China Vs America: எனக்கே வரி ஏத்துறியா.? இந்தா வாங்கிக்கோ... அமெரிக்க இறக்குமதிக்கு வரியை போட்டுத்தாக்கிய சீனா...
சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை ட்ரம்ப் அதிகரித்ததையடுத்து, அமெரிக்க இறக்குமதிகளுக்கு சீனாவும் வரியை போட்டு பதிலடி கொடுத்துள்ளது.

அமெரிக்காவில் இரண்டாவது முறையாக அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து, பல்வேறு அதிரடிகளை அரங்கேற்றி வருகிறார். அதன் ஒரு பகுதியாக சீனா, கனடா, மெக்சிகோ மீது புதிய வரிகளை விதித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சீனாவும் தற்போது அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு வரியை விதித்துள்ளது.
சீன பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்த ட்ரம்ப்
சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைபொருள் கடத்தல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். அதன்படி, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, ஏற்கனவே உள்ள வரியுடன் கூடுதலாக 10 சதவீதம் வரி விதித்து உத்தரவிட்டார். இந்த வரி விதிப்பு
கனடா, மெக்சிகோவிற்கான வரி விதிப்பு நிறுத்தி வைப்பு
இதனிடையே, கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 25 சதவீத வரியை நிறுத்தி வைப்பதாக நேற்று ட்ரம்ப் அறிவித்தார். அமெரிக்காவின் வரி விதிப்பை அடுத்து, கனடா மற்றும் மெக்சிகோவும் பதில் வரி விதிப்பதாக அறிவித்திருந்தன. எனினும், சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப் பொருள் கடத்தல்கள் தொடர்பான விஷயங்களில் நடவடிக்கை எடுப்பதாக இரு நாடுகளும் உத்தரவாதம் அளித்ததாவும், அதனால் மகிழ்ச்சியடைந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அந்நாடுகளுக்கான வரி விதிப்பை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைப்பதாகவும் தற்போது அறிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கு சீனா பதிலடி
கனடா, மெக்சிகோவிற்கான வரி விதிப்பை நிறுத்தி வைத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீனா குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. இதையடுத்து, சீனாவும் தற்போது பதில் வரியை போட்டு தாக்கியுள்ளது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு பொருட்கள் மீது 15 சதவீத வரியை விதிக்க சீனா திட்டமிட்டுள்ளதாகவும், இந்த வரி விதிப்பை அடுத்த திங்கட்கிழமை(10.02.25) முதல் அமல்படுத்த உள்ளதாகவும் சீன வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு சேர்த்து, கச்சா எண்ணெய், வேளாண் உபகரணங்கள், கனரக மற்றும் பிக்அப் ட்ரக் போன்ற வாகனங்கள் மீது 10 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல நாடுகளும் இப்படி மாறி மாறி வரி விதிப்பை மேற்கொண்டால், வர்த்தகப் போர் உருவாகும் என உலக நாடுகள் கருதுகின்றன. இதனால், அந்தந்த நாடுகளில் கடும் விலை ஏற்றம் ஏற்பட்டு, மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை மனதில் வைத்து, அமெரிக்கா மற்றும் சீனா செயல்பட வேண்டும் என வேண்டுகோள் எழுந்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

