விதவிதமா, ரகரகமா..! 2024ல் இந்தியாவில் அறிமுகமான கார்கள் - எஸ்யுவி தொடங்கி ஈவி வரை, இவ்வளவா?
TAHDCO Loan Scheme: பெண்களுக்கான ஜாக்பாட் - ரூ.4.5 லட்சம் வரை கடன், 5.5% மட்டுமே வட்டி - யாருக்கு கிடைக்கும்?
TAHDCO Loan Scheme: பெண்களுக்கான ஜாக்பாட் - ரூ.4.5 லட்சம் வரை கடன், 5.5% மட்டுமே வட்டி - யாருக்கு கிடைக்கும்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Travis Head:
Travis Head: "இந்தியானாலே அடிப்பேன்" எப்படி போட்டாலும் அடிக்கும் டிராவிஸ் ஹெட் புது ரெக்கார்ட்!
Car Launch 2024: விதவிதமா, ரகரகமா..! 2024ல் இந்தியாவில் அறிமுகமான கார்கள் - எஸ்யுவி தொடங்கி  ஈவி வரை, இவ்வளவா?
Car Launch 2024: விதவிதமா, ரகரகமா..! 2024ல் இந்தியாவில் அறிமுகமான கார்கள் - எஸ்யுவி தொடங்கி ஈவி வரை, இவ்வளவா?
TAHDCO Loan Scheme: பெண்களுக்கான ஜாக்பாட் - ரூ.4.5 லட்சம் வரை கடன், 5.5% மட்டுமே வட்டி - யாருக்கு கிடைக்கும்?
TAHDCO Loan Scheme: பெண்களுக்கான ஜாக்பாட் - ரூ.4.5 லட்சம் வரை கடன், 5.5% மட்டுமே வட்டி - யாருக்கு கிடைக்கும்?
ADMK Meeting: சட்டை கிழியாமல்? பாட்டில் பறக்காமல்? இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு - அடக்குவாரா ஈபிஎஸ்?
ADMK Meeting: சட்டை கிழியாமல்? பாட்டில் பறக்காமல்? இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு - அடக்குவாரா ஈபிஎஸ்?
General Knowledge: இதெல்லாம் உண்மையா? இந்தியாவிற்கு இப்படி ஒரு பெருமையா? கூகுளின் வேகம் என்ன? எத்தனை ட்வீட்கள்?
General Knowledge: இதெல்லாம் உண்மையா? இந்தியாவிற்கு இப்படி ஒரு பெருமையா? கூகுளின் வேகம் என்ன? எத்தனை ட்வீட்கள்?
Breaking News LIVE: அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இரங்கல்
Breaking News LIVE: அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இரங்கல்
TN Rain Update: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, எங்கெல்லாம் கனமழை கொட்டும்? வானிலை அறிக்கை
TN Rain Update: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, எங்கெல்லாம் கனமழை கொட்டும்? வானிலை அறிக்கை
Embed widget