மேலும் அறிய

TN 12th Exam 2026: நாளை தொடங்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வு; ஏற்பாடுகள் தீவிரம்- முதல்வர் முக்கிய தகவல்!

Tamil Nadu 12th Exam 2026: 2026ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை (மார்ச் 2ஆம் தேதி) தொடங்கி, 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

மாநிலம் முழுவதும் மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் நடைபெறும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை (மார்ச் 2- திங்கட்கிழமை) முதல் தொடங்குகின்றன. மாநிலம் முழுவதும் தனித்தேர்வர்களுடன் சேர்த்து, 8,27,475 மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதவுள்ளனர். தினசரி காலை 10:00 மணி முதல் பிற்பகல் 01:15 வரை நடைபெற உள்ளது.

விரிவான ஏற்பாடுகள்

7,545 பள்ளிகள் உள்ள நிலையில், 3,412 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வில் காப்பி அடித்தல் உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுக்கவும், கண்காணிக்கவும் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இதற்கான பணிகளில் 4,540 கண்காணிக்கும் படைகள் உருவாக்கப்பட்டு உள்ளன.

தேர்வறைகளில் கண்காணிப்பாளர்களாக 44,624 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அதேபோல ஸ்கிரைபாக (சொல்வதை எழுதுபவர்) 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுக்கு 7,465 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னையில் எப்படி?

சென்னை மாவட்டத்தில் 578 அரசு / அரசு உதவி பெறும் / தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 30,663 மாணவர்கள், 33,696 மாணவிகள் ஆக மொத்தம் 64,359 மாணவர்களும் மற்றும் 3157 பேர் தனித் தேர்வர்களாகவும் 250 தேர்வு மையங்களில் (சிறப்பு தேர்வு மையம் மத்திய சிறை, புழல் உட்பட) தேர்வுகள் எழுத உள்ளனர். இத்தேர்வுகளுக்காக 5 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும், விடைத்தாள் சேகரிக்கும் மையங்களும், வினாத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல 65 வழித்தடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

முக்கிய விவரங்கள்

இத்தேர்வுப் பணியில் 250 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 250 துறை அலுவலர்கள், 550 பறக்கும் படை / நிலையான படை உறுப்பினர்கள், 4100 அறை கண்காணிப்பாளர்கள்/ சொல்வதை எழுதுபவர்கள் மற்றும் 1000 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஆக மொத்தம் 6150 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அனைத்து தேர்வு மையங்களிலும் தடையற்ற மின்சாரம், சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதற்கான முழுமையான ஏற்பாடுகளைப் பள்ளிக் கல்வித்துறை செய்து முடித்துள்ளது.

முதலமைச்சர் முக்கிய தகவல்

பொதுத்தேர்வை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நாளை பொதுத்தேர்வை எழுதவுள்ள பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும், எதிர்வரும் 11-ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் வாழ்த்துகள்! பதற்றமின்றித் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெறுங்கள்.

உங்களுக்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. உறுதியுடன் படித்திடும் உங்களுக்கு ஊக்கமளித்து உயர்த்திட நமது #DravidianModel அரசு இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், தேர்வு மையங்களில் எக்காரணத்தைக் கொண்டும் மின்தடை ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள மின்வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளார். மாணவர்கள் தேர்வு மையங்களுக்குச் சிரமமின்றிச் செல்ல வசதியாகப் போக்குவரத்துத் துறை சார்பில் கூடுதல் பேருந்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

மாணவர்கள் தேர்வு அறைக்குள் செல்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்களைக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் குறித்த நேரத்திற்கு முன்பாகவே தேர்வு மையத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

நீட் ரத்து செய்யக்கோரி மதுரையில் மாணவர்கள், கலைஞர்கள் மாபெரும் போராட்டம்!
நீட் ரத்து செய்யக்கோரி மதுரையில் மாணவர்கள், கலைஞர்கள் மாபெரும் போராட்டம்!
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
கழிப்பறை அடைப்பு: மாணவர்களையே பள்ளம் தோண்ட வைத்த எச்.எம்.- அதிர்ச்சி வீடியோ!
கழிப்பறை அடைப்பு: மாணவர்களையே பள்ளம் தோண்ட வைத்த எச்.எம்.- அதிர்ச்சி வீடியோ!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC SHOP : பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
Samsung Silicon-Carbon Battery: சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
iPhone 17 Price Hike: மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
Embed widget