மேலும் அறிய

Royal Enfield Upcoming Bike: EV பைக்.. 750 சிசி வண்டி.. 8 மாடல்களை இறக்கப்போகும் ராயல் என்ஃபீல்ட்!

மின்சார பைக், 350 சிசி, 450 சிசி, 750 சிசி திறன் கொண்ட பைக்குகள் என 8 புதிய மாடல் பைக்குகளை ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் அடுத்த 2 ஆண்டுகளில் அறிமுகப்படுத்த உள்ளது.

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் ராயல் என்ஃபீல்ட். இந்திய சாலையில் கம்பீரமாக செல்லும் இரு சக்கர வாகனமாக ராயல் என்ஃபீல்ட் திகழ்ந்து வருகிறது. இவர்களின் பல பைக்குகளும் வெற்றிகரமாக விற்பனையாகி வரும் நிலையில், வாடிக்கையாளர்களை கவர்வதற்காக புதிய ரக இரு சக்கர வாகனங்களைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

புதிய பைக்குகள்:

இதன்படி, எடை இலகுவாக நெருக்கடியான நகர்ப்புற போக்குவரத்திற்கு உகந்த வகையில் புதிய ராயல் என்ஃபீல்ட் இரு சக்கர வாகனத்தை இன்னும் சில மாதங்களில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர். இது மட்டுமின்றி ராயல் என்ஃபீல்ட் மின்சார பைக்கையும் விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளனர். 

மின்சார ராயல் என்ஃபீல்ட்:

அவர்களின் வெற்றிகரமான படைப்பான ஹிமாலயன் மாடல் பைக்கைப் போன்ற வடிவத்தில் இந்த மின்சார பைக் அறிமுகமாக உள்ளது. இதற்கான பணிகள் முழு மூச்சில் நடந்து வருகிறது. இது மட்டுமின்றி அதிக சிசி கொண்ட பைக்குகள் தயாரிப்பதிலும் ராயல் என்ஃபீல்ட் தனித்துவம் வாய்ந்த நிறுவனமாக உள்ளனர்.

648 சிசி பாரலல் ட்வின் எஞ்ஜின் கொண்ட புதிய புல்லட் 650 பைக்கையும் உருவாக்கி வருகின்றனர். இது 47 பிஎச்பி குதிரைத் திறனும், 52 என்எம் டார்க் இழுதிறனும் கொண்டதாக உருவாகி வருகிறது. 6 கியர்கள் கொண்டதாக இந்த பைக் உருவாகி வருகிறது. 

750 சிசி திறன்:

இதுமட்டுமின்றி 750 சிசி திறன் கொண்ட ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் 750 பைக்கையும் தயாரிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். நீண்டதூர பயணத்திற்கு மிகவும் ஒத்துழைக்கும் வகையில் இந்த வாகனத்தை அவர்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். மேலும், 450 சிசி திறன் கொண்ட எஞ்ஜின், 650 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்ட புதிய மாடல் ராயல் என்ஃபீல்ட் பைக்குகளைத் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்த புதிய ராயல் என்ஃபீல்ட் வாகனங்கள் அனைத்தும் இந்தாண்டு மற்றும் அடுத்தாண்டு சந்தையில் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது. இதன் விலை, சந்தையில் அறிமுகமாகும் நாள், திறன், சிறப்பம்சங்கள் குறித்து இனி வரும் நாட்களில் அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டே இருக்கும்.

இந்தியாவில் இரு சக்கரம் வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டிவிஎஸ், ஹோண்டா, பஜாஜ் போன்ற நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்காக பல வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

நெடுந்தூர பயணத்திற்காக உடல் அசதி தெரியாத வகையில் வாகனம் தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக ராயல் என்ஃபீல்ட் உள்ளது. ராயல் என்ஃபீல்டிற்கு போட்டியாக ஜாவா, ட்ரூம்ப் போன்ற நிறுவனங்கள் இருந்தாலும் ராயல் என்ஃபீல்டின் கம்பீரத்தை நெருங்குவது அவர்களுக்கு சவாலாக உள்ளது.

தலைப்பு செய்திகள்

Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
Embed widget