ரூ.2,54,800 சம்பளத்தில் வேலை.. தமிழ் எழுதப் படிக்க தெரியனும்.. விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் உள்ள நீதித்துறை உறுப்பினர் மற்றும் நீதித்துறை அல்லாத உறுப்பினர் ஆகிய பதவிகள் நிரப்பப்படுகிறது

Tamil Nadu State Consumer Disputes Redressal Commission Recruitment 2025 : தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் கீழ் தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் உள்ள நீதித்துறை உறுப்பினர் மற்றும் நீதித்துறை அல்லாத உறுப்பினர் ஆகிய பதவிகள் நிரப்பப்படுகிறது. இதற்கான அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆட்சேர்ப்பு பிரிவு வெளியிட்டுள்ளது.
பணியின் விவரங்கள்
நீதித்துறை உறுப்பினர் - 2
நீதித்துறை அல்லாத உறுப்பினர் - 2
வயது வரம்பு :
இப்பதவிகளுக்கு 01.07.2025 தேதியின்படி, விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகப்படியாக 40 வயது வரை இருக்கலாம். விண்ணப்பதார்கள் 02.07.1995 தேதிக்கு பின்னர் பிறந்திருக்கக்கூடாது.
தகுதிகள்:-
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்களுக்கு தமிழ் எழுதப் படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும். நீதித்துறை உறுப்பினர் பதவிக்கு மாவட்ட நீதிமன்றத்தின் தலைமை அதிகாரி பதவியில் அல்லது அதற்கு நிகரான பதவியில் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நீதித்துறை அல்லாத உறுப்பினர் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும், நுகர்வோர் விவகாரங்கள், சட்டம், பொது விவகாரங்கள், நிர்வாகம், பொருளாதாரம், வர்த்தகம், தொழில், நிதி, மேலாண்மை, பொறியியல், தொழில்நுட்பம், பொது சுகாதாரம் அல்லது மருத்துவம் ஆகியவற்றில் 10 ஆண்டுகள் அனுபவம் தேவை.
சம்பளம் :-
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.1,25,200 முதல் ரூ.2,54,800 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு பொது எழுத்துத் தேர்வு மற்றும் வைவா ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பொது எழுத்துத் தேர்வு இரண்டு தாள்கள் கொண்டு நடைபெறும். சென்னையில் தேர்வு மையம் அமைக்கப்படும். தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் வைவாவிற்கு அழைக்கப்படுவார்கள். 50 மதிப்பெண்களுக்கு viva-voce தேர்வு நடைபெறும். இறுதியாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்படும். தேர்வு செய்யப்படுபவர்கள் 4 வருடத்திற்கு பணியமர்த்தப்படுவாரக்ள்.
விண்ணப்பிக்கும் முறை
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.mhc.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக பதிவு செய்து பின்னர் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு கட்டணமாக ரூ.2,500 செலுத்த வேண்டும். தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் உள்ள இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கான விவரங்களை அறிந்துகொள்ளலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

