மேலும் அறிய

’மச்சி ஒரு டிரிப் போலாமா?’ (14) – ஆஃப் ரோடு ஜீப் சவாரி, அசத்தும் படகு சவாரி.. அட்டகாசமான தேக்கடி பயணம்..!

மேற்கு தொடர்ச்சி மலைகளில் பசுமை மாறாக் காடுகளுக்காகவும் சவான்னாப் புல்வெளிகளுக்காகவும் தேக்கடி புகழ் பெற்றது. ஆப் ரோடு ஜீப் சவாரி, யானை சவாரி, படகு சவாரி என குடும்பத்துடன் சுற்றுலா செல்ல உகந்த இடம்.

எங்கேனும் ஊர் சுற்ற வேண்டும். எந்த கவலையும் இன்றி காடு, மலை என சுற்றி வர வேண்டும். அதனால் மனதும், உடலும் புத்துணர்வு பெறும். புது அனுபவம் கிடைக்கும். புதிய உத்வேகம் அளிக்கும். அதனால் தான் குறிப்பிட்ட கால இடைவெளியில் எந்த இலக்கும் இன்றி ஊர் சுற்ற மனம் கிளம்பி விடுகிறது. அந்த வகையில் நான் ஊர் சுற்ற தேர்வு செய்த இடம், தேக்கடி.

தேக்கடி பயணம்

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான சுற்றுலா தலங்களுக்கும், மலை வாழிடங்களுக்கும் பல முறை சென்றாகி விட்டது. புதிதாக ஒரிடத்திற்கு செல்லலாம் என முடிவெடுத்தேன். உடனே மனம் கேரளாவிற்குள் ஊர் சுற்றச் சென்று விட்டது. அதற்கு அங்கு மனதை கொள்ளை கொள்ளும் இயற்கை ஏழில் கேரளாவில் கொட்டிக் கிடப்பதே காரணம். அதிலும் இடுக்கி மாவட்டம் இயற்கையின் ஆட்சி நடக்கும் பகுதி. அதனால் தேக்கடி நோக்கி பயணமானோம்.

’மச்சி ஒரு டிரிப் போலாமா?’ (14) – ஆஃப் ரோடு ஜீப் சவாரி, அசத்தும் படகு சவாரி.. அட்டகாசமான தேக்கடி பயணம்..!

தேக்கடி கேரளத்தின் பெரியாறு புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதி. இடுக்கி மாவட்டத்தில் உள்ள இவ்வூர், தேனி மாவட்டத்தில் தமிழக-கேரள எல்லைப் பகுதியான குமுளிக்கு அருகில் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் பசுமைமாறாக் காடுகளுக்காகவும் சவான்னாப் புல்வெளிகளுக்காகவும் தேக்கடி புகழ் பெற்றது. ஆப் ரோடு ஜீப் சவாரி, யானை சவாரி, படகு சவாரி என குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கும் உகந்த இடம்.

’மச்சி ஒரு டிரிப் போலாமா?’ (14) – ஆஃப் ரோடு ஜீப் சவாரி, அசத்தும் படகு சவாரி.. அட்டகாசமான தேக்கடி பயணம்..!

கோவையில் இருந்து தேனிக்கு கிளம்பும் போதே, அடை மழை வெளுத்து வாங்கியது. மழையால் பயணம் தடைபடுமோ என்ற அச்சம் ஒருபுறம் இருந்தாலும், துணிந்து மழையோடு தேனிக்கு சென்று விட்டோம். அங்கு எதிர்பார்ப்பிற்கு மாறாக மழை ஓய்ந்திருந்தது. அதனால் நிம்மதியாக குமிளி நோக்கி மேற்கு தொடர்ச்சி மலைகளில் பயணித்தோம். ஆங்காங்கே மழைச் சாரல் நனைந்தபடி வளைந்து நெளிந்து குமுளி மலையேறினோம். தமிழ்நாடு எல்லை முடிந்து கேரளா மாநிலம் வரவேற்றது. மாலை நேரமும், மழை நேரமும் சேர்ந்து கொண்டதால் நேரடியாக விடுதிக்கு சென்று விட்டோம். எல்லைப் பகுதி என்பதால் மொழிச் சிக்கல் இல்லை. குறைந்த கட்டணத்தில் விடுதி அறைகள் கிடைக்கின்றன. குமுளி இரவு மழையில் நனைந்தது.

