Game Changer Review: ஃபார்முக்கு வந்தாரா ஷங்கர்? நடிப்பில் மிரட்டிய ராம் சரண்.. கேம் சேஞ்சர் முழு விமர்சனம் இதோ
Game Changer Review in Tamil: ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 'தில்' ராஜு - ஷிரிஷ் இணைந்து தயாரித்த படம் 'கேம் சேஞ்சர்' திரைப்படம் எப்படி உள்ளது என்பதை இந்த தொகுப்பில் காண்போம்
Shankar
Ram Charan, Kiara Advani,S.J. Suryah, Sunil, Meka Srikanth
Theatre
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘கேம் சேஞ்சர்’. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் 50வது படமான இப்படத்தை 'தில் ராஜு மற்றும் ஷிரிஷ் இணைந்து தயாரித்துள்ளனர். ஆர்ஆர்ஆர் வெற்றிக்குப் பிறகு ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படம் எப்படி உள்ளது? இந்தியன் 2 தோல்விக்கு பிறகு சங்கர் கம்பேக் கொடுத்தாரா இல்லையா என்பதை இதில் காண்போம்.
கேம் சேஞ்சர் படத்தின் கதை:
ராம் நந்தன் (ராம் சரண்) ஒரு ஐஏஎஸ் அதிகாரி. விசாகாவுக்கு கலெக்டராக பணியமர்த்தபடுகிறது. அவர் பொறுப்பேற்றவுடன், ஊழல்வாதிகள் மற்றும் சட்டவிரோதமானவர்களுக்கு இரையாகிவிட்டார். ரேஷன் அரிசி-மணல் மாஃபியாவவில் ஈடுபவர்களுக்கு அறிவுரை கூறி வழிக்குக் கொண்டுவருகிறார் ஹீரோ ராம் சரண். ஆனால் இந்த மாஃபியா பின்னணியில் முதல்வர் சத்தியமூர்த்தியின் (ஸ்ரீகாந்த்) மகன் பொப்பிலி மோபிதேவி (எஸ்.ஜே. சூர்யா) மாஃபியாவின் பின்னணியில் உள்ளார்.
மணல் மாஃபியா விவகாரத்தில் ராம் நந்தனுக்கும், பொப்பிலி மோபிதேவிக்கும் இடையே மோதல் உருவாகிறது. ராம் நந்தன் போல் இருக்கும் அப்பண்ணா (ராம் சரண்) யார்? அவரது மரணத்திற்கு யார் காரணம்? அப்பண்ணாவின் மனைவி பார்வதியை (அஞ்சலி) பார்த்து திடீரென முதல்வர் அதிர்ச்சியடைந்தது ஏன்? தேர்தலில் என்ன நடந்தது? இறுதியாக என்ன நடந்தது? என்பதுன் தான் கேம் சேஞ்சர் படத்தின் மீதி கதையாகும்.
இதையும் படிங்க: Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
படம் எப்படி இருக்கு?
'இந்தியன் 2' படத்திற்குப் பிறகு, ஷங்கரின் எழுத்தும், இயக்கமும் குறைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் 'கேம் சேஞ்சர்' படத்தின் மூலம், அரசியல் பின்னணியில் நிகழும் கதைகளை இணைத்து கமர்ஷியல் படங்களை எடுப்பதில் ஷங்கர் மீண்டும் தான் ஒரு மாஸ்டர் என்பதை மீண்டும் நிரூப்பித்துள்ளார். ராம் சரண் போன்ற நடிப்பு இந்த படத்தில் மேலும் ஒரு படி உயர்ந்துள்ளது. படத்தில் சில இடங்களில் தொய்வு ஏற்படும் போது , ராம் சரணின் நடிப்பு படத்தைத் தாங்கி பிடிக்கிறது.
அப்பண்ணாவின் கேரக்டர் ராம் சரணின் கேரியரில் இன்னொரு மைல் கல்லாக நிற்கிறது. எமோஷனல் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். அஞ்சலி நடிப்பில் அப்லாஸ் அள்ளுகிறார். அஞ்சலியை இன்னும் பல வருடங்கள் தாங்கும் கதாப்பாத்திரமாக இருக்கும்.
எஸ்.ஜே. சூர்யா சூப்பர் வில்லன் கதாப்பாத்திரத்தில் மீண்டும் மிரட்டி எடுத்துள்ளார். அவரும் ராம் சரணும் பேசி கொள்ளும் காட்சிகளில் தியேட்டரில் விசில் பறக்கிறது.
இதையும் படிங்க: Game Changer Leaked: ஆன்லைனில் லீக்கான கேம் சேஞ்சர்.. அதிர்ச்சியில் படக்குழு.. கோபத்தில் ரசிகர்கள்
கார்த்திக் சுப்புராஜ் கொடுத்த கதையில் கமர்ஷியல் படத்திற்கு தேவையான டச் இருக்கிறது. ஆனால், புதுமை இல்லை. முன்பு ஷங்கர் இயக்கிய அரசியல் படங்களை பார்த்த ரசிகர்களுக்கு கதை புதிதாய் இருக்காது. ஆனால், ஷங்கர் தனது திரைக்கதையில் அந்தக் குறையை கண்ணுக்குத் தெரியாமல் செய்கிறார்.
மைனஸ் என்ன?
சரண், கியாரா அத்வானி இருவரின் காதல் காட்சிகள் படத்திற்கு வேகத்தடையாக உள்ளது. கிளைமாக்ஸ் காட்சிகளில் இன்னும் சிறப்பாக காட்சிப்படுத்தியிருந்தால் படம் இன்னும் மெருகேறி இருக்கும்.
மொத்தத்தில் இந்த பொங்கலுக்கு நல்ல ஒரு கமர்சியல் விருந்தாக இந்த கேம் சேஞ்சர் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.