Job Alert: மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணி; மாதம் ரூ.30,000 ஊதியம்; விண்ணப்பிப்பது எப்படி?
Job Alert: காஞ்சிபுரத்தில் அரசு அலுவகலத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு குறித்து முழு விவரத்தினை இக்கட்டுரையில் காணலாம்.
காஞ்சிபுரம் மாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருகிணைந்த சேவை மையத்தில் (One Stop Cenre) பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான வேலைவய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணபிக்க என்னென்ன தகுதிகள் வேண்டும் என இக்கட்டுரையில் காணலாம்.
இத்திட்டத்தில் தொகுப்பூதிய / ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கீழ்கண்ட தகுதிகள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் முக்கிய அம்சமாக மருத்துவ உதவி, ஆலோசனை, சட்டம், உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும் பயனடையும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.
பணி விவரம்:
- மைய நிர்வாகி (Centre Administrator)
- மூத்த ஆலோசகர் (Senior Counsellor)
- வழக்கு அலுவலர்கள்
- பன்முக உதவியாளர் (Multi Purpose Helper)
கல்வி மற்றும் பிற தகுதிகள்:
- மைய நிர்வாகி பணிக்கு சமூகப் பணி, உளவியல் ஆலோசகர் (Counselling Psychology) அல்லது மேலாண்மை வளர்ச்சியில் (Development Management) முதுகலை பட்டம் (Master's Degree ) பெற்றிருக்க வேண்டும்.
- பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் குறைந்தபட்சம் நான்கு ஆண்டுகள் அனுபவம் உடையவராகவும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப் பணிகளிலோ குறைந்தபட்சம் ஓராண்டு காலம் பணி அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும்.
- உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் சுழற்சி முறையில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டி இருக்கும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மூத்த ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்க மைய நிர்வாகி பணிக்கு சமூகப் பணி, உளவியல் ஆலோசகர் (Counselling Psychology) அல்லது மேலாண்மை வளர்ச்சியில் (Development Management) முதுகலை பட்டம் (Master's Degree ) பெற்றிருக்க வேண்டும்.
- சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.
- பன்முக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க பத்தாவது படித்திருந்தால் போதுமானது. ஏதாவது ஒரு அலுவலகத்துல் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
- மைய நிர்வாகி - ரூ.30,000
- மூத்த ஆலோசகர் - ரூ.20,000
- பன்முக உதவியாளர்- ரூ.6,400
வயது வரம்பு:
இதற்கு விண்ணப்பிக்க தகுதியான வயது வரம்பு குறித்து அறிவிப்பில் ஏதும் குறிப்பிடவில்லை.
தேர்வு செய்யப்படுவது எப்படி?
இந்த வேலைவாய்ப்பிற்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்த பதவிகளுக்கு உரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அலுவலகத்தில் நேரிடையாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
காஞ்சிபுரம் - 631 501
விண்ணப்பிக்க கடைசி தேதி - 22.05.2023