இந்தியன் 2 படப்பிடிப்பு குழுவினருக்கும் கிராம மக்களுக்கும் வாக்குவாதம்..! நடந்தது என்ன ?
கல்பாக்கம் அருகே இந்தியன் 2 படப்பிடிப்பு குழுவினருக்கும் கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரம்மாண்ட படைப்பாக தயாராகி வரும் இந்தியன் 2 படத்தில் மீண்டும் இயக்குநர் ஷங்கர் ரசிகர்களை கவரும் வகையில் காட்சிகளை மிகுந்த பொருட்செலவில் தயாராகி வருகிறது. கடந்த 1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் “இந்தியன்”. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். அந்த காலக்கட்டத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இன்றளவும் பேசு பொருளாகவே உள்ளது.
இதனிடையே 22 ஆண்டுகள் கழித்து கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியன் 2 குறித்த அறிவிப்பு வெளியானது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அதுமட்டுமல்லாமல் காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், மறைந்த நடிகர் விவேக், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த் , பாபி சிம்ஹா,பஞ்சாபி நடிகர் யோக்ராஜ் சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இதனிடையே அவ்வப்போது இந்தியன் 2 அப்டேட் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.
படப்பிடிப்பில் விபத்து, கொரோனா ஊரடங்கு, கமல் அரசியலில் கவனம் செலுத்தியது, ஷங்கர்- லைகா நிறுவனம் இடையேயான கருத்து மோதல், படப்பிடிப்பில் விபத்து, கொரோனா ஊரடங்கு, கமல் அரசியலில் கவனம் செலுத்தியது, ஷங்கர்- லைகா நிறுவனம் இடையேயான கருத்து மோதல் ஆகியவற்றால் ஆகியவற்றால் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படம் உதயநிதி ஸ்டாலினின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் இந்த படத்தில் கமலுக்கு 7 வில்லன்கள் நடிக்கிறார்கள் என்பதை நேர்காணல் ஒன்றில் இயக்குநர் ஜி.மாரிமுத்து உறுதிப்படுத்தினார். அவர்கள் சமுத்திரகனி, பாபி சிம்ஹா, சித்தார்த், குரு சோமசுந்தரம், ஜி.மாரிமுத்து, ஜெயபிரகாஷ், கிஷோர் ஆகியோர் என சொல்லப்படுகிறது. மேலும் படப்பிடிப்பானது திருப்பதியிலும், பீகாரின் அடந்த வனப்பகுதியில் இதுவரை படப்பிடிப்பு நடக்காத இடங்களாக தேர்வு செய்து நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.