Music Director Thaman: பொண்ணுக மாறீட்டாங்க; ஆண்கள் கல்யாணம் பண்ணிக்காதீங்க... இசையமைப்பாளர் தமன் பேச்சால் சர்ச்சை!
ஆண்கள் யாரும் கல்யாணம் செய்து கொள்ள வேண்டாம் என்று இசையமைப்பாளர் தமன் பேசியது இப்போது சர்ச்சையாகி வருகிறது.

ஆந்திராவைச் சேர்ந்தவர் இசையமைப்பாளர் தமன். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதோடு பல படங்களில் பின்னணி பாடல்கள் பாடியிருக்கிறார். தெலுங்கில் வெளியான ஆல வைகுண்டபுரமுலோ படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது வென்றுள்ளார். ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சிந்தனை செய் என்ற படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான இவர், பின்னர் ஈரம், தில்லாலங்கடி, முன்தினம் பார்த்தேனே, மம்பட்டியான், ஒஸ்தி, வாலு, காஞ்சனா 2, ஈஸ்வரன், வாரிசு, கேம் சேஞ்சர் என்று பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது இசையில் வந்த வாரிசு படத்தில் இடம் பெற்ற ரஞ்சிதமே, ஜிமிக்கி பொண்ணு, வா தலைவா ஆகிய படங்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.
தற்போது சப்தம், தெலுசு கதா, தி ராஜா சாப், ஜாட், ஓஜி, அகாண்டா 2 ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இசையமைப்பாளரையும் தாண்டி தற்போது ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் உருவாகி வரும் இதயம் முரளி படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு இசையும் அமைத்துள்ளார். இதற்கு முன்னதாக பேபி ஜான் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் தான் திருமணம் குறித்து தமன் பேசியது இப்போது வைரலாகி வருகிறது. என்னைப் பொறுத்த வரையில் ஆண்கள் யாரும் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். காரணம், பெண்கள் யாரும் முன்பு போன்று இப்போது இல்லை. அவர்கள் மாறிவிட்டார்கள். யாருக்கும் அடிமையாக இருக்கவிரும்பவில்ல. அவர்கள் சுதந்திரமாக இருக்க ஆசைப்படுகிறார்கள். இன்ஸ்டாகிராம், ரீல்ஸ் தான் அதற்கு முக்கிய சாட்சி கொரோனாவிற்கு பிறகான காலகட்டம் முற்றிலும் மாறிவிட்டது. அவர்களுக்கு தான் இப்போது எல்லாமே சாதகமாக இருக்கிறது. ஆதலால் நான் யாரையும் திருமணத்திற்கு பரிந்துரைக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
தமன் பின்னணி பாடகியான ஸ்ரீவர்தினியை திருமணம் செய்து கொண்டார். இப்போது அவர்களுக்கு அச்யுத் என்ற ஒரு மகன் ஒருவரும் உள்ள நிலையில், நீங்கள் மட்டும் திருமணம் செய்து கொண்டு மற்றவர்களுக்கு இப்படி ஒரு அட்வைஸ் கொடுக்குறீங்களே என... காதலர் தினத்தை கொண்டாடும் இளசுகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

