மேலும் அறிய
Advertisement
ஃபாஸ்ட்புட் கடையில் கத்திக்குத்து : சாப்பிட்டுவிட்டு பணம் கொடுப்பதில் தகராறு.. நண்பனை குத்திய இளைஞர்கள்
பாஸ்ட் புட் கடையில் இருந்த கத்தியை எடுத்து கோபால கிருஷ்ணன் மற்றும் குள்ளமணி ஆகிய இருவரும் விஜய்யை வெட்டியுள்ளார்
சென்னை வியாசர்பாடி பி.வி காலனி 30 ஆவது தெருவைச் சேர்ந்தவர் விஜய் (25). இவர் வியாசர்பாடி எம்.பி.எம் தெரு பகுதியில் உள்ள பாஸ்ட்புட் கடையில் உணவு அருந்த சென்றார். இவருடன் இவரது நண்பர்களான பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த கோபால கிருஷ்ணன் (26) மற்றும் மணி என்கின்ற குள்ளமணி (28) என மூன்று பேர் சென்றுள்ளனர். மூவரும் குடித்து விட்டு பாஸ்ட் புட் கடையில் அமர்ந்து சாப்பிட்டு உள்ளனர். சாப்பிட்டு முடித்தவுடன் யார் பணம் கொடுப்பது என்பதில் இவர்கள் 3 பேருக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பாஸ்ட் புட் கடையில் இருந்த கத்தியை எடுத்து கோபால கிருஷ்ணன் மற்றும் குள்ளமணி ஆகிய இருவரும் விஜய்யை வெட்டியுள்ளார்.
இதில் விஜய்க்கு இடது கை மற்றும் தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்து அவர்கள் ஓடிவிட்டனர். சிறிது நேரத்தில் விஜய் அதே இடத்திலேயே மயக்கமடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற எம்.கே.பி நகர் போலீசார் விஜயை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து பெரம்பூர் பாரதி சாலை பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (26) வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த மணியரசன் என்கின்ற குள்ளமணி (26) ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து எம்.கே.பி நகர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கொடுங்கையூரில் நடுரோட்டில் குடிபோதையில் பிறந்தநாள் கொண்டாட்டம் - கண்டித்த போலீசாரை தாக்க முயன்ற 3 பேர் கைது
சென்னை கொடுங்கையூர் காவல் நிலைய சரகம் கிருஷ்ண மூர்த்தி நகர் 1வது தெரு சந்திப்பில் ரோந்து வாகனத்தில் காவலர்கள் சக்திவேல் முருகன் , சரத் குமார் ஆகியோர் ரோந்து சென்றனர். அப்போது மார்ட்டின் என்பவரின் பிறந்த நாளைக் கொண்டாடி கொண்டு மது அருந்திக் கொண்டி இருந்தனர்.
கலைந்து செல்லும் படி எச்சரித்த போது, அவர்கள் வியாசர்பாடியை சேர்ந்தவரும், தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றும் மார்டின் (24) , கொடுங்கையூர் கலைச் செல்வன் (27) , வியாசர்பாடி ஜான் ஆல்வின் (23) ஆகிய 3 பேரும் போலீசாருடன் வாக்குவாதம் செய்து கல்லை எடுத்து போலீசாரின் வாகனத்தின் மீது எறிந்து போலீசாரை தாக்க வந்ததாகவும் , அங்கிருந்து சுமார் நூறு மீட்டர் பின் வாங்கிய பின்னர் சக காவலர்களை அழைத்து மேற்படி மூவரையும் கைது செய்து நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion