Velmurugan: "2026-ல் தேர்தல்.. எங்கள் ஆதரவு இல்லாமல் முதலமைச்சர் ஆக முடியாது” வேல் முருகன் பேட்டி
Velmurugan: நம் தாய் மொழியை அழித்து இந்தி மொழியை திணிக்க நினைத்தால் 1965இல் நடைபெற்ற போராட்டம் போல் மீண்டும் நாடு சந்திக்கும் என பாஜக அரசுக்கு எச்சரிக்கை செய்கின்றோம் என வேல்முருகன் தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் இணைப்பு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய குடியரசு கட்சி, நாம் தமிழர், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 2000 பேர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். முன்னதாக விழா மேடைக்கு வருகை தந்த வேல்முருகனுக்கு மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டு, மாலை அணிவித்து வெள்ளி செங்கோல் பரிசளிக்கப்பட்டது.
இதனை படிங்க: திமுகவை வெளுக்கும் விஜய்.! வாய்வித்தையில் மட்டும் ஆடுது திமுக..திருமாவளவனை டேக் செய்த தவெக.!
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், "தமிழ் மக்கள் பேசுவதற்கு கூட தயாராக இல்லை. அதனால் தான் தமிழ் சமூகம் தனது வாழ்வுரிமையை இழந்து வருகிறது. 21 ஆம் நூற்றாண்டில் மனித குலம் எவ்வளவு பெரிய பேரழிவுகளை சந்தித்து இருக்கிறது. தமிழனுக்கு ஒரு நாடு வேண்டும், நேர்மையான ஆட்சி வேண்டும் என்ற தனித் தமிழீழம் கனவை பொசுக்கி உள்ளனர். மேட்டூர் அனல் மின் நிலையத்தில் தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மத்திய மாநில அரசுகள் குறைந்தபட்ச பேச்சுவார்த்தை நடத்த கூட தயாராக இல்லை. சேலம் இரும்பாலை, வெள்ளி கொலுசு தொழில், ஜவுளி தொழில் போன்றவற்றில் வட மாநிலத்தவரின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது என்றார்.

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவேன் என கூறுகிறது. வாட்டாள் நாகராஜ் மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்கவில்லை என்றால் கர்நாடகாவில் ஒரு தமிழர்கள் கூட வாழ முடியாது, தமிழ் திரைப்படம் கர்நாடகாவில் ஓடாது என மிரட்டுகிறார். சேலத்திலிருந்து எச்சரிக்கை செய்கிறேன் வீரப்பன் இருக்கும் வரை வாய் மூடி, இருக்குமிடம் தெரியாமல் இருந்தீர்கள் எல்லையை கூட எட்டிப் பார்க்க முடியவில்லை என்றும்
வீரப்பன் ஆயுதம் கொண்டு போராடினார். அந்த இடத்தை இட்டு நிரப்ப தமிழக வாழ்வுரிமை கட்சியில் ஏராளமான இளைஞர்கள் ஜனநாயகமாக போராடுவதற்கு இருக்கிறார்கள் ஒகேனக்கல் பகுதிக்கு வாட்டாள் நாகராஜ் போன்றோர் வருகிறார்களா எனப் பொறுத்திருந்து பார்ப்போம். தமிழ் மக்கள் உரிமைகளான காவிரி, முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு உரிமை பறிக்கப்படுகிறது. தென்பெண்ணை ஆற்றின் வழியாக பெங்களூருவின் கழிவுகளை அனுப்பி தமிழ் சமூகத்தின் ஆற்று நீர், மீன் பிடி உரிமைகள் தட்டிப் பறிக்கப்படுகிறது என்றார்.
இதையும் படிங்க: கர்ப்பிணி பெண்களுக்கு உணவு பரிமாறிய அமைச்சர்.. கூடவே அமர்ந்து சாப்பிட்ட நெகிழ்ச்சி சம்பவம்!
மேலும் இளம்பிள்ளையில் உள்ள கைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சூரத்திலிருந்து சேலைகள் இறக்குமதி செய்யப்படுகிறது. ஈரோட்டில் விளையும் மஞ்சளுக்கு நியாயமான விலை கேட்டால் மஞ்சள் வணிகத்தை குஜராத்திகள் கைப்பற்றி உள்ளனர்.
நெய்வேலியில் விளையும் முந்திரி மற்றும் தங்கம், வெள்ளி, இரும்பு, எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் பொருட்களின் தொழில்களை வட மாநிலத்தவர் கைப்பற்றியுள்ளனர் என்றார். தமிழ் மொழி நமது உயிரை விட மேலானது, மொழிக்காக உயிர் நீத்த இனம் தமிழினம். ஆனால் தற்போது நடிகர் விஜய், அஜித்திடம் சென்று நிற்கிறது. நயன்தாராவிற்கு சிலை வைக்கின்றனர். குஷ்புவிற்கு கோவில் கட்டுகின்றனர். தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும் என்று கூறினார்.

ஒன்றிய அரசு அலுவலகங்கள், விமான நிலையங்கள், கப்பல் துறைமுகங்கள், நெய்வேலி நிலக்கரி சுரங்கம், பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை கொடுக்காமல் வடமாநிலத்தவர்களுக்கு கொடுக்கின்றனர். தமிழர்களுக்கு அனைத்து தகுதிகள் இருந்தாலும் மத்திய அரசு வட மாநிலங்களில் இருந்து வேலைகளுக்கு ஆட்களை இறக்குமதி செய்கின்றனர் என்றார். சினிமாவில் 55 வயதில் 19 வயது இளம் பெண்ணுடன் நடனமாடுபவர்கள் இந்த நாட்டிற்கு முதலமைச்சராக, அமைச்சராக வேண்டும் என விரும்புகின்றனர்.
வீரப்பன் மகள் குறித்து எனக்கு வருத்தம் உண்டு மலைவாழ் மக்களால் கொண்டாடப்பட்ட காவல் அரணாக இருந்த வீரப்பன் வாரிசு யாருக்காகவோ பாலியல் பிரச்சனைக்காக காவல் நிலையத்திற்கு சென்று வீரப்பனின் தியாகத்தை கொச்சைப்படுத்தி இருக்கிறீர்கள்.
2026 ஆம் ஆண்டு தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஆதரவு இல்லாமல் யாரும் இந்த நாட்டின் முதலமைச்சராக வர முடியாது என்ற நிலையை உருவாக்குவோம். திமுக கூட்டணிக்குள் இணைவதற்கு முன்பாக 10 கோரிக்கைகளை தந்தேன் அதில் பிரதான கோரிக்கை தமிழக வேலை தமிழருக்கே என்பதுதான்,
மத்திய மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற இட ஒதுக்கீடு உரிமை போர் நடத்துவதற்கு நாம் கோட்டையை நோக்கி செல்ல அணியமாக வேண்டும்.
மும்மொழி மோசடி கொள்கை, இரு மொழி ஏமாற்றுக் கொள்கை, ஒரு மொழி கொள்கைதான் நம் தாய்மொழி கொள்கை, நம் மொழி நம் நாட்டில் ஆள வேண்டும். நம் தாய் மொழியை அழித்து இந்தி மொழியை திணிக்க நினைத்தால் 1965இல் நடைபெற்ற போராட்டம் போல் மீண்டும் ஒரு போராட்டத்தை நாடு சந்திக்கும் என பாஜக அரசுக்கு எச்சரிக்கை செய்கின்றோம் என்று கூறினார். மேலும் பேருந்து நிலையம், தேசிய நெடுஞ்சாலை, ரயில் நிலையம் போன்ற பகுதிகளில் இந்தி மொழியை எழுதுவேன் என கூறினால் இந்தி ஆதிக்கத்திற்கு எதிராக போராடுவோம், தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய கல்வி நிதி 2151 கோடி ரூபாய் தர மாட்டேன் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகிறார்.
இது யாருடைய பணம், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் செலுத்துகின்ற ஜிஎஸ்டி வரி மூலம் 100 ரூபாய் பெற்றுக் கொண்டு 29 ரூபாய் திருப்பி கொடுத்துவிட்டு 71 ரூபாய் கொள்ளை அடித்து செல்கிறீர்கள். தமிழ்நாட்டின் இயற்கை பேரிடர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான நிதி தர மறுப்பது கல்வி நிதியை தர மறுப்பது புதிய கல்விக் கொள்கையை திணிப்பது போன்றவற்றை நாங்கள் எதிர்க்கிறோம்.
இதையும் படிங்க: TVK in Trouble: ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து சிலர் பேசினார்கள் அதில் எனக்கு உடன்பாடு இல்லை ஏற்கவில்லை. அதனை கண்டிக்கிறேன் பங்காளி சண்டை வேண்டாம் கடந்து போவோம், என்றார்.
திமுகவில் மாவட்ட செயலாளர்களே குறுநில மன்னர்கள் போல இருப்பார்கள். எளிதில் அரசியலில் உயர விட மாட்டார்கள், தற்போது திமுக கூட்டணியில் தான் உள்ளோம் நாளை இந்த ஓட்டுக்கள் எல்லாம் உனக்கு தான் விழப்போகிறது. ஆனால் பேனர் வைப்பதற்கு இடையூறு செய்கின்றனர் என்று கூறினார்.





















