மேலும் அறிய
DGP Sylendrababu : திடீர் ஆய்வு.. சர்ப்ரைஸ் விசிட்.. செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு.. நடந்தது இதுதான்
காவல் நிலையத்தை முறையாக பராமரித்து வைத்திருந்த எழுத்தருக்கு ரூபாய் 5000 வெகுமதி வழங்கி பாராட்டினார்.
![DGP Sylendrababu : திடீர் ஆய்வு.. சர்ப்ரைஸ் விசிட்.. செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு.. நடந்தது இதுதான் Director General of Police Sylendrababu made a surprise visit to Semmanchery police Station today DGP Sylendrababu : திடீர் ஆய்வு.. சர்ப்ரைஸ் விசிட்.. செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு.. நடந்தது இதுதான்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/29/677cc6b50013aefa00df42948819e4c61669741171807109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
டிஜிபி சைலேந்திரபாபு
டிஜிபி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு
சென்னை அடுத்த செம்மஞ்சேரி காவல் நிலையதில் தமிழ்நாடு காவல்துறை தலைவர் C. சைலேந்திரபாபு தீடீர் ,ஆய்வு மேற்கொண்ட டிஜிபி காவல் நிலையத்தில் உள்ள சரித்திர பதிவேடுகள், குற்றம் சம்மந்தப்பட்ட பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார். மேலும் சமீபத்தில் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் என்ன மாதிரியான குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளீர்கள் என்றெல்லாம், காவல் ஆய்வாளர் நடராஜன் மற்றும் எழுத்தர் ராஜாமணியிடம் விசாரித்தார். பின்னர் காவல் நிலையத்தில் உள்ள உதவி ஆய்வாளர்கள், காவலர்களிடம் நிறை குறைகளை கேட்டறிந்து உடல்நலம் குறித்து நலம் விசாரித்தார்.
![DGP Sylendrababu : திடீர் ஆய்வு.. சர்ப்ரைஸ் விசிட்.. செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு.. நடந்தது இதுதான்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/29/26ec0a1ce213555e15035b1d6f45b7341669741151932109_original.jpg)
5000 பரிசு..
மேலும், அங்கு சமீபத்தில் கைது செய்யப்பட்டவர்களின் விவரங்கள் உள்ளிட்டவை குறித்து காவல் ஆய்வாளர் நடராஜன் மற்றும் எழுத்தர் ராஜாமணியிடம் விசாரணை செய்தார். அதன் பின்னர், காவல் நிலையத்தில் உள்ள உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களிடம் நிறை குறைகளை கேட்டறிந்தார். இதனையடுத்து காவல் நிலையத்தில் பதிவேடுகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டிருந்ததால் காவல் நிலைய எழுத்தர் ராஜாமணிக்கு ரூபாய் 5,000 வெகுமதி வழங்கினார்.
![DGP Sylendrababu : திடீர் ஆய்வு.. சர்ப்ரைஸ் விசிட்.. செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு.. நடந்தது இதுதான்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/29/677cc6b50013aefa00df42948819e4c61669741171807109_original.jpg)
குழு புகைப்படம்
இதையடுத்து, அங்குள்ள அனைவருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த ஆய்வின்போது பள்ளிக்கரணை துணை ஆணையர் ஜோஷ் தங்கையா, செம்மஞ்சேரி சரக உதவி ஆணையாளர் ரியாசுதீன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
தமிழ்நாடு
உலகம்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion