மேலும் அறிய

ஆடி வெள்ளிக்கிழமை..தங்கத்தேரில் ஜொலித்த காமாட்சி.. பக்தி பரவசத்தில் பக்தர்கள்..

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தங்க தேர் உற்சவம். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்க தேரினை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

ஆடிமாத இரண்டாவது வெள்ளிக்கிழமை ஒட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தங்க தேர் உற்சவம். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்க தேரினை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன்

காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : சக்தி தலங்களில் முதன்மையானதாக விளங்கும், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் அம்மனுக்கு உகந்த ஆடி மாத இரண்டாவது வெள்ளிக்கிழமை ஒட்டி தங்கத்தேர் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தங்கத்தேர் உற்சவத்தை ஒட்டி காஞ்சி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து மஞ்சள் நிற பட்டு உடுத்தி மல்லிகைப்பூ, சம்பங்கி பூ மாலைகள் அணிந்து, லட்சுமி, சரஸ்வதி, தேவிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் தங்கத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ஆடி வெள்ளிக்கிழமை..தங்கத்தேரில் ஜொலித்த காமாட்சி.. பக்தி பரவசத்தில் பக்தர்கள்..

பின்னர் மேளதாளங்கள் முழங்க உபயதாரர்கள், பக்தர்கள், தங்கத் தேரினை வடம்பிடித்து இழுத்துச்செல்ல காஞ்சி காமாட்சி அம்மன், கோவில் வளாகத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தங்கத்தேர் உற்சவத்தில் உள்ளூர், வெளியூர், வெளி மாவட்டம்,வெளி மாநிலம் என பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காஞ்சி காமாட்சி அம்மனை தரிசனம் செய்து வணங்கி வழிபட்டுச் சென்றனர்.

ஆடி வெள்ளிக்கிழமை..தங்கத்தேரில் ஜொலித்த காமாட்சி.. பக்தி பரவசத்தில் பக்தர்கள்..

ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்க ரதத்தின் வடம் பிடித்து இழுத்து கோவில் வளாகத்தில் சுற்றி வந்து ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் வழிபட்டு மகா தீபாராதனை காண்பித்து அருள் பெற்றனர். வெளியூர், வெளி மாவட்டம்,வெளி மாநிலம் என பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த திரளான பக்தர்கள் கலந்து  கொண்டு "ஓம் சக்தி, பராசக்தி" கோஷமிட்டு காஞ்சி காமாட்சி அம்மனை தரிசனம் செய்து வணங்கி வழிபட்டுச் சென்றனர்.

காஞ்சி காமாட்சி வரலாறு

காமாட்சி என்றால் கருணையும், அன்பும் நிறைந்த கண்களையுடையவள் என்றும் பொருள் உண்டு. இத்தகு பெருமைகளைத் தன்னகத்தே கொண்ட காஞ்சி மாநகரத்தில் அன்னை காமாட்சி தேவி எழுந்தருளிய சம்பவம் ஒரு ஆற்றல்மிக்க வரலாறாக விரிகின்றது. முன்னொரு காலத்தில், பந்தகாசுரன் என்ற ஓர் அசுரன் வாழ்ந்து வந்தான். அவன் மிகக் கடுமையான தவங்களை மேற்கொண்டு, பிரம்ம தேவரிடமிருந்து அரிய பல வரங்களைப் பெற்றிருந்தான்.

ஆடி வெள்ளிக்கிழமை..தங்கத்தேரில் ஜொலித்த காமாட்சி.. பக்தி பரவசத்தில் பக்தர்கள்..

அந்த வரங்கள் அளித்த சக்தியாலும், ஆணவத்தாலும் அவன் மூவுலகங்களையும் கைப்பற்றித் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பலவித துன்பங்களை உண்டாக்கி வந்தான். பந்தகாசுரனின் கொடுமைகள் நாள்தோறும் அதிகமாகி வந்ததால், அதிக துன்பமுற்ற தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று தங்கள் துன்பத்தைக் கூறி முறையிட்டார்கள். பிரம்மாவின் வரங்களைப் பெற்றதால் பந்தகாசுரன் மிகுந்த வலிமை பெற்றிருப்பதை உணர்ந்த சிவபெருமான், “அந்தப் பந்தகாசுரனை அழிக்கும் ஆற்றல் அன்னை பராசக்தி தேவிக்குதான் உள்ளது“ என்று கூறி, அவர்களைப் பராசக்தியிடம் அனுப்பி வைத்தார்.

ஆடி வெள்ளிக்கிழமை..தங்கத்தேரில் ஜொலித்த காமாட்சி.. பக்தி பரவசத்தில் பக்தர்கள்..

பந்தகாசுரனின் கழுத்தில் ஒரு பாதத்தையும், மார்பில் ஒரு பாதத்தையும் வைத்து, அவனது தலையை அறுத்து, ஒரு கையில் தூக்கிப் பிடித்தபடி காஞ்சிபுரம் வந்தடைந்தாள். உக்கிர கோப ரூபத்தில் வந்த அன்னையைக் கண்ட தேவர்களும், முனிவர்களும் பயத்தில் நடுங்கி மயங்கி வீழ்ந்தனர். அவர்களின் பயத்தைப் போக்க விரும்பிய அன்னை, உடனே, அழகிய பட்டாடை அணிந்த சிறு பெண்ணின் உருவத்தில், புன்னகை தவழும் முகத்துடன் அவர்களுக்குக் காட்சியளித்தாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
"ஆந்திராவின் சதாம் உசேன்" ஜெகன் மோகன் ரெட்டியை போட்டு பொளந்த சந்திரபாபு நாயுடு மகன்!
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nayanthara vs Meena | ’’ HEROINE நானா? மீனாவா?’’ATTITUDE காட்டிய நயன்தாரா மூக்குத்தி அம்மன் சர்ச்சைNeelima Rani : 4 கோடி கடன்! நடுத்தெருவில் நின்ற நீலிமா! காலைவாரிய சினிமா கனவுSenthil Balaji | செந்தில் பாலாஜி மூவ்.. டெல்லி சென்ற பின்னணி!சந்தித்தது யாரை தெரியுமா?Sunita williams Return | சுனிதாவை பாராட்டாத மோடி 2007-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் பின்னணி..! | Haren Pandya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
"ஆந்திராவின் சதாம் உசேன்" ஜெகன் மோகன் ரெட்டியை போட்டு பொளந்த சந்திரபாபு நாயுடு மகன்!
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
சுந்தர் பிச்சை உண்மையில் இந்தியில் பேசினாரா? வீடியோவின் பின்னணி!
சுந்தர் பிச்சை உண்மையில் இந்தியில் பேசினாரா? வீடியோவின் பின்னணி!
CSK vs KKR Final: சென்னை ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த மன்விந்தர் பிஸ்லா! மறக்க முடியுமா அந்த நாளை?
CSK vs KKR Final: சென்னை ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த மன்விந்தர் பிஸ்லா! மறக்க முடியுமா அந்த நாளை?
முறைகேடாக கட்டணம் வசூலித்த சுங்கச்சாவடிகள்.. சுளுக்கெடுத்த NHAI
முறைகேடாக கட்டணம் வசூலித்த சுங்கச்சாவடிகள்.. சுளுக்கெடுத்த NHAI
தமிழக அரசில் 1200 பணியிடங்கள்; விரைவில் சிறப்புத் தேர்வு- அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
தமிழக அரசில் 1200 பணியிடங்கள்; விரைவில் சிறப்புத் தேர்வு- அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
Embed widget