மேலும் அறிய
”அவருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை..” மாஃபா குறித்து கே.டி. ராஜேந்திர பாலாஜி விளக்கம் !
கே.டி.ராஜேந்திர பாலாஜியை கண்டித்தும் மாஃபா பாண்டியராஜனுக்கு ஆதரவு தெரிவித்தும் விருதுநகர் மாவட்ட காமராஜ் நாடார் சமூக அறக்கட்டளை சார்பாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாஃபா பாண்டியராஜனுக்கு ஆதரவாக போஸ்டர்
Source : whats app
விருதுநகரில், முன்னாள் அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு மிரட்டல் விடுக்கும் தோனியில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியை கண்டித்தும் மாஃபா பாண்டியராஜனுக்கு ஆதரவு தெரிவித்தும் விருதுநகரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
விருதுநகரில் கடந்த 5ம் தேதி நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தின் போது ஒரே மேடையில் முன்னாள் அமைச்சர்களான கே.டி .ராஜேந்திர பாலாஜியும், மாஃபா. பாண்டியராஜனும் அமர்ந்திருந்தனர். அப்போது விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற தலைமைச் செயலாளர் நந்தகுமார் மேடையில் அமர்ந்திருந்த முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜனுக்கு பொன்னாடை போர்த்திவிட்டு கட்சியின் மாவட்ட செயலாளராக உள்ள கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு பொன்னாடை அணிவிக்க வந்த போது அதை தட்டிவிட்ட கே.டி ராஜேந்திர பாலாஜி அவரை கன்னத்தில் பளார் பளார் என தாக்கினார்.
மா.ஃபா.பாண்டியராஜன் விமர்சனத்தை முன் வைத்தார்
மாவட்ட செயலாளர் நான் இருக்கும் போது முதலில் யாருக்கு பொன்னாடை போர்த்த வேண்டும் என்பது தெரியாதா? உனக்கு, என அந்த நிர்வாகியிடம் ஆவேசம் அடைந்தார். இந்தச் சம்பவம் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவம் குறித்து குறுநில மன்னர் போல் கே.டி ராஜேந்திர பாலாஜி நடந்து கொள்வதாகவும், மேடையில் தனக்கு மட்டுமே பொன்னாடை போர்த்த வேண்டும் என்ற எழுதப்படாத விதிமுறையை வகுத்துள்ளதாகவும் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது மாபா பாண்டியராஜன் விமர்சனத்தை முன் வைத்தார்.
விருதுநகர் மாவட்ட காமராஜ் நாடார் சமூக அறக்கட்டளை சார்பாக நோட்டீஸ்
இதற்கு பதிலளிக்கும் வகையில் கடந்த 7ம் தேதி சிவகாசியில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் பேசிய கே. டி.ராஜேந்திர பாலாஜி, முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜனுக்கு மிரட்டல் விடும் பாணியில், மாவட்டச் செயலாளராக நான் இருக்கும்போது பல கட்சிக்கு சென்று விட்டு வந்தவருக்கு (மாஃபா பாண்டியராஜனுக்கு) பொன்னாடை போர்த்தினால் நான் எப்படி சும்மா விடுவேன். நீ செய்வதெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்க நான் ஒன்னும் பைத்தியக்காரன் அல்ல, தொலைத்துவிடுவேன் என மிரட்டல் விடுத்து பேசினார். இவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது விருதுநகரில் கே.டி.ராஜேந்திர பாலாஜியை கண்டித்து மாஃபா பாண்டியராஜனுக்கு ஆதரவு தெரிவித்தும் விருதுநகர் மாவட்ட காமராஜ் நாடார் சமூக அறக்கட்டளை சார்பாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜேந்திர பாலாஜி விளக்கம்
இந்நிலையில் மாஃபா பாண்டியராஜனுக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை, அவரைப்பற்றி நான் எங்கேயும் பேசவில்லை; பொதுவான சில விஷயங்களை பற்றி மட்டுமே பேசினேன்” என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - சொந்த இடங்களை அளக்க இனி கஷ்டப்பட வேண்டாம்.. வந்தாச்சு ஈசியான வழி.. முழு விபரம் இதோ !
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - மதுரையில் கெத்தா மாறும் ஏரியா..? 5 கோடி அப்பு.. என்னென்ன செய்யப்போறாங்க தெரியுமா?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