’மச்சி ஒரு டிரிப் போலாமா?’ (14) – ஆஃப் ரோடு ஜீப் சவாரி, அசத்தும் படகு சவாரி.. அட்டகாசமான தேக்கடி பயணம்..!

மேலும் படிக்க : ’மச்சி ஒரு டிரிப் போலாமா?’ - மேகங்கள் ஆட்சி செய்யும் மேகமலை பயணம்..!

'மச்சி ஒரு டிரிப் போலமா?' ( பகுதி - 6) - ஆலப்புழாவில், மிதக்கும் படகு வீட்டு பயணம்..!

ஆப் ரோடு ஜீப் சவாரி

கரடு முரடான வனப்பாதையில் இயற்கை ஏழிலை கண்டு இரசிக்க ஆப் ரோடு ஜீப்  சவாரி இருக்கிறது. தங்கியிருந்த விடுதி நிர்வாகமே ஜீப் சவாரிக்கு ஏற்பாடு செய்து தரும். 4 மணி நேரம் ஜீப்பில் காடுகளுக்குள் பயணிக்கலாம். கட்டணத்திற்கு ஏற்ப பல வழித்தடங்களில் ஜீப் சவாரி இயக்கப்படுகிறது. இதமான குளுமையான சூழல் தவழ்ந்து கொண்டிருந்தது. ஜீப் மலைப்பாதையில் சீறிப் பாய்ந்தது. மலைகளை தழுவி நிற்கும் மேகங்கள், பசுமையான பள்ளத்தாக்குகள், பணப்பயிர்த் தோட்டங்கள் காட்சியளித்தது. அடை மழை காரணமாக பெரியாறு கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது.

’மச்சி ஒரு டிரிப் போலாமா?’ (14) – ஆஃப் ரோடு ஜீப் சவாரி, அசத்தும் படகு சவாரி.. அட்டகாசமான தேக்கடி பயணம்..!

ஜீப் தடம் மாறியது. தார் சாலையில் இருந்து ஒற்றையடி மண் பாதைக்குள் நுழைந்தது. வனத்தடத்தில் வளைந்து நெளிந்து மேடுகளின் வழியாக நீண்டு கிடக்கும் சரிவுப்பாதையில் ஜீப் ஏறியிறங்கியது. கரடு முரடான பாதையில் ஜீப் திக்கித் திணறி மேடேறியது. அலுங்கிக் குலுங்கி ஊர்ந்த ஜீப்போடு சேர்ந்து, உடலும் குலுங்கியது. குழியும் மேடாக, சேறும் சகதியுமாக இருந்தது. வழித்தடத்தை தவிர்த்த மற்ற இடமெங்கும் புல் வெளிகளாக இருந்தன. வழித்தடத்திலும் நீண்டு கிடந்த புற்களை ஜீப் உரசிச் சென்றது. பாதை செல்ல செல்ல சிரமங்களும் கூடிக் கொண்டே சென்றது.  

’மச்சி ஒரு டிரிப் போலாமா?’ (14) – ஆஃப் ரோடு ஜீப் சவாரி, அசத்தும் படகு சவாரி.. அட்டகாசமான தேக்கடி பயணம்..!

காடு, கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிந்து கிடந்தது. அடிவானம் வரை மலைகளும் புல்வெளிகளும்நீண்டிருந்தன. வளைந்து நெளிந்து செல்லும் சாலையில் மலைகளின் பின்னணியில் திரும்பும் இடமெல்லாம் எழிற்காட்சிகளாக விரிந்தன. மழையில் காடு பச்சை புத்தாடை உடுத்தியிருந்தது. சத்திரம் என்ற இடத்தில் ஜீப் நின்றது. இதுவரை அனுபவத்த சிரமங்களுக்கு மருந்து போடும் வகையில் அவ்விடம் இருந்தது. பனி பொழியும் காலைப் பொழுது, கருமேகங்கள் சூழ்ந்த வானம், நீண்டு கிடக்கும் மலைக் குன்றுகள். வானம் கீழ் இறங்கி வந்ததை போல மலைகளை மறைத்து ஓடும் வெண்ணிற மேகங்கள். பச்சை பசெலேன விரிந்து கிடக்கும் புல்வெளிகள் என மனதை கொள்ளை கொள்ளும் அற்புத காட்சியாக இருந்தது.  சபரி மலைக்கு செல்லும் பக்தர்கள் தங்கி இருந்து செல்லும் இடம் என்பதால், அவ்விடம் சத்திரம் என பெயர் பெற்றதாம். யானை உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி காண கிடைக்குமாம்.

’மச்சி ஒரு டிரிப் போலாமா?’ (14) – ஆஃப் ரோடு ஜீப் சவாரி, அசத்தும் படகு சவாரி.. அட்டகாசமான தேக்கடி பயணம்..!

மீண்டும் ஜீப் பயணம் துவங்கியது. ஜீப்களில் சுற்றுலா பயணிகள் குவிந்து கொண்டிருந்தனர். கியரை மாற்றி மாற்றி ஸ்டேரிங்கை சுற்றிச் சுற்றி ஜீப்பினை டிரைவர் ஓட்டினார். வழக்கம் போல மோசமான பாதையில் அலுங்கிக் குலுங்கிச் சென்றாலும், திரும்பிய பக்கமெல்லாம் இயற்கை அழகில் மனம் சொக்கிப் போனது. அடுத்தாக மவுண்டன் என்ற இடத்திற்கு சென்றோம். பார்க்கும் இடமெல்லாம் பச்சை நிற மலைகளை, வெண்ணிற மேகங்கள் தழுவிக் கொண்டு இருந்தன. அழகான இயற்கை சூழலில் சுற்றிச் சுற்றி போட்டோக்களை எடுத்து விட்டு கிளம்பினோம். அவ்விடத்தில் சிறிய ரக விமானங்களை கையாளும் வகையில் விமான நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. திரும்பிச் செல்லும் போது தார் சாலையில் ஜீப் சென்றதால், எந்த சிரமமும் இருக்கவில்லை.

’மச்சி ஒரு டிரிப் போலாமா?’ (14) – ஆஃப் ரோடு ஜீப் சவாரி, அசத்தும் படகு சவாரி.. அட்டகாசமான தேக்கடி பயணம்..!

மேலும் படிக்க : ’மச்சி ஒரு டிரிப் போலமா?’ பார்ட்-3: ‛நீலவானம்... நீயும். நானும்..’ நீலகிரி மலை இரயில் பயணம்

மச்சி ஒரு டிரிப் போலாமா?: தூவானம்... வனமே வானம்... 'சின்ன சிரபுஞ்சி' சின்னக்கல்லார் பயணம்!

தேக்கடி படகு சவாரி

தேக்கடி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது படகு சவாரி தான். பெரியாறு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஏரியில் படகில் சென்று வனத்தின் அழகை கண்டு ரசிக்க முடியும். படகு சவாரி செல்லும் பாதையில் யானை சவாரியும் இருக்கிறது. கும்கி யானைகள் மீது அமர்ந்து உலா வரலாம்.

’மச்சி ஒரு டிரிப் போலாமா?’ (14) – ஆஃப் ரோடு ஜீப் சவாரி, அசத்தும் படகு சவாரி.. அட்டகாசமான தேக்கடி பயணம்..!

படகு சவாரி செல்ல நமது வாகனங்களில் செல்ல அனுமதியில்லை. வனத்துறை வாகனங்களில் மட்டும் தான் செல்ல முடியும். நபர் ஒருவருக்கு 40 ரூபாய் கட்டணத்தில் அழைத்துச் செல்கின்றனர். படகு சவாரிக்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். நபர் ஒருவருக்கு 255 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

’மச்சி ஒரு டிரிப் போலாமா?’ (14) – ஆஃப் ரோடு ஜீப் சவாரி, அசத்தும் படகு சவாரி.. அட்டகாசமான தேக்கடி பயணம்..!

குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தான் படகுகள் இயக்கப்படுகின்றன. நமது நேரம் வரும் வரை காத்திருக்க வேண்டும். பெரியார், வன ஜோட்சனா, ஜலயத்ரா, ஜல ஜோதி என படகுகள் உள்ளன. ஏரியில் படகு மெதுவாக நகரத் துவங்கியது. மலைகளுக்குள் தேங்கியிருந்த தண்ணீரில் மெல்ல ஊர்ந்தது. நீல வானமும், பஞ்சு பறப்பது போன்ற வெண்ணிற மேகக்கூட்டங்களும், பசுமை போர்த்தியபடி நீண்டு கிடக்கும் மலைத் தொடர்களும், பல்லுயிர்கள் புகலிடமான வனப் பகுதிகளும் அழகாக காட்சியளித்தன. பல விதமான பறவைகள் காட்சி தந்தன. ஏரிக்கு நடுவே பட்டுப் போன மரங்களில் கூட பறவைகள் கூடு கட்டியிருந்தன.

’மச்சி ஒரு டிரிப் போலாமா?’ (14) – ஆஃப் ரோடு ஜீப் சவாரி, அசத்தும் படகு சவாரி.. அட்டகாசமான தேக்கடி பயணம்..!

இயற்கையின் அழகை இரசிப்பது மட்டுமின்றி வன விலங்குகளையும் பார்க்க முடியும். நாங்கள் சென்ற போது வனப் பகுதியில் இருந்து வந்த ஒற்றை காட்டு மாடு தண்ணீர் குடித்து சென்றது. மான்கள் கூட்டம் புல் வெளியில் மேய்ந்து கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. அதிர்ஷ்டம் இருந்தால் யானைகள் கூட்டமாக நீர் குடிக்க வருவதை பார்க்க முடியுமாம். ஒன்றரை மணி நேரம் போனதே தெரியவில்லை. மீண்டும் கரை திரும்பினோம். ஏரிக்கு நடுவே தங்குமிட வசதிகளும் உண்டு.

’மச்சி ஒரு டிரிப் போலாமா?’ (14) – ஆஃப் ரோடு ஜீப் சவாரி, அசத்தும் படகு சவாரி.. அட்டகாசமான தேக்கடி பயணம்..!

உடனடியாக ஊர் திரும்ப வேண்டியிருந்ததால், படகு சவாரியோடு அங்கிருந்து கிளம்பினோம். மழைக்கால மேகங்கள் சூழ்ந்து அடை மழை பொழிந்தது.

(பயணங்கள் முடிவதில்லை)

மேலும் படிக்க : மச்சி ஒரு டிரிப் போலமா? Part-5: ஊட்டிக்கு இந்த ரூட்டில் போயிருக்கீங்களா? இது வேற லெவல் ட்ரிப்!

’மச்சி ஒரு டிரிப் போலாமா?’ பார்ட் 2: இயற்கையின் பேரதிசயம் ‛நெல்லியம்பதி’ பயணம்

’மச்சி ஒரு டிரிப் போலாமா?’ Part-5 : அசர வைத்த அதிரப்பள்ளியும்.... ஆச்சரியப்பட வைத்த சாலக்குடியும்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
சிவப்பு சூட்கேஸில் கிடந்த இளம்பெண்ணின் உடல்.. பதறிய மக்கள்.. நெடுஞ்சாலையில் பரபரப்பு!
சிவப்பு சூட்கேஸில் கிடந்த இளம்பெண்ணின் உடல்.. பதறிய மக்கள்.. நெடுஞ்சாலையில் பரபரப்பு!
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
Thalapathy Rerelease :  ரஜினி பிறந்தநாளுக்கு செம ட்ரீட்...மீண்டும் வெளியாகிறது தளபதி
Thalapathy Rerelease : ரஜினி பிறந்தநாளுக்கு செம ட்ரீட்...மீண்டும் வெளியாகிறது தளபதி
Embed widget